Wednesday, March 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் கைமேல் லாபம் பார்க்க‍லாம்?

உங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் கைமேல் லாபம் பார்க்க‍லாம்?

உங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் கைமேல் லாபம் பார்க்க‍லாம்?

ஒருவரது இராசி நட்சத்திரத்தை வைத்து அவரது வாழ்க்கை, உடல்நலம், உறவுகள் மற்றும் தொழில் குறித்த

தகவல்களை அறிய முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.

ஆரம்பக் காலக்கட்டத்தில் மனிதர்கள் செய்த ஒரே தொழில் உழவுமட்டும் தான் . அதிலிருந்து படிப்படியாக முன்னேறி இன்று ஒருவரே பல தொழில் செய்து முன்னேறும் அளவிற்கு உளவியல் மற்றும் அறிவியல் ரீதியாக மனிதர்கள் இன்று உயர்ந்து நிற்கின்றனர்.

ஒவ்வொரு ராசி காரர்களுக்கும் ஓர் பொது வான குணாதிசயங்கள் இருக் கும் என்று நம்பப்படுவதைபோல தான் இதுவும். நமது குணாதிசயங்கள் நமது உடல்நலம், உறவு மற்றும் தொழிலுடன் ஒத்துப் போகும்.

எனவே, இதனடிப்படையில்தான் ஒவ்வொ ரு ராசிக்காரர்களுக்கும் அவர்களது இராசி க்கு ஏற்ப சில பொதுவான அடிப்படை தொ ழிலில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. அவற்றை பற்றி இனி க் காண்போ ம்…
 
1)  மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இலட்சியம், உறுதி, இயக்கநிலை மற்றும் வெளிப்ப டையாக பேசுதல் போன்றவற்றில் சிறந் து காணப்படுவார்கள். வெளியிடங்களுக்கு சென்று வருதல், ஆக்டிவாக இருப்பது போ ன்றவற்றில் துடிப்புடன் இருக்கும் இவர்கள் காவல், ஊடகம் போன்ற துறையில் சிறந்து விளங்குவார்கள்.
 
3) ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் கடினமாகஉழைக்கும் மனோ பாவம் கொண்டுள்ளவர்கள். மேலும் நிலையான வாழ்க்கையை விரும்பும் குணம் கொண்டவர்கள். பொறியியல், கணக்காளர், கணினிசார்ந்த வேலை கள், வழக்கறிஞர், மருத்துவம் போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

3) மிதுனம்

இவர்கள் ஒரே இடத்தில் அன்றாடம் செய்யும் சலி ப்பான வேலைகளை செய்வதில் நாட்டம் காண் பிக்கமாட்டார்கள். வெளியிடங்களுக்கு சென்று சுற்றிசுற்றி செய்யும் வேலைகளே இவர்கள் விரு ம்புவர்கள். டிவி, சினிமா, சீரமைப்பு வேலை, விளம்பரம், கட்டட வடிவமைப்பாளர் போன்றவ ற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
 
4) கடகம்

கடக ராசிக்காரர்கள் இயற்கையை விரும்பும் நப ர்கள். சந்தோசமான சூழலுக்கு மத்தியில் வாழ விரும்புபவர்கள். கால்நடை மருத்துவர், தலை மை நிர்வாக அதிகாரி, வழக்கறிஞர், எழுத்தாள ர், ஆசிரியர், சமூக சேவகர், மனித வள ஆர்வலர் போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவர்.
 
5) சிம்மம்

தலைமைகுணம் மற்றும் எளிதாக மற்றவரைஈர்க்கும் தன்மைகொண்ட வர்கள் சிம்மராசிக்காரர்கள். தனியாக எதையும் செய்து முடிக்க முனையும் பக்குவம் கொண்டவர்க ள். மற்றவர்கள் இவர்களை ஆள விரும்ப மாட்டார் கள். முதன்மை நிர்வாக அதிகாரி, கலைஞர், வடிவ மைப்பாளர், சுய தொழில், அரசியல் போன்றவற்றி ல் இவர்கள் சிறந்து செயல்படுவார்கள்.

6) கன்னி

குழுவாக வேலை செய்ய விரும்பும் நபர்கள் கன்னி ராசிக் காரர்கள். எதையும் கட்சிதமாக செய்து முடிக்க வேண்டும் என எண்ணுவார்கள். எழுத்தாளர், ஆசிரியர், கணக்காளர், விமர்சகர், தரவு ஆய்வாளர் போன்ற வேலைகளில் இவர் கள் சிறந்து காணப்படுவார்கள்.
 
7) துலாம்

துலாம் ராசிக்காரர்கள் துடிப்பானவர்கள். மக்களை டீல் செய்வதில் வல்லவர்கள். வாடிக்கையாளர் சேவை, விற்பனை துறை, மக்கள் தொடர்பு, மேலா ண்மை போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்கு வார்கள்.

8) விருச்சிகம்

இவர்களிடம் உள்ளுணர்வு மற்றும் படைப்புத்திறன் அதிக மாக இருக்கும். எதையும் சொந்தமாக செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். மருத்துவம், விஞ்ஞானி, துப்பறியும் துறை, வழக்கறிஞர், ஆராய்ச்சி, ஊடகம் போன்ற துறைகளி ல் இவர்கள் சிறப்பாக செயலாற்றுவார்கள்.

9) தனுசு

தீர்கமான முடிவுகளை எடுப்பதில் தனுசு ராசிக்கார ர்கள் சிறந்து செயல்படுவர். நல்ல எண்ணத்தை தன் னை சுற்றி இருக்கும் இடங்களில் பரப்ப செய்வார்க ள். மக்கள் தொடர்பு, திரைப்படம்/தொலைக்காட்சி, ஆசிரியர், போன்ற பணிகளில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

10) மகரம்

நேரம் கடைபிடிப்பது, பணத்தை சரியாக முதலீடு செய்வது போன்றவற்றில் மகர ராசிக்காரர்கள் சிறந்தவர்கள். இவர்களுக்கு ஏற்ற பணிகள், மே லாளர்கள், ஆசிரியர், வங்கி, அரசு வேலைகள், அறிவியல் ஆராய்ச்சி, நிர்வாகம் போன்றவை ஆகும்.

11) கும்பம்

புதிய ஐடியாக்களை வெளிப்படுத்துவது, எதிர்கால நோக்கத் துடன் செயல் படுவதில் இவர்கள் வல்லவர்கள். ஒரே வேலை யில் ஈடுபட விரும்பமாட்டார்கள். தொழில் புரிவது, கலை, கண்டுபிடிப்பு போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

12) மீனம்

கற்பனை மற்றும் படைப்பு திறன் கொண்டவர்கள் மீனம் ராசிக்காரர்கள். மக்கள் தொடர்புசார்ந்த வேலைகளில் சிறந்து செயல்படுவார்கள். உளவியல், மக்கள் மேலா ண்மை, கலை போன்றவற்றிலும் சிறந்து விளங்குவர்.
 
=< பாலாஜி  விஸ்வநாத்

Leave a Reply

%d bloggers like this: