Thursday, April 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுகள் – ஓர் அவசிய அலசல்

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுகள் – ஓர் அவசிய அலசல்

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுகள் – ஓர் அவசிய அலசல்

எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் அதற்கு கால்சியம் சத்துக்கள் அவசியம். ஆனால்

நாம் அன்றாடம் உண்ணும் சில உணவுக ளால் அந்த கால்சியம் சத்து எலும்புகளுக்கு கிடைக்காமல் போகிற து. இது நீடித்தால், பின் எலும்புகளின் அடர்த்தி குறைந்து பல்வேறு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உள்ளாகக்கூடும்.

* உப்பு அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உடலில் கால்சிய த்தின் அளவு குறையும். ஏனெனில் அதிகப்படியான சோடியம் உடலில் இருந்து அதிகப்படி யான அளவில் கால்சியத்தை சிறுநீரகங்களின் வழியே வெளியேற்றும். எனவே உங்கள் எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலிமை யுடனும் இரு க்க ஒரு நாளைக்கு 1,500 மி.கி. (1/2 டீஸ்பூன்) அல்லது அதற்கும் குறைவான அளவில் சோடியத்தை எடு த்து வாருங்கள் மற்றும் குறைந்தது 1,200 மி.கி. கால்சியத் தையும் தவறாமல் எடுத்து வாருங்கள். குறிப்பாக வயது அதிகரிக்கும் போது உப்பின் அளவைக் குறைத்து வந்தால் தான் எலும்பு பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

*ஒருவாரத்தில் 7-க்கும் அதிகமானளவில் சோடா பானங்களைப் பருகினா ல், எலும்புகளின் அடர்த்தி குறைந்து, எளிதில் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்பது தெரிய வந்துள்ளது. ஏனெனில் கோலாவில் உள்ள பாஸ் பாரிக் அமிலம், உடல் கால்சியத்தை உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்துவதோடு, குடலையும் பலவீனமா க்கும். எனவே சோடா பானங்களைப்பருகுவதைத் தவிர் த்து, பழச்சாறுகளைப் பருக ஆரம்பியுங்கள்.

*காபி, டீ போன்ற பானங்களை அதிகம் குடிப்பதைத் தவி ர்த்திடுங்கள். ஏனெனில் காபி, டீயில் உள்ள காப்ஃபைன் எலும்புகளில் இருந்து கால்சியத்தை வெளியேற்றி, வலி மையை இழக்கச் செய்யும். அதிலும் ஒரு முறை நீங்கள் 100 மி.கி. காப்ஃ பைன் எடுத்தால், 6மி.கி. கால்சியம் எலும்புகளில் இருந்து வெளியேற்று ம்.

* அதிகப்படியான ஆல்கஹால் எலும்புகளின அடர்த்தி மற்றும் எலும்புகள் உருவாக்கத்தைக் குறைத்து, எளிதில் எலும்பு முறிவு ஏற்படுவத ற்கான அபாயத்தை உண்டாக்கும். எனவே ஆல்கஹால் பருகுவதைத் தவிர்த்திடு ங்கள்.

*தக்காளி, காளான் கத்திரிக்காய், வெள்ளைஉருளைக்கிழங்குபோன்றவை எலும்பு அழற்சியை ஏற்படுத்தி, நாளடைவில் ஆஸ்டியோபோரோசிஸிற்கு வழிவகுக்கும். ஆனால் இவற்றில் எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் களும், இதர ஊட்டச்சத்துக்களும் அதிகம் உள்ளதால், இதனை உண்பதை முற்றிலும்தவிர்க்காமல், அளவா க உட்கொண்டு வாருங்கள். குறி ப்பாக தினமும்தவறாமல் 1,200மி.கி. கால்சியத்தை எடுத்து வாருங்கள்.

* பசலைக்கீரையில் கால்சியம் ஏராளமாகஇருந்தா லும், இவற்றைப் பச்சையாக உட்கொண்டால், அதி ல் உள்ள ஆக்ஸலேட்டுகள் கால்சியம் உறிஞ்சுவ தைத் தடுக்கும். எனவே இவற்றை பச்சையாக உட் கொள்ளாதீர்கள்.

=>மா    மலர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: