அதிர்ச்சியில்… வீட்டு உரிமையாளர்கள்! – மகிழ்ச்சியில்… வாடகைதாரர்கள்!
அதிர்ச்சியில்… வீட்டு உரிமையாளர்கள்! – மகிழ்ச்சியில்… வாடகைதாரர்கள்!
அதிர்ச்சியில் வீட்டு உரிமையாளர்கள்… -மகிழ்ச்சியில் வாடகைதாரர்கள் ! என்ன தலைப்பை பார்த்தவுடன்
கணித்திருப்பீர்களே! மேற்கொண்டுபடியுங்கள்
வீட்டை வாடகை விடுவோர், பல மடங்கு முன் பணம் வசூலிக்க தடை செய்யும், அதே நேரத் தில், 3 மடங்கு மட்டுமே முன்பணமாக வசூலி க்க வகைசெய்யும், மத்திய அரசின் புதிய சட்ட த்தை அமல்படுத்த, தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக, நகரங்களுக்கு குடிபெயர்வோர், வாடகை வீடுகளையே சார்ந்திருக்கி ன்றனர். ஆனால், வீட்டை வாடகைக்கு விடுவோர், எவ்வளவு வாடகை வசூலிக்க வேண்டும்; முன்பணம் எவ்வளவு பெறவேண்டும்; குடியிருந்தவர்கள் வீட்டை காலிசெய்யும்போது, பின்பற்றவேண்டிய நடைமுறை என்ன என்பதில், பலகுழப்பங்கள் நிலவுகின்றன. அத னால், வீட்டை வாடகைக்குவிடும் பலர், வாடகையில், 10மடங்
கு மற்றும் அதற்கு மேலான தொகையை, முன்பணமாக பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
புதிய சட்டம்:
நாடுமுழுவதும் வாடகை கட்டுப்பாட்டுக்காக , 1948ல் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. இச்ச ட்டம், தற்போதைய சூழ்நிலைக்கு உகந்ததா க இல்லை. அதனால், மத்திய அரசு, மாதிரி வாடகை சட்டத் தை, 2015ல் உருவாக்கியது. இச்சட்டமசோதாவுக்கு, மாநில அரசுகளின் ஒப்புதலை பெறும்பணிகள் நடந்து வருகின்றன . வீடுகளுக்கான வாடகையை முடிவுசெய்தல்; 3 மாத வாட கையை முன்பணமாக வசூலித்தல்; உரிமையாளர் – வாட கைதாரர் இடையேயான ஒப்பந்தம் போன்றவற்றுக்கான விதிகள், இச்சட்டத்தில் வகுக்கப்பட்டு உள்ளன.
ஒப்புதல்:
மத்திய அரசின் இச்சட்டத்தை அமல்படுத்த, தமிழகம் உட்பட பல மாநிலங்கள்ஒப்புதல் தெரிவித்துவிட்டன . இதுகுறித்து வீட்டுவசதி துறை உயரதிகாரிகள் கூறு கையில், ‘மத்திய அரசின் மாதிரி வாடகை சட்டத்தை கொள்கை அளவில் தமிழகரசு ஏற்றுள்ளது. இதை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்ப ட்டுவருகின்றன. சிலஆண்டுகளில் இச்சட்டம் முழுமையாக அமல்படுத்த ப்படும்’ என்றனர்.
இதையடுத்து, வீட்டைவாடகை க்கு விடுவதில், இருந்து வரும் பல்வேறு சச்சரவு களுக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என, எதிர்பார் க்கப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள் என்ன?
*வீட்டை வாடகைக்கு விடுவோர், முன்பணமாக மூன்று மாத வாடகை யை மட்டுமே வசூலிக்க முடியும்
*வீட்டை வாடகைக்கு விடும்போது, 12 மாத ஒப்பந்தம் கையெழுத்திடப் பட வேண்டும். ஒப்பந்தத்தை புதுப்பிப் பது, வாடகையை உயர்த்துவது குறித்து உரிமையாளர் 2 மாதங்களுக்கு முன்னரே, வாடகைதாரருக்கு தெரிவிக்
க வேண்டும்.
*மாநிலஅளவில் வாடகைதொடர்பான புகார்களை விசா ரிக்க தனிஆணையம் அல்லது தீர்ப்பாயம் அமைக்கப்படு ம். ஒப்பந்த மீறல்கள் நடந்தால், வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்கள் இவற்றில் முறையிடலாம்.
– தினமலர் நிருபர் –