Monday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"அவளை" திருமணம் செய்ய, சட்டரீதியாக அணுக வாய்ப்பு உள்ளதா?

“அவளை” திருமணம் செய்ய, சட்டரீதியாக அணுக வாய்ப்பு உள்ளதா?

“அவளை” திருமணம் செய்ய, சட்டரீதியாக அணுக வாய்ப்பு உள்ளதா?

அன்புள்ள அம்மாவிற்கு,

நான், 33 வயது ஆண்; எங்கள் வீட்டில் அனைவருமே அரசு ஊழியர்கள். நானும், வங்கியில் பணிபுரிகிறேன். நான் ஒரு

பெண்ணை காதலிக்கிறேன். அவள் தனியார் வங்கியில் பணிபுரிகிறாள். அவளுக்கு இரு அண்ணன்கள். இருவரும் ஒரு தனியார் வங் கியில் பணிபுரிந்தபோது, நட்பாக ஆரம்பித்த பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது. ‘இருவீட்டார் சம்மதத்துடன்தான் திருமணம் செய்யவேண்டும்.’ என்று முடிவு எடுத்தோம். சனிக்கிழமை, எங்களுக்கு மதியம்வரைதா ன் வங்கி பணி என்பதால், மதியத்திற்குமேல் என் வீட்டிற்கு வந்துவிடுவா ள் என் காதலி.

அதுபோன்ற ஒரு நாளில், முருகன் படத்தின் முன், அவள்கழுத்தில் தாலி கட்டினேன்; அவ ளும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டாள். அன் று, எங்களுக்குள் உள்ளப்பூர்வமாக மட்டுமல் லாமல், உடல்பூர்வமான சந்தோஷமும் ஆரம் பமானது. அதன்பின், ஒவ்வொரு சனிக்கிழமை யும், மதியம் முதல், மாலை வரை என்னோடு இருப்பாள்.

எங்களது காதல் விவகாரம், உடன் பணிபுரிவோர் அனைவருக்கும் தெரி யும். ‘நாம் திருமணம் செய்துகொள்வோம்…’ என, நான் கூறிய போது, அவளது அண்ணி கர்ப்பமாக இருக்கிறாள் என்று கூறி, சிறிது நாட்கள் கழித்து திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றாள். இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில், என் கால் உடைந்து, 3 மாதம், ‘பெட் ரெஸ்ட்’டில் இருந்தேன்.

அச்சமயம், என் காதலியின் பெரியம்மா பெண், அவர்கள் ஊரில் ஒருபையனை காதலித்த விஷயம் வெளியே தெரிய வர, எங்களது விவகாரத்தையும், தன்பெற்றோரிடம் தெரி யப்படுத்தியுள்ளாள். என் காதலி. இதனால், அன்றிலிருந்து இவளை வே லைக்கு வர விட வில்லை அவளது பெற்றோர்.

நான் மருத்துவமனையில் இருந்ததால், என்னால் அவ ளை தொடர்புகொள்ள முடியவில்லை. அவளும், எனக்கு போன்செய்யவில்லை. ஒன்றரை மாதத்திற்குபின், ஒரு நாள் எனக்குபோன்செய்து பேசினாள். பின் மீண்டும் அவ ள் பணிக்கு வந்துகொண்டிருந்த நிலையில், நான், முன்பு தேர்வுஎழுதிய வங்கியில் இருந்து பணியில்வந்து சேரும் படி கடிதம் வந்தது. அதனால், நான் புதிய வங்கியில் வேலைக்குசேர்ந்தேன். இருவரும் வெவ்வேறு இடங்களில் பணி புரிந்த நிலையில் முதல், இரண்டு ஆண்டுகளை காட்டிலும், எங்களுக்குள் அன்பு, காதல் இன்னும் அதிகமானது.

அவளுக்கும் தனியார்துறைவங்கிலேயே, ‘பர்ம னட்’ ஆவதற்கான தேர்வு வந்தது. நான்தான் அவளை தேர்விற்கும், பின், இன்டர்வியூவிற்கும் கூட்டிச் சென்றேன். இன்டர்வியூவில் செலக்ட் ஆன தும், வேறு ஒரு ஊரில், ‘போஸ்டிங்’ போட்டனர். சனிக்கிழ மைதோறும் அவள் பணிபுரியும் ஊருக்குசென்று, பார்த்து வந்தேன். 2 மாதம் கழித்து, அவள் வீட்டிற்கு அருகில் உள்ள கிளைக்கு, மாறுதல் கேட் டுப் பெற்றாள்.

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் என்தாயார் இற ந்தார். அனா தையாக உணர்ந்தேன். அப்போது என் காதலி, எங்கள் வீட்டி ற்கு வந்து, ‘ உனக்கு நான் இருக்கேன் தாயாக… நீ எதுக் குடா அழற… உன்கூட கடைசி வரைக்கும் இருப்பேன் …’ என்று ஆறுத ல் கூறினாள்.

