வாடகைதாரர், வீட்டை காலிசெய்ய மறுத்தால் . . . ? – வீட்டு உரிமையாளருக்கான வழக்கறிஞரின் ஆலோசனை
வாடகைதாரர், வீட்டை காலிசெய்ய மறுத்தால் . . . ? – வீட்டு உரிமையாளருக்கான வழக்கறிஞரின் ஆலோசனை
வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை பண்ணிப்பார் என்பார்கள், இதில் நாம் வீட்டை கட்டி, ஒரு பகுதியில்
நீங்கள் இருந்து கொண்டு மற்றொரு பகுதியை வாட கைக்கு விட்டுவிட்டு அதன்பிறகு மகன் மகள், திரு மணம் செய்யும்போதோ அல்லது வேறு பல காரண ங்களுக்கோ அந்த வாடகைக்குவிட்ட பகுதி உரிமை யாளரான உங்களுக்கு தேவைப்பட்டு, அதன் காரண மாக நீங்கள் குடி அமர்த்திய வாடகைதாரரை காலி செய்யச் சொன்னால், அதற்கு அந்த வாடகைதாரர், காலிசெய்ய மறுத்து
தொடர்ந்து பிடிவாதமாக குடியிருக்கும் பட்சத்தில், வீட்டு உரிமையாள ரான உங்களுக்கு பெருதத மன உளைச்சலும், தேவையற்ற பிரச்சனைகளையும் ஏற்படுத் தும்.
பிடிவாதமாக வீட்டை காலிசெய்ய மறுக்கும் அந்த வாடகைதாரரை சட்டப்படி காலிசெய்ய சட்டத்தில் வழி வகை உண்டு.
“உங்கள் வீட்டில் வாடகைக்கு குடியிருப்போருக்கு வீட்டை காலி செய்யச் சொல்லி ஒரு பதிவுத்தபால் மூலம் அவருக்கு தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு அந்த பதிவு தபாலில், என்ன காரணத்திற்காக உங்களுக்கு அந்த வீடு தேவைப்படுகிறதென்பதை தெளிவாக குறிப்பிட்டு அப்பகுதியில் தனக்கு சொந்தமான வேறு வீடு இல்லையென்பதையும் குறிப்பிட்டு, 15 நாட்களுக்குள் வீட்டை காலி செய்து தர வே ண்டும் என்றும் குறிப்பிட வேண்டும். அப்பொழுதும் அந்த வாடகைதாரர்
வீட்டை காலிசெய்ய மறுத்தால், ஒரு நல்ல வழக்கறிஞ ரை அணுகி, மேற்கூறிய அதே காரணங்களை குறிப்பிட்டு சட்ட அறிவிப்பு (Legal Notice) வழக்கறிஞர்மூலம் பதிவுத் தபால் அனுப்புங்கள்.
வழக்கறிஞர் அனுப்பிய சட்ட அறிவிக்கை கிடைத்த பிறகு ம் அவர் வீட்டைகாலி செய்யவில்லை என்றால் நீங்கள் நீதிமன் றத்தில் வழக்கு தொடரலாம். நீதிமன்றம் சட்டப்படி நட வடிக்கை எடுக்கும்.
பதிவுத்தபாலின் நகல், அத்தாட்சிக்கடிதம், தபால் அனுப்பியதற்கான ரசீதை மற்றும் வழக்கறிஞர் அறிவிக்கை ரசீது போன்றவற்றை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.”
மேலும் நீங்க வீட்டை வாடகைக்குவிடும் போது முறையாக செய்துகொண்ட வாடகை ஒப்பந்தப் பத்திரமும் மாதாமாதம் அவர் தரும் வாடகைக்கு தாங்கள் ரசீது போன்றவை இருந்தால் உங்களுக்கு நீதி விரைவாக கிடைத்து, வாடகை போர்ஷனும் உடனடியாக கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு.
– அசோகன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்,
நல்ல வழி காட்டல். நான் எனது நண்பர்களுடன் உங்கள் வழிகாட்டலை பகிர்ந்து கொள்ள அனுமதி வேண்டுகிறேன்