Tuesday, October 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கல்ல‍றையல்ல‍-கருவறை- வாழைப்பழத்தில் ஊசி

கல்ல‍றையல்ல‍… கருவறை… – வாழைப்பழத்தில் ஊசி

கல்ல‍றையல்ல‍… கருவறை… – வாழைப்பழத்தில் ஊசி

(இந்த (பிப்ரவரி 2016) மாத நம் உரத்த‍ சிந்தனை இதழில் வெளிவந்துள்ள‍ அற்புத தலையங்கம்)

சின்ன‍சேலம் கல்லூரியில் பயின்ற மூன்று மாணவிகளின் தற்கொலை யும், ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்

கழக மாணவன் ரோஹித்தின் தற்கொலையும்… கல்வித் துறையின் களைய முடியாத கறைகள். ப‌ணப்பைத்தியங்களும்… ஜாதி வெறியர்களும், மதங்கொண்ட மடையர்களும் கூட்ட‍ணியமைத் து நிகழ்த்தியுள்ள‍ கொடூரத்தின் சான்றுதான்.

கட்ட‍மைப்பு வசதியில்லை… சுற்றுச்சூழல் சரியில்லை… கல்லூரி நடத்து வதற்கு ஒரு சதவீதம் கூட தகுதியில்லை என்று 8 ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி மறுக்க‍ப்பட்ட‍ கல்லூரி எப்ப‍டி இத்த‍னையா ண்டுகளாய் இயங்கி வந்த‌து? எதன் அடிப்ப டையில்…. எவ்வ‍ளவு பேரத்தில்… எவரின் மிரட்ட‍லில் ஒவ்வொரு ஆண்டும் தகுதி நீட்டிப்பு தரப்ப‍ட்ட‍து?

மாட்டுத்தொழுவத்தின் மாடுகளைவிட மாணவிகளின் நிலை படுமோசம் என்று பல பத்திரிகைகள் … செய்தி வெளியிட்டும், ஊடகங்கள் இதனை சுட்டிக்காட்டியும் கூட சொறி ந்து கொண்டு சும்மா இருந்தத‍ன் பின்ன‍ணி என்ன ? எவராவது செத்தால்தான் ஏதாவது நியாயம் கிட்டு ம் என்றால் இது என்ன‍சமுதாயம்? இது என்ன‍ நிர்வாகம்? கும்பி எறிந்து கேட்கின்றனர். அந்த கல்லூரி மாணவிகள்.

இளைய சமுதாயத்தின் கனவுகளை கரை சேர்க்க‍ வேண்டிய கல்லூரிகள் கலவரக் களங்களானதேன்? நாளை விளைச்ச‍லுக் கான நாற்ற‍ங்காலாய் விளங்கவேண்டிய மாணவ சமுதாத்தை நாசமாக்கியவர்கள் யார்? கல்விக் கூடங்களை பாலியல் கலவி கூடமாகவும், களவா ணிக் கூடாரங்களாகவும் மாற்றியது யார்?

விழிப்போடு விரைந்து விடை தேட வேண்டும் மக்க‍ளே!

மாணவர் அமைப்பு கலாச்சார விழா, கல்லூரித் தேர்தல், தலைவர்கள் பிறந்தநாள், வெற்றிக்கா ன‌ பிரார்த்த‍னை, திறமையைத்தேடும் இசை நடன நிகழ்வுகள்.. திறமையை காட்டும் பேஷன் ஷோக்கள்.. கருத்துக் கணிப்பு இவையாவும் உத் த‍ரவின்றி உள்ளே நுழைந்த‌தால்தான் கல்லூரி கள் உருப்படாமல் போயின என்பது தானே உண்மை!

த‌ரமற்ற‍ தகுதியற்ற‍ கல்விக்கூடங்களை இ ழுத்து மூடவேண்டும். லேகியம் விற்பனைப் போல் விளம்பரம்செய்தால் கூவி விற்கிற கல்லூரிகளைப் புறந்தள்ள‍ பெற்றோர் சிந்தி க்க‍வேண்டும். தன் குழந்தைகள் படிப்பறிவும் பட்ட‍றிவுக்கும் ஏற்ப கல்வியைத் தேர்வு செய் யாமல் பக்க‍த்து வீட்டுக்காரனைப் பார்த்து கல்வியைத் தேர்வுசெய்யும் மனப்பான்மை மாறவேண்டும். அரசியல்-கலை-இலக்கியம் – மதம் -சாதி என எந்தபெயரிலும் எந்த விஷக்கிருமிகளு ம் கல்விச்சாலைபக்க‍ம் பரவாது பார்த்துக் கொள்ள‍ வேண்டும்.

கயவர்களால் கல்ல‍றையாகிக் கொண்டிருக்கும் கல்விக் கூடங்களை கலைமகளின் கருவறையாக்க‍ உரத்து சிந்திப்போம் உடனே செயல்படுவோம்.

|/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|

இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்

திரு.உதயம் ராம் : 94440 11105

|//\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\

2 Comments

Leave a Reply