வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள்
வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள்
வீடு வாங்க லட்சக்கணக்கான தொகையை மொத்தமாக புரட்ட முடியாது என்பதாலும், திரும்பக்
கட்டும் மாதத்தவணைக்கு வட்டி மற்றும் அசலில் வரிச்சலுகை கிடைக்கி றது என்பதாலும் பலர் வீட்டுக்கடன் வாங்கி இருக்கி றார்கள். இந்த வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்கவே பலரும் விரும்புகிறார்கள்.
இந்தியாவில் 15, 20ஆண்டுகளுக்கு என வீட்டுக்கடன் வாங்கி இருந்தாலும் அதனை சராசரியாக எட்டு ஆண்டுகளில் கட்டி முடித்துவிடுவதாக புள்ளி விவர ங்கள் தெரிவிக்கின்றன.
வீட்டுக் கடனை தேர்ந்தெடுத்த காலம் வரை கட்டினால், கட்டும் வட்டி அதிகமாக இருக்கும். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்க்கலாம்.
* கடன் தொகை ரூ. 25 லட்சம்
*திரும்பக்கட்டும் காலம் 30 ஆண்டுகள் (360 மாதங்கள்)
* வட்டி: 10%
* மாதத் தவணை ரூ. 21,939
இங்கே வாங்கும் கடனோ ரூ.25 லட்சம் தான். ஆனால், அதற்கு கட்டும் வட்டியோ ஏறக்குறைய ரூ.54 லட்சம். (பார்க்க: அட்டவணை 1)
இப்படி கடைசி வரைக்கும் கடனைக் கட்டுவதற்கு பதில் சில உத்திகளைப் பின்பற்றி வட்டியைக் கணிசமாக மிச்சப்படுத்தலாம். அவை பற்றி…
(1) மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை அதிகரித்துக் கட்டுதல்!
மாதத் தவணை ரூ.21,939 என்பதற்கு பதில் கூடுதலாக மாதம் ரூ.3,061 அதிகரித்து ரூ.25,000 ஆக கட்டி வந்தால், வீட்டுக் கடன் 360 மாதங்களுக் கு பதிலாக 216-வது மாதத்திலே முடிந்துவிடும். இங்கே வட்டிக்காக செல் லும் தொகை ரூ.29 லட்சம்தான். அதாவது, மாதம் ரூ.3,061 அதிகரித்து கட் டுவதன்மூலம் வட்டியில் ரூ.25 லட்சம் மிச்சமாகும்.(பார்க்க: அட்டவணை 2)
(2) ஆண்டு தோறும் தவணை அதிகரித்து கட்டுதல்!
முதல் ஆண்டு மட்டும் ஆரம்பத்தில் கட்டும் வீட்டுக்கடனுக்குரிய தவணை யை கட்டி விட்டு, அதன்பிறகு ஆண்டுதோறும் ஒருகுறிப்பிட்ட தொகை யை அதிகரித்து வரும்பட்சத்தில் வட்டி கணிசமாக மிச்சமாகும். அதாவது , முதல் ஆண்டு தவிர, அடுத்துவரும் ஆண்டுகளில் தவணையை மாதம் ரூ.5,000 வீதம் அதிகரித்து கட்டிவந்தால், வீட்டுக்கடன் 360மாதங்களுக்கு பதில் 103 மாதங்களிலேயே முடிந்துவிடும். இங்கே வட்டிக்கு செல்லும் தொகை சுமார் ரூ.15 லட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.38.5 லட்சம் மிச்ச மாகும். (பார்க்க: அட்டவணை 3)
(3) ஆண்டுதோறும் கூடுதல் தொகை கட்டுதல்!
வீட்டுக்கடன் தவணை தொகையை அப்படியே கட்டிவரும் நிலையில் இர ண்டாம் ஆண்டு முதல் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை அதிகரித்து வருவது மூலமும் வீட்டுக் கடனுக்கான வட்டியில் கணிசமாக ஒரு தொ கையை மிச்சப்படுத்த முடியும். உதாரணமாக ஒருவர், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கூடுதலாக அசலைக் கட்டிவருகிறார் என்றால், அவரது கடன் 159- வது மாதத்தில் முடிந்துவிடும். இங்கே வட்டிக்கு செல்லும் தொகை ரூ.19.21 லட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.34.77 லட்சம் மிச்சமாகும். (பார்க்க : அட்டவணை 4)
உங்களுக்கு ஏற்ற வழிமுறைகளை பின்பற்றி வீட்டுக் கடனை விரைந்து அடைக்க முயலுங்கள்!
