இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? – இருந்தால் அதிலிருந்து விடுபடுவதற்கான முக்கிய தீர்வு
இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? – இருந்தால் அதிலிருந்து விடுபடுவதற்கான முக்கிய தீர்வு
உங்கள் உடல்நலன் உங்களது அன்றாட பழக்கவழக்கங்களைக் கொண் டே அமைகின்றது. உங்களது
மனவேதனை, மன உளைச்சல் இவை உங்கள் உடல் நலனை அழிக்கின்றது. சிலர், தாங்கள் அதிக மன உளைச்சலில் இருப்பதைதானே உணராமல் இருப்பார்கள். ஆக கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்க ளுக்கு இருக்கின்றதா? என்பதனை பாருங்கள்.
ரொம்ப ஓய்ந்து விட்டதுபோல் உணர்கின்றீர்களா? நல்ல தூக்கம், நல்ல உணவு இருந்தும் சக்தி இல் லாது ஓய்ந்து விட்டது போல் நினைக்கின்றீர்களா? இந்த மன உளைச்சல் உடல் சக்தியினை உறிஞ்சி எடுத்து விடும். தூக்கம் சரிவர இல்லையா? உடல் ஓய்ந்துபோனதால் தூக்கம் சரிவர இல்லையா? எப்போதும் தலை வலி, உடல்வலி, காய்ச்சல் என ஏதாவது ஒரு நோய் படுத்துகின்றதா? அடிக்கடி மறதி ஏற்படுகி ன்றதா?
சின்ன விஷயங்களில்கூட அதிகஉணர்ச்சி வசப்ப டுகின்றீர்களா? செரிமானமின்மை, அசிடிடி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்க ல் என ஏதாவது குடல் பாதிப்பு இருக்கின்றதா? தலை சுற்றுவதுபோல் அடிக்கடி தோன்றுகின்றதா ? இதிலிருந்தெல்லாம் தப்பிக்க மருந்து மற்றும் விடிய விடிய டி.வி. பார் த்தல் என்று இருக்கின்றீர்களா? அப்படியானால் கண்டிப்பாக உங்களுக்கு மன உளைச்சல் அதிக மாய்த் தாக்கி உள்ளது என்று அர்த்தம். இதில் இரு ந்து விடுபடகுறிப்பிடப்பட்டுள்ள தீர்வுமுறைகளை உடனடி பின்பற்றவும்.
தனிமை:
சிலர் எப்பொழுதும் தனிமையில் இருப்பதையே விரும்புவார்கள். ஆன்மி க வழியில் நாட்டம் கொண்டு அவ்வழியில் செல்பவர்க ளைப்பற்றி இங்கு நான் குறிப்பிடவில்லை. ஆனால் நடை முறை வாழ்க்கையில் தனித்து இருப்பவர்கள் அவர்கள் அறியாமலேயே மன உளைச்சலில் இருப்பவர்களாக இருக்கக் கூடும். அவர்களைப் பற்றி.
*நாங்கள் எப்பொழுதும் சுதந்திரமாக இருக்கின்றோம். எங்கள் இலக்கினை எங்களால் அடையமுடியும். குடும் பம் என்ற பொறுப்பின் காரணமாக எங்கள் குறிக்கோள்க ள், லட்சியங்களை நாங்கள் இழக்கத் தேவையில்லை என்பார்கள்.
* நாங்கள் நாங்களாகவே இருக்கின்றோம். எங்களுக்குத் தேவையான சிறந்தவைகளை நாங்களே பெற்றுக் கொள்கின்றோம்.
*கல்யாணம் என்றால் ஒருவளையம் ஏற்படுகின்றது. அதி ல் நாம் நல்ல நண்பர்களைக்கூட இழந்து விடுகின்றோம். ஆனால் எங்களுக்கு அப்படியல்ல. எங்கள் நண்பர்களை நாங்கள் இழக்கவில்லை என்பார்கள்.
* எங்களோடு எல்லோரும் எளிதாய் பழக முடியும் என்பார்கள்.
* எங்கள் உத்யோகத்தினை ஒழுங்காய் பார்க்க முடியும்.
* தனியாகத் தூங்கும் பொழுது நன்கு தூங்க முடியும்.
* எங்களுக்கு நாங்களே பொறுப்பு
* பிறருக்கு நாங்கள் பொறுப்பல்ல.
* நாங்கள் நல்ல உடல் நலத்தோடு இருக்கின் றோம்.
* எங்களைப் பற்றி யோசிக்க எங்களுக்கு நேரம் இருக்கின்றது.
* அநேகருக்கு குடி பழக்கம் இருப்பதில்லை.
* இப்படி அவர்கள் பல பிளஸ் பாயிண்டுகளைக் கூறி னாலும் பலருக்கு அவர்களின் உணவுபழக்கவழக்கங் கள் அவர்கள் மனநலம் பாதித்து இருப்பதனை உணர் த்துகின்றன. பிற குடும்பங்களை பார்க்கும் பொழுது தானும் இது போல் இல்லையே என்ற ஏக்கம் அவர்க ளுக்கு எழுகின்றது. நான் யாருக்காக சேமிக்க வேண் டும் என்ற எண்ணம் அவர்களுக்கு எழுகின்றது.
இத்தகு எண்ணங்கள் அவர்கள் உடல் நலனை வெகுவாய் பாதிக்கின்றன என்றே ஆய்வுகள் கூறுகின்றன. ஒழுக்கம்: ஒழுக்கமாக இருப்பவர்களுக் கே அதிக மனஉளைச்சல், மனச்சுமை ஏற்படும் என்ற காலமாகி விட்டது. அப்படியானால் ஒழு க்கமாக வாழ்வது தவறோ என்ற கேள்வி எழ லாம். தீயவர்கள் மட்டுமே நன்றாக வாழ்கின் றார்களே என்ற சலிப்பு ஏற்படலாம். தீயவர்க ளால் ஒழுக்கமானவர்களுக்கு ஏற்படும் பாதிப் பால் நல்லவர் களுக்கு உடல்நல, மனநல பாதிப்புகள் ஏற்படுகின்றது.
ஆக தீயவர்களிடமிருந்து நல்லவர்கள் தன்னை காத்துக் கொள்வது எப்படி?
*எந்த ஒரு விழா, பொது நிகழ்வுகளிலும் ஒரு சிலரை நீங் கள் பார்க்க முடியும். தன்னை தானே முன்னிலைப்படுத்தி க் கொள்வார்கள். முன்பின் தெரியாவிட்டாலும் குறுக்கே வந்து பேசுவார்கள். சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலைமை வகித்து நாட்டாமை செய்வார்கள். தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்பார்கள். இப்படிபட்ட நபர்களைக் கண்டால் ஒரே ஓட்டமாக ஓடி விடுங்கள்.
* நல்லோர்கள் மற்றொரு முறையைக் கையாளுவார்கள். யார் ஒருவர் மற்றவர்களைப் பற்றிய வம்புகளைப் பேசுகின்றார்க ளோ அவர்களை நம்பவே மாட்டார்கள். ஆக பிறரைப் பற்றி சதா அவதூறு கூறுபவர்களை நம்பவே நம்பாதீ ர்கள்
* நல்லவர்கள் உண்மையான நட்புடைய, நல்லநோக்குடை ய மக்களோடுஎப்பொழுதும் தொடர்பில் இருப்பர்.
* யார் ஒருவரோடு இருக்கும் பொழுது கோபம், எரிச்சல், வருத்தம், நிம்ம தியின்மை வருகின்றதோ அவர்களை தவிர்த்து விடுங்கள்.
* சுய பரிதாபம் கொள்பவரோடு அதிகம் உங்களை ஈடு படுத்திக் கொள்ளக் கூடாது.
* தவறான முயற்சிகளைக் கொண்டு வெற்றி கொள்பவர்கள் என்றும் ஆபத்தானவர்கள்.
* நல்லவர்கள் பிரச்சினைகளை பெரிது செய்ய மாட்டார்கள். தீர்வுகளை காண்பார்கள்.
பிறர் நம்மை விரும்ப:
ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தால் விரும்ப ப்பட வேண்டும். அப்படி இருப்பதற்கு அவன் பார்க்க மிக அழகுடன் இருக்க வேண்டும் என்ப து மட்டு மே அவசியமில்லை. மிக நேர்த்தியான ஆடை அலங்காரங்கள் கண்டிப்பாய் அவசியமி ல்லை. நம் குடும்பம், நம் நண்பர்கள், நம் சமுதாயம் வி ரும்பும் பொழுது மட்டுமே ஒருவர் உடல், உள்ள ஆரோக்கி யத்துடன் இருக்க முடி யும். நம்முள் ஆரோக்கியமான காந்த சக்தி உருவாக கீழ்கண்ட முறைகளை பின்பற்றுங்கள்.
* பாட்டு கற்றுக் கொள்ளுங்கள். பக்திப் பாடல்களோ, கர்நா டக இசையோ, நாட்டுப்புற பாடல்களோ கற்றுக் கொள்ளுங்கள். இல்லை யெனில் வீணை, வயலின் இவற்றினை கற்றுக் கொள்ளுங்கள். இது உங்க ளை மென்மை யானவராக, ஒரு மனித நேயம் மிக்கவராக, பண் பானவராக மாற்றும்.
*நல்லவிளையாட்டு ஒன்றினை கற்று விளையா டுங்கள்.
* பிறரை பாதிக்காத நகைச்சுவை உணர்வோடு பேச கற்றுக்கொள்ளுங்கள்.
* நல்ல நட்பு வட்டத்தினை உருவாக்குங்கள்.
*யார் அழைத்தாலும் கூப்பிட்ட குரலுக்கு ‘என்ன’ என்று கே ளுங்கள். அதற்காக எல்லாவற்றையும் உங்கள் தலையில் இழுத்து போட்டு கொண்டு செய்ய வேண்டும் என்பதில்லை. ‘நோ’ என்ப தையும் மென்மையாக சொல்லமுடியு ம்.
*புன்னகைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இதுவே மிகப்பெரிய காந்த சக்தி. மேற் கூறிய பழக்கங்கள் உங்களை நிச்சயம் ஆரோக்கியமாக வைக்கும்.
=> கிருஷ்ண தேவேந்திரன் (மின்னஞ்சலில் அனுப்பியது)