Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆன்லைனில் இரண்டே நிமிடத்தில் வில்லங்கச் சான்றிதழ்-E.C-ஐ எளிதாக பெற

ஆன்லைனில் இரண்டே நிமிடத்தில் வில்லங்கச் சான்றிதழ்(E.C.)-ஐ எளிதாக பெற…

ஆன்லைனில் இரண்டே நிமிடத்தில் வில்லங்கச் சான்றிதழ்(E.C.)-ஐ எளிதாக பெற…

இன்று எல்லா வேலைகளையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே இணைய ம் வழியாக எளிதாகவும், வெற்றிகரமாகவும் செய்து முடிக்க‍ முடிகிறது.  அந்த வரிசையில்

EC (என்கம்ப்ரன்ஸ் சர்டிபிகேட்) எனப்படும் வில்லங்கச் சான்றிதழைகூட எளிதாக ஆன்லைனில் பெறலாம். ஆம் முன்புபோல் வில்ல‍ங்கச் சான்றிதழ்கேட்டு பத்திரப்பதிவு அலுவலகத் திற்கு நாட்கணக்கில் நடையாய் நடைக்க‍வேண்டிய அவசியமில்லை. ஆனாலும்  நம்மக்களுக்கு இதுபற்றிய விழிப்புணர்வு குறைவுதான்… அமர்ந்த இடத்தில் இருந் தே  ஆன்லைனில் வில்லங்கச்சான்றிதழை பெற என்ன வழி?

சொத்துக்களை வாங்குபவர்கள், வாங்குவதற்குமுன்பு சொத்தின்கிரைய ப் பத்திரம், பட்டா, போன்றவற்றிற்கு அடுத்த‍ படி யாக வில்லங்க சான்றிதழ் அதாவது வாங்கவி ரு க்கும் சொத்துக்கு உரிமையாளர் யார் என்ப தை நிரூபிக்கும் ஒரு சான்றிதழ் ஆகும்.  இந்த வில்லங்கச் சான்றிதழ் என்பது வாங்கவிருக்கும் சொத்தின் வரலாறு அதாவது யார் யார்  கைகளி ல் இருந்து எப்படியெல்லாம் மாறிவந்திருக்கிற து என்ற விவரமும், அந்த சொத்தின் உரிமை, யாருக்கெல்லாம்  மாற்றப்ப ட்டிருக்கிறது என்பதையும், வாங்கவிருக்கும் சொத்து வங்கிகளிலோ நிதிநிறுவனங்களிலோ அடமானம் வைத்து அடமானப் பத்திரம் பதிவு செய்திருக்கிறார்களா என்ற விவரங்களையும், பிரிபடாத சொத்தாகவோ (அல்)  ஒருசொத்தை வாங்க விரும்புவர்கள், அந்தச் சொத்தில் ஏதா வது வில்லங்கம் இருக்கிறதா, சொத்தை விற்ப வர் பெயரில்தான் அந்தச்சொத்து உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளும் ஒருமுன்னெச்ச‍ரிக்கை ஆவணமாக வாங்குபவருக்கு பயன்படுகிறது. என வே சொத்து வாங்குவதில் இந்த‌ வில்லங்கச் சான்றிதழ், முக்கியத்துவம் பெறுகிறது.

முன்பெல்லாம் இந்த வில்ல‍ங்க சான்றிதழ் பெறுவதற்குப் பத்திரப்பதிவு அலுவலகத்துக்குச் சென்று வில்லங்கச் சான்றிதழுக்காக விண்ணப்பித்து காத்திருக்க வேண்டிய பரிதாப நிலை முன்பு இருந்தது. ஆனால் இப்போது அதை எளிதில் ஆன் லைனிலேயே கணப் பொழுதில் பார்க்கவும் பெற வும் முடிகிறது.

ஆன்லைனில் வில்லங்கச் சான்றிழை மிகவும் எளிதாக பெறுவதற்கு கீழ்க்காணும் பதிவுத்துறை இணையதளத்திற்கு சென்று அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிகச்சரியான பதிலை கொடுத்தா லேபோதும் வில்லங்க ச் சான்றிதழை மிக எளிதாக நீங்கள் பெறலாம்.

முதலில் http://ecview.tnreginet.net என்ற இணைய முகவரியை காப்பி செய்து உங்கள் கணிணியில் உள்ள‍ பிரவுசரில் இருக்கும் அட்ரஸ் பாரில் (www…….com) பேஸ்ட் செய்து, கீபோர்டில் இருக்கும் எண்டர் கீயை அழுத்துங்கள். இது உங்களை நேரடியாக வில்ல‍ ங்க சான்றிதழ் ஆன் லைன் விண்ணப்ப‍திற்கே அழைத்துச்செல்லும்.

அதில் . . .

நீங்கள் வாங்கவிருக்கும் சொத்து எந்த பத்திரப்பதிவு மண்டலத்தின் எல் லைக்குட்பட்ட‍து என்பதை கொடுக்க‍ப்பட்டிருக் கும் பொத்தானை அழுத்தி தெரிவுசெய்து சொடு க்குங்கள்.

அதன்பிறகு அச்சொத்து எந்த பத்திரப்பதிவு மாவட்டத்தில் வருகிறது என்ற விவரத்தையும் குறிப்பிடுங்கள்.

வாங்கவிருக்கும் சொத்துக்கு எத்தனை வருடங்களுக்கு வில்லங்கம் பார் க்க வேண்டும் என்று கேட்கப்பட்டிருக்கும். அதை தேதியுடன் குறிப்பிட வேண்டும்

வாங்கவிருக்கும்  சொத்துக்குரிய சர்வேஎண் (புல எண்) மற்றும் அந்த‌ சர்வே எண்ணுக்குரிய சப் டிவி ஷன் (உட்பிரிவு)  எண்ணையும் மறக்காமல் குறிப் பிட வேண்டும். மேலும் அங்கு கேட்கப்பட்டிருக்கு ம் கேள்விகளுக்கு சரியான விவரங்களை பதிவுசெய்யுங்கள். அதன் பிறகு இறுதியாக ஒரு பெட்டியில் அதனருகே 4 இலக்க‍ எண்களை அப்ப‍டியே டைப்செய்தபிறகு Search என்ற பொத்தா னை அழுத்துங்கள் அடுத்த‍ சில விநாடிகளி ல் உங்களது கணிணி திரையில் வில்லங் கச்சான்றிழ் தோன்றும். அதை அப்ப‍டியே நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.  

மேலும் விவரங்களறிய வாங்கவிருக்கும் சொத்து, எந்த‌ சார்பதிவாளர் அலுவலகத்தின் எல்லைக்குட்பட்ட‍தோ அந்த சார்பதிவாளர் அலுவலகத்தை தொடர்பு கொண் டு தெரிந்து கொள்ளுங்கள்.

Link:http://ecview.tnreginet.net/
http://www.tnreginet.net/

வில்லங்கச்சான்றிதழில் வாங்கவிருக்கும் சொத்து, எந்த தேதியில் பதிவு செய்யப்பட்டது யார் யார் பெயரில் எந்தெந்த‌ ஆண்டுகளில் இந்த சொத்து அனுபவத்தில் இருந்தது?, யார் யாரிடம் கைமா றி வந்திருக்கிறது? உள்ளிட்ட விவரங்களும் தெள்ள‍த் தெளிவாக தெரிவித்து விடும்.   

குறிப்பு

ஒருகுறிப்பிட்ட‍ ஆண்டுக்குமுன்புதான் இணை யத்தில் விவரம்கோரமுடியும். அதற்கு முந்தைய ஆண்டில் சொத்தின் தன் மையை பார்க்க‍ அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத்தைநாடி, பெற்றுக் கொள்ள‍லாம்.

– விதைவிருட்சம் சத்தியமூர்த்தி

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: