Sunday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிள்ளைகளை இப்ப‍டியா வளர்ப்ப‍து! – பெற்றோர்களை கடுமையாக சாடும் "லேனா த‍மிழ்வாணன்"

பிள்ளைகளை இப்ப‍டியா வளர்ப்ப‍து!- பெற்றோர்களை கடுமையாக சாடும் லேனா த‍மிழ்வாணன்

பிள்ளைகளை இப்ப‍டியா வளர்ப்ப‍து!- பெற்றோர்களை கடுமையாக சாடும் லேனா த‍மிழ்வாணன்

என் தாத்தாவுடன் பிறந்தவர்கள், எண்ணிக்கையில், மிக அதிகம்; என் தந்தை தமிழ்வாணனுடன்

பிறந்தவர்கள், எட்டு பேர்; என்னுடன் பிறந்தவர்கள், மூன்று பேர்; எனக்கு பிறந்தவர்கள், இரண்டு பேர். இப்படி தலைமுறைக்கு தலைமுறை, நம் சமுதாயம், இளைத்துக் கொண்டே போகிறது.

நாம் இருவர், நமக்கிருவர் என்பதுகூட மாறி, நாம் இருவர்; நமக்கு ஒருவர் என, ஆகிவருகிறது. இப்ப டி ஒற்றைப் பிள்ளை, மிஞ்சினால் இருவர் என்று ஆகிறபோது, பிள்ளைகளின்மீதான, பெற்றோரின் பார்வைப்பதிவு அதிகமாகிறது.

இப்போதெல்லாம் குறைவாக குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லும் அரசு பிரசாரம், ஒலிபெருக்கிகளும் ஓய்ந்து, விளம்பரங்கள் விடைபெற்றுவிட்டன. முதலில் பெறப்படு கிற பிள்ளையே, இந்த வேலையை கச்சிதமாக முடித்து விடுகிறது; ஆம்… நம்மை பாடாய் ப்படுத்துகிறது.

தந்ததை பெற்று, வெந்ததைத் தின்று வாழ்ந்த எங்க காலம், மாறிவிட்டது. பிள்ளைகளிடம் வால்தனம் அதிகமாகி, அடிக்கிற லூட்டிகளையும், செய்கிற ஆதிக்கத்தையும், முன் வைக்கிற கோரிக்கைகளையும், ஆகிற கல்விச் செலவினங்களையும் மற்றும் நடக்கிற மருத்துவச் செலவுகளையும் பார் த்த பெற்றோர், ‘போதும்டா சாமி…’ என்று, மேலும் பிள்ளை பெறும் ஆசையை, விட்டு விடுகின்றனர்.

ஒற்றைப்பிள்ளை என்பதால், அதற்கு ஏகமாய் முக் கியத்துவம் தரப்போக, சாப்பிடக்கூட பரிசு கேட்கின் றனர்.

எங்க காலத்திலெல்லாம், ‘எங்கே போற, எப்ப வருவேங்கிற..’ கேள்வி எல்லாம் கிடையாது. அப்போதெல்லாம், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., நீச்சல் குளத்தில் குளிக்க, 45 காசு கட்டணம்; அம்மா தருவார். அதை மிட்டாய் வாங்கித் தின்றுவிட்டு, நீச்சல் குளத்தின் பக்கத்தில் ஓடுகிற அடையாற் றில் குளித்து (உவ்வே என்கிறீர்களா… அப்போ, சுத்தமா இருக்குங்க!) வீட் டில், அம்மாவிடம் நீச்சல் குளத்தில் குளித்ததாக, போக்குக் காட்டி விடுவேன்; இக்காலத்தில் இது நடக்காது.

இன்றைக்கு, பிள்ளைகளை அக்கறையாய் வளர்க்கிறோம் பேர்வழி என்று, அவர்களது ஒவ்வொரு அசைவையும், ஏக மாய் கண்காணிக்கின்றனர் பெற்றோர். போதாக்குறைக்கு, தாத்தா – பாட்டிகள் வேறு!

ஒரு குழந்தைக்கு, மொழி புரிய ஆரம்பிக்கிற ஒரு வயதிலிருந்து, ‘டீன்-ஏஜ்’ எனப்படும், 19வயது வரை , 30,000 எதிர்மறைச் சொற்களை சொல்லியே, நம் பெற்றோர், பிள்ளைகளை வளர்ப்பதாகக் கண்டறி யப்பட்டுள்ளது. ‘அதைச் செய்யாதே, இதைச் செய் யாதே.’ என்று ஆரம்பித்து, நட்பான விலங்குகளைக் கூட, பயங்கர விலங்குகளாக பயமுறுத்துகின்றனர்.

கடமைமிக்க காவல்துறையினரையும், மக்கள் நலன்காக் கும் மருத்துவர்களையும் கூட, பயமுறுத்துவதற்கு பயன்ப டுத்துகின்றனர்.

‘ஊசியெல்லாம் ஒண்ணும் பண்ணாது.’ என்றுகூறி வளர்க்காமல், ‘ஐஸ் வாட்டர்குடிச்சே, சாக்லேட் தின்னேன்னுவச்சுக்க. அப்புறம் டாக்டர்கிட்டே கூட்டிக்கிட்டுபோய், ஊசி போடச்சொல்வேன்’ என்று, ஊசி யைகூட, பயமுறுத்தும் ஆயுதங்களின் பட்டியலில் சேர்த் து விட்டனர்.

‘கண்ணாடி டம்ளரைத் தொட்டேன்னா உதை விழும்; எத்த னைமுறை சொல்றது. எவர்சில்வர் டம்ளர்ல தண்ணி குடி ன்னு!’ வீட்டிலேயே, தீண்டாமைகளைச் சொல்லி தருகின் றனர்.

‘சுண்டுவிரலை உள்பக்கமாகமடி; அதன்மீது கண்ணாடி டம்ளரை உட்கார வை. டம்ளர், கீழே விழுந்து உடையாது…’ என்று, இயற்பியல் ஆசிரியர்க ளாக மாற, பெற்றோர் தயாரில்லை!

செய்யவேண்டியதை சொல்லித்தராமலும், அதற்கு விளக்கமும் தராமலும், பிள்ளைகளை வளர்ப்பதா ல், பிள்ளைகளின் அறியாமைகள் வளர்வதோடு, திறமைகளும் குன்றிப் போகின்றன.

பிள்ளைகளை, சாலையைக் கடக்க, கையைப் பிடித்துக் கொள்ளச் சொல் லலாம் தான்! ஆனால், இதற்கு வயது வரம்பு வேண்டாமா… வயது பிள் ளைகளையும் பச்சை பிள்ளைகளை நடத்துவதைபோல் நடத்தி, அவர்க ளை சார்ந்து வாழும் பிள்ளைகளாகவே ஆக்கி விடுகின்றனர்.

‘என் கையை விடு இரண்டு பக்கமும்பார். திடீ ரென்று ஓடிக்கடக்காதே! வாகனம், உன்னைக் கடக்கும் வரை காத்திரு. எதில் அவசரம் காட் டினாலும் பரவாயில்லை; சாலையில் அவசரம் வேண்டாம். நின்று நிதா னித்து க்கட…’ என்று இவர்களுக்கு ஒருபாடமே நடத்தப்படவேண்டாமா… சாலையைக் கடக்கவே, இந்த பெற்றோர் கற்றுத் தராதபோது, வாழ்க்கைப் பாதையைக் கடக்க, எப்போது கற்றுத்தருவதாக உத்தேசம்?

திருமண மண்டபங்களில் பார்க்கிறேன்… தங்க ளைவிட்டு, இரண்டடிகூட   தள்ளிப் போகக் கூடாதாம். பிள்ளைகளை இப் படி, இவர்கள் பார்வை படுகிற தூரத்தில் கூட நடமாட அனுமதிக்காமல், இந்த பெற்றோரின் அடைகாக்கும் குணம், போகப்போக அவர்கள் சுயமாக முடிவெடுக்கும் தன்மையையும் பாதிக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

‘எது ஒன்றையும், தங்கள் கண்ணசைவைத் தாண்டி அவர்கள் செய்யக் கூ டாது…’ என்று கட் டுப்படுத்தும் குணம், இன்னொரு நகல் பெற்றோர்போ லவே, பிள்ளைகளை ஆளாக்குகிறதே தவிர, இவர் களிடம் மேலாக, திறம்பட உருவாக வழி வகுப்பது இல்லை!

குழந்தைகள் நன்கும், சிறப்பாகவும் வளர்ந்து ஒளிர் வதை விரும்பாதவர், நம்முடைய எதிரணியினரா க இருக்கலாம். இத்தவறை, பெற்றோருமா செய்வது!

=>லேனா தமிழ்வாணன் (தினமலரில் எழுதியது)

Leave a Reply