சா.ராஜசேகரன்,
நிதி ஆலோசகர், புதுச்சேரி.
(விகடனில் எழுதியது)
v
v
இதன் கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யவும்
Simple but very usefull
தவறுகளும் முறன்பாடுகளும் நிறைந்த மோசடி கட்டுரை.
வட்டியற்ற வர்த்தகம்/வீட்டுக்கடன் உள்ளிட்ட இஸ்லாமிய வங்கியியலை ஆய்வு செய்து கொண்டு வாருங்கள்.
தவறுகளும் முரண்பாடுகளும் நிறைந்த மோசடி கட்டுரை.
— என்று ஒற்றை வரியில் சொன்னால் பத்தாது. அதில் எங்கே தவறு இருக்கிறது. எப்படி தவறு நேர்ந்திருக்கும் என்பதை விவரமாக தெரிவியுங்கள் சகோ.
மேலும் நீங்கள் குறிப்பிட்ட வரிகளில் பிழையான தவறாக எழுத்த்துக்களை பயன்படுத்தி யிருக்கிறீர்களே சகோ. முதலில் தவறுகளும் பிழைகளும் நேராமல் எழுத பழகுங்கள்.
நன்றி சா. ராஜசேகரன் ஐயா
I read your article on home loan. Please give your email id. I want to ask you for an investment advice. Thanks.
vidhai2virutcham@gmail.com
in hdfc you cant pay extra amount monthly the system wont accept, you can pay 3 times of your emi. we already enquired about this.
நீங்கள் கூறுவது உண்மை…. ஆனால் 100% இது பொதுவுடைமை வங்கிகளில் மட்டுமே சாத்தியம்…. தனியார் வங்கிகளில் நீங்கள் சொன்ன அளவிற்கு லாபம் இருக்காது…
அய்யா நான் ரொப்கோ வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியிருக்கிறேன். ஆர் பீ ஐ வட்டி குறைத்துள்ளது. ஆனால் நாங்கள் வாங்கிய கடனுக்கு வட்டி குறைக்க மாட்டேன் .
இதற்கு என்ன செய்ய வேண்டும்.
Supper sir
Very good suggestion will follow the same.
LIC housing loan இது பொருந்துமா ?
Nice info..is it applicable for HDFC? If not, what is the Alternative solution to settle the amount earlier in HDFC
good information thank you
is it applicable for hdfc housing loan.
Sir, Thanks for your Information. Is it possible you to Provide a standard calculator for this. Will help us to identify how much we should contribute extra fund towards our housing loan
A very useful information.
Nice one…whether this method of repayment applicable to auto loans also? Please clarify. thank you
This facility in not available in all banks
Nice info…. is there any option to know how much ASAL is remaining for us to pay to the bank?
25000.00 கட்ட முடியாததால், தவனை நீட்டிப்பு செய்துள்ளனர்
If 40 lack of loan how I would pay the EMI every month which is best
இன்று பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கும் பொருள், மற்றும் நமது இன்றைய நமது சம்பளம் இன்னும் பத்தாண்டுக்கு பிறகு சில மடங்கு உயரும். இதற்குப்பெயர் வியாபார ரீதியில் வட்டி. இதற்கெல்லாம் மத சாயம் பூச வேண்டாம் திருவாளரே. எவ்வளவு காலதாமதம் எடுத்துக்கொள்கிறீரோ அதற்கேற்ப அடிப்படைத்தொகைக்கு மொத்த தவணைக்காலத்திற்கு வட்டி கணக்கிட்டு நாம் கட்டும் தவணைத்தொகையைக்கழித்து தவணைத்தொகையைக்கணக்கிடுவர். நாம் முழுப்பணம் கட்டினால் வட்டியே வராது. நமது வரமானத்திற்கேற்ப பட்ஜெட் போட்டால் அதற்கேற்ற வட்டி கட்டித்தான் தீரவேண்டும். வட்டியை குறைக்கிறேன் என்று வேறு ஒரு கடன் வாங்காமல் இருந்தால் சரி.நன்றி.
http://emicalculator.net/
Enter your principal outstanding, Rate of interest, If you enter the amount of EMI you want to pay, it will show the balance tenure. If you enter the balance tenure you want to complete the loan, it will show the EMI needed. I made the best combination on my loan using this site. This works for all banks loan for floating rate interest. Any banks will disclose the principle outstanding if you made request.
மிகவும் பயனுள்ளவை
Very perfect.