அன்று என் உறவினர்கள் அனைவருக்கும் அவளை அறி முகப்படுத்தினேன். எங்கள் வீட்டில் எல்லாருக்கும் சம் மதம். ஆனால், அம்மா இறந்து ஒரு ஆண்டு முடியாததா ல், எங்கள் திருமணத்தை தள்ளி வைத்தோம்.

அச்சமயம், அவளுக்கு ஒரு மாப்பிள்ளை வந்தது; அந்த மாப்பிள்ளையிடம் எங்கள் விஷயத்தை சொல்லி, திருமணத்திற்கு மறுத்து விட்டாள். இவ் விஷயம் அவள் அம்மாவிற்கு தெரிந்து விசாரித்த போது, எல்லாவற்றையும் கூறி விட்டாள். அவள து அம்மாவும் மறுப்பு கூறாமல், ‘சின்ன அண் ணா திருமணம் முடியட்டும்; அதன்பின் உன் பெரிய அண்ணாவிடமும், அப்பா விடமும் பேசுகிறேன்…’ என்று கூறி, வேலைக்கு அனுப்பினார்.

ஆனால், திடீரென, அவள் அம்மா எங்கள் திருமணத்திற்கு மறுத்தார். இதனால், ‘நாம்நேரில்போய் பெண்கேட்கலாம் …’ என்று என்வீட்டினரிடம் கூறினேன். அவர்களும் ஒப்புக் கொண்டு, ஒரு ஞாயிற்றுகிழமை காலை, உறவினர்கள், அலுவலக ஊழியர்கள் என, மூன்று வண்டிகளில் அவள் வீட்டிற்கு சென்றோம்.

அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும், ‘இந்த திருமணம் வேண்டாம்…’ என அவளைக் கூறச் சொன்னார்கள். ஆனால், அவள் மனசு மாறவில்லை. வேறு வழியில்லாமல் அவளது பெற் றோர், ‘எங்களுக்கு ஒருவாரகாலம் அவகாசம் கொடு ங்கள்…’ என்று கூறி, எங்களை அனுப்பினர்.

அன்று, அவள் வீட்டிலிருந்து கிளம்பும்போது, கடைசி யாக அவளுக்கு போன் செய்து, ‘நான், 54,000 ரூபாய் சம்பளம் வாங்குறேன்; சொந்தமாக வீடு, கார் இருக்கு; உன்னை மகாரா ணியாக பார்த்துக் கொள்வேன்…’ என்றேன். ‘சரின்னு சொல்லி, ‘கட்’ செய் து விட்டாள்.

அதற்குபின், அவள் போன் செய்யவே இல்லை. ஒருவாரம் சென்ற பின், பொறுமை இழந்து, அவளுக்கு, 6பக்கம், அவள் அம்மாவுக்கு, 5 பக் கம் என, கடிதம் எழுதி அனுப்பினேன். அன்று இரவு, எனக்கு போன் செய்த வள், ‘நீங்க வந்ததால் எங்க அம்மாவிற்கு உடம்பு சரியில்லாமல் போய் விட்டது. நான்கு ஆண்டுகள் பழகிய உங்களை விட, 26ஆண்டுகள் வளர்த்த எங்க அம்மாதான் முக்கியம் .’ என்று ஏதோ மனப்பாடம் செய்து ஒப்பிப்பவள் போல் கூறினாள். அவள் அப்படி கூறியதும், எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இச்சம்பவத்திற்கு பின் அவளுடன் தொட ர்பு கொள்ள முடியவில்லை.

அம்மா… அவளை நான் ஒரு குழந்தையைப்போல தான் கவனித்தேன். அவ்வப்போது அவளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படு ம்; அப்போதெல்லாம், ‘பர்மிஷன்’ போட்டு, மருத்துவமனைக்கு அழைத்து ச் செல்வேன். அத்துடன், அவளது பெற்றோருக்கு தேவையா ன மருந்துகளையும், அவள்வீட்டிற்கு தேவையான பழங்க ளையும் வாங்கி கொடுப்பேன்.

கடந்த, மூன்று ஆண்டுகளாக, இவளுக்கு பல முறை நாட்கள் தள்ளி போயிருக்கிறது. இருமுறை கர்ப்பம் உறுதிசெய்யப்பட்டு, ‘இப்போ து குழந்தை வேண்டாம்…’ என, அவள் சொன்னதன்பேரில், கருக்கலைப் புக்கு சம்மதித்தேன். அவளால், எப்படி என்னை மறந்து இன்னொரு ஆணை திருமணம் செய்ய முடியும்?

அம்மா. ஒன்றை மட்டும் உறுதியாக கூறுவேன். என்னை த் தவிர அவள், வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டாள். அப்படியே அவள், தன் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக சம்மதித்தாலும், அவளால் என்னை மறந்து, நிம்மதியாக வாழ முடியாது.

என் நண்பர்களோ, ‘நான்கு ஆண்டுகளாக அவள் தன்னு டைய பணத் தேவைக்கும், சுகத்திற்கும் உன்னை நன்றா க பயன்படுத்தியுள்ளாள்…’ என்று கூறுகின்றனர். ஆனா ல், நான் அவ்வாறு எண்ணவில்லை. அவளும் என்னை மனப்பூர்வமாக விரும்பினாள். தற்போது அவளது பெற் றோர், இறந்து போய்விடுவதாக மிரட்டுவதால் தான் அவள் இப்படி செய்கிறாள்.

எங்கள் வீட்டில் பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பித்து விட்டனர். ஆனால், எனக்கு இவள்தான் வேண்டும். நான் இவளை திரும ணம் செய்ய, சட்டரீதியாக அணுக வாய்ப்பு உள்ளதா? உங்களது ஆலோச னையைப் பொறுத்துதான் என் எதிர் கால வாழ்க்கை அமையும்.

— இப்படிக்கு,
அன்புள்ள மகன்.
அன்புள்ள மகனுக்கு –

உன் காதலி குறித்து உன் நண்பர்கள்கூறும் குற்றச்சாட்டு அபத்தம். உன் பொருட்டு, தனக்கு வந்த மாப்பிள்ளைகளை தட்டிக் கழித்திருக்கிறாள். நீ கால் ஒடிந்து, 3 மாதம் படுக் கையில் கிடந்தபோதும், உன் தாயாரை இழந்து நீ தவித்த போதும் அனுசரணையாக இருந்து, ஆறுதல் கூறியுள்ளாள்.

உன் காதலியை பெண் கேட்க, 3 வேன்களில் கும்பலாய் ஆட்கள் போனது, உன் காதலியின் தாய்க்கும், அவளுக்கும் பயத்தை ஏற்படுத்தி யிருக்க கூடும். அத்துடன், உன் காதலியை, அவளின் தாயாரும், அண்ணனும் தொடர்ந்து மூளைச்சலவை செய்திருக்கலாம். உனக்கு, உன் காதலிமீது உண்மையா ன காதல் இருக்கும் பட்சத்தில் உங்கள் இருவருக்கும் இடையே நிகழ்ந்த உறவுக்கான ஆதாரங்களை அழித்துவிடு. நண்பர்களின் தூண்டுதலில் காதலியை, ‘பிளாக்மெயில்’ செய்ய நினை க்காதே!

காதலி, அவளது பெற்றோர் பார்த்து வைக்கும் மாப்பிள் ளையையும், நீ, உன் வீட்டினர் பார்த்து வைக்கும் பெண் ணையும் திருமணம் செய்து, அவரவர் வழி, அவரவருக்கு என வாழ துணி . தற்கொலை எண்ணம் தவிர். காதலி இறந்து விட்டாள் அல்லது எங்கோ தூர தேசம் சென்று விட்டாள் என நினைத்து, அவளின் நினைப்பை தலை முழுகு.

இவ்வுலகில் எந்த உறவும் நிலையானது அல்ல. எல்.கே.ஜி., முதல் கல்லூரி வரை ஒன்றாக படி த்த வகுப்பறை தோழியை, மறந்துவிடுகிறாள் சகதோழி. 26ஆண்டுகள் பெற்று வளர்த்து, ஆளா க்கி திருமணம்செய்து வைத்த பெற்றோரை மற ந்து விடுகிறான், மகன்.

நீ நல்லபணியில் இருக்கிறாய்; வாழ்க்கைக்கு தேவையான வசதிகளுடன், மனைவியாக வரும் பெண்ணின் விருப்பங்களை, தேவைகளை பூர்த்தி செய்பவனாக இருக்கிறாய்; இருந்தும் உன் காதலிக் கு, நீ தேவைப்பட வில்லை. உன் காதல் கைகூட வி ல்லை. பணம், காதல் இவைகளுக்கு அப்பாற்ப ட்டு, ஏதோ ஒன்று உன் காதலியை உன்னிடமிருந்து பிரித் திருக்கிறது. உன்காதலி ஒருசூழ்நிலைகைதி; அவள் இடத்திலிருந்து அவளின் நியாயங்களை உணர்ந்து, ‘எங்கிருந்தாலும் வாழ்க!’ என வாழ்த்தி, மனதை அமைதிபடுத்து.

உன்வீட்டினர் பார்த்து வைக்கும் பெண்ணை மணந்து, சந்தோஷமாக இரு; வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத், அன்புடன் அந்தரங்கம், வாரமலர், தினமலர்

Leave a Reply