நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து குடித்து வந்தால் . . .
நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து குடித்து வந்தால் . . .
இயற்கை அளித்துக்கொண்டிருக்கும்மூலிகைகளில் இந்த நார்த்தங்காயும் ஒன்று. இதிலுள்ள
மருத்துவ குணங்களில் ஒன்றினை இங்கு காண் போம்.
நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து குடித்து வர உடல் வெப்பத்தைபோக்கி குளிர்ச்சிதரும். வாந்தியையு ம், தாகத்தையும் தணிக்கும். நார்த்தங்காய்இலை களை நரம்புநீக்கி நல்லெண்ணெய்விட்டு வதக்கி, அதனுடன் வெள்ளை உளுந்தபருப்பு, கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் வறுத்து சேர்த்து மிளகாய், உப்பு, புளி, பெருங் காயம், கறிவேப்பிலையும் சேர்த்து துவைய லாக அரைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட லாம்.
இப்படிசாப்பிட்டு வர பித்தம்குறையும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் நா சுவையின்மை, கும ட்டல், வாந்தி நிற்கும். பயின்மை குறைந்து நன்கு பசிக்கும். பொதுவாக உணவுடன் நார்த்தங்காய் ஊறுகாய் சேர்த் துக் கொண்டால் செரிமானப் பிரச்சனை வரவே வராது.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!