‘அது’ உண்மை தானா?
‘அது’ உண்மை தானா?
அன்புள்ள அம்மாவிற்கு —
நான், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, 25 வயது இளைஞன்; முதுகலை பட்டப்படிப்பு முடித்து, தனியார் நிறுவனத்தில்,
விற்பனைத்துறை துணை மேலாளராக பணிபுரிகிறேன். அம்மா, இல்லத்தரசி; அரசுபேருந்தில் அப்பா நடத்துனராக பணிபுரிகிறார். இரு அக்காக்களுக்கு திருமணமாகி விட்ட து. 21 வயதில் ஒரு தங்கை உள்ளாள்.
புத்தகங்கள் படிப்பது, இசை, ஆன்மிகம், உடற்பயிற்சி மற்றும் தியானம் என, அனைத்திலும் ஈடுபாடு கொண்டவன் நான்.
பூர்வீகசொத்துகள் அனைத்தையும் இழந்து, தற்போது, குடியிருக்க சொந்த வீடு கூட இல்லை. தடைகள் அனைத்தையும் படி கற்களாக மாற்றி, தற்போது, சராசரி வருமானத் துடன் வாழும் எனக்கு, சொந்தமாக தொழில் துவங்கி, வாழ்வில் உயர்ந்து, என் குடும்பத்தை, சமுதாயத்தில் கௌரமிக்க நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்; மனித இனத்திற்கு, ஆன்மிக உண்மைகளை உணர்த்தி, அமைதியான உலகை உருவாக்க, என்னால் முடிந்த அளவு சேவைகளை செய்ய வேண்டும் என்பது என் லட்சியம்.
இவை அனைத்தையும், 100%அடைவேன் என்பதில், எனக்கு துளியும் சந்தேகம் இல்லை. அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறேன்.
ஆனால், என்பிரச்னை என்னவென்றால், சிறுவயது முதலே , எவ்வித தீய பழக்கங்களும் இல்லாத எனக்கு, சுய இன்பம் எனும் பழக்கம் மட்டும் எமனாக வந்து ஒட்டிக் கொண்டது.
எட்டு ஆண்டுகளாக, என்னைப்பிடித்துள்ள இப்பழக் கத்தை பலமுறை கை விட நினைத்தும் முடியவில் லை. சற்று கவரும்படியான தோற்றத்தில் இருக்கும் எனக்கு, பல தோழிகள் உண்டு. அவர்களுடனும், மற்ற பெண் உறவினர்க ளுடனும் மிகுந்த கண்ணியத்துடனே நடந்து கொள்வேன்.
‘பெண்என்பவள் வெறும் சதைப்பிண்டம் அல் ல; அவள், சகமனுஷி; தெய்வத்திற்கு நிகரான வள்; இறைவனின் ஈடு இணையற்ற படைப் பு…’ என்பதை, நல்ல தோழிகளிடம் பேசிப் பழகும் போது உணர்கிறேன்.
எனினும், சில நண்பர்களின் வற்புறுத்தலால், தவிர்க்க முடியாமல் பார்க் கும் நீலப்படங்கள், திரைப்படங்கள், சின்னத்திரை மற்றும் பொது இடங்க ளில் கவர்ச்சியாக உடையணிந்து வரும் பெண்களைப் பார் க்கும் போது, இப் பழக்கத்திலிருந்து மீள முடியாதவனாகி விடுகிறேன்.
ஆனாலும், கடந்த ஒரு ஆண்டாக கடும் முயற்சி எடுத்து, இப்பழக்கத்தை குறைத்து, தற்போது, இரு மாதங்களாக அறவே கைவிட்டு விட்டேன். இருப்பினும், என்னால் அந்த நினைப்பிலி ருந்து மீள முடிய வில்லை.
சின்னத்திரையில் சில மருத்துவர்கள், வாரம் ஒருமுறை சுயஇன்பம் பெறு வது ஆரோக்கியம் என்றும், இளம் வயதில் இது தே வையென்றும் கூறுகின்றனர். அது உண்மை தானா?
ராமனாகவும், சகஇளைஞர்களுக்கு எடுத்துக்காட் டாகவும், பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் பிள் ளையாகவும், சமூகத்தி ற்கு சிறந்த சேவகனாகவும் வாழ நினைக்கும் எனக்கு, இறைவன் தரும் கடும் சோ தனையாகவே இப்பழக்கத்தை கருதுகிறேன். இதனா ல், வார்த்தைகளால் கூற முடியாத மிகுந்த மன வலி ஏற்படுகிறது. இதிலிருந்து கண்டிப்பாக மீள்வேன்; அத ற்காக, என்பணிகளில் மட்டுமே கவனம்செலுத்தி, குறி க்கோளை அடைய வெறியுடன் செயலாற்றி வருகிறே ன்.
இருப்பினும், தூயவனாக மாற, தாங்கள் கூறும் ஆலோசனைகள் என்னை மேலும் வலிமையுடன், லட்சியத்தை நோக்கி பயணிக்கச் செய்யும்.
— இப்படிக்கு,
உங்கள் அன்பு மகன்.
அன்புள்ள மகனுக்கு —
உன் குடும்ப பாசமும், முன்னேற வேண்டும் என்ற வேட்கையும், சமூதாய அக்கறையும் கண்டு சிலாகிக்கிறேன்.
மகனே… பருவ வயது ஆண்களும், பெண்களும், ‘ஹார்மோன்’ அட்டகாசத்தால் உணர்வுகளை ஆரோக்கியமாய், சமூக நியதிகளை மீறாமல், கட் டுப்படுத்த தெரியாமல் தத்தளிக்கின்றனர். ஞானி களும், யோகிகளும், சித்தர்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. திருமணமாகி, தாம்பத்யம் அனுபவிக்கும் ஆண்களும் கூட, சுயபழக்கத்தில் ஈடுபடுகின்றனர். அணை க்கட்டு நிரம்பும் போது, மதகுகளை திறந்து விடுவது தவறல்ல; அணைக் கட்டு வறண்டு கிடக்கும் போது, மதகுகளை திறந்து விடுவது அபத்தம்.
எதுவும் அளவோடு இருந்தால் நல்லது. சுயப்பழக்கம், வாரத்திற்கு ஒரு முறை இருக்கலாம். இப்பழக்கத்தால் ஆண்மை குறைவு ஏற்படாது; உடல்வலு குறையாது; உடல்முதிர்ச்சி அடையாது. இப்பழக்கம் உனக்கு இருக்கிறது என்பதற்காக, வீணாக குற்ற உணர் ச்சி கொள்ளாதே! இது ஒன்றும் குற்ற செயல் இல்லை; இது ஒரு உயிரியல் தேவை.
பெரும்பாலும், சுயபழக்கம் திருமணமானவுடன் நின்றுவிடும். 30 வயதில் திருமணம் செய்தாலும், செய்யா விட்டாலும், இளமையின் வீரியம், 25 % குறைந்து, சுயபழக்க நாட்டம் போய்விடும். எல்லாம் சிறிது காலம் தான்.
வாழ்க்கையை இயல்பாக, யதார்த்தமாக எதிர்கொள். ராமனாக, அனுமனாக வாழவேண்டும் என்கிற அதீத கற்பனை உலகில் மிதக்காதே! அவ தாரப் புருஷனாவது அப்பறம்… முதலில் நல்ல மனிதனாக வாழ முயற்சிப் போம்
உன் லட்சியங்களை, நீ அடைய இறைவனை பிரார்த்திக் கிறேன்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத், அன்புடன் அந்தரங்கம், வாரமலர், தினமலர்