கலைஞர் TV-யில் பங்கேற்று பேச உங்களுக்கு அரியதொரு வாய்ப்பு! – இன்றே உங்கள் பெயரை பதிவுசெய்யுங்க!
கலைஞர் TV-யில் பங்கேற்று பேச உங்களுக்கு அரியதொரு வாய்ப்பு! – இன்றே உங்கள் பெயரை பதிவுசெய்யுங்க!
இந்த உலகமே உங்களை, நீங்கள் பேசுவதை பார்த்து, கேட்டிட கலைஞர் தொலைக்காட்சியின் வாயிலாக
உங்களுக்கோர் அரிய வாய்ப்பு
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் “நெஞ்சு பொறுக்குதில்லையே” நிகழ்ச்சியில் பல்வேறு சமூக பிரச்சனைகளை கையிலெடுத்து, பாதிக்கப் பட்டவர்களையும் கல ந்து கொள்ளச் செய்து அவர்களுக்குரிய நீதியை கிடைக்கப் போராடும் நிகழ்ச்சியாக மக்களிடையே நல்லதொரு வரவேற்பினை பெற்று தனது வெற்றி பயணத் தை தொடர்ந்து கொண்டிருக்கிற து.
இந்நிகழ்ச்சிக்காக பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தில் உள்ள பலமாவட்டங்களிலிருந்தும் பெருவாரியான மக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை ஆணித்தர மாக பகிர்ந்து வருகின்றனர். இந்நிகழ்ச்சிக்கான தயாரிப்பு ஏற்பாடுகளையும், நிகழ்ச்சி மக்களுக்கேற் ற, அந்தந்த துறை சார்ந்த பிரமுகர்களை வரவழைத் து பேச வைப்பதிலும் திரு. கிருஷ்ணகுமார் திறம்பட செய்து வருகிறார். இந்நிகழ்ச்சியை வழக்கறி ஞர் ஜான் தன்ராஜ் அவர்கள் சீரிய முறையில் தொகுத்தளித்து வருகிறார். திரு.தம்பித்துதுரையும்
மிகச்சிறப்பாக இயக்கி வருகிறார்.
இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு மாதந்தோறும் அண்ணா அறிவாலயத்தில் உள்ள படப்பிடிப்பு அரங்கில் நடை பெற்று வருகின்றது. இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு, உங்களது கருத்துக்களை எடுத்து வைக்கவும், அல்லது பாதிக்கப்பட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற் று தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கவும் ஓர் அரிய வாய்ப்பினை கலைஞர் தொலைக்காட்சி அவர்களுக்கு அளிக்கிறது
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள்:
99628 89800
93814 60335
99520 30221
மார்ச் 05-06 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் நெஞ்சு பொறுக்குதில் லையே! நிகழ்ச்சிகளின் வீரியமிக்க தலைப்புக்கள்
படப்பிடிப்பு நாள்- 05.03.16 – சனிக்கிழமை-காலை -10.00 மணிக்கு
தலைப்பு 1- . அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? இல்லையா?
படப்பிடிப்பு நாள்; 05.03.16- சனிக்கிழமை –மாலை – 02.00 மணிக்கு
தலைப்பு 2 – தேர்தல் களத்தில் மக்கள் வாக்களிப்பது சாதனைகளை வைத்தா? இல்லை சந்தித்த சோதனைகளை வைத்தா?
படப்பிடிப்பு நாள்- 06.03.16- ஞாயிறு – காலை -10.00 மணிக்கு
தலைப்பு 3 –தமிழகத்தில் கெய்ல் நிறுவன எரிவாயு குழாய் திட்டத்தை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் செயல்படுத்த முடியுமா? முடியாதா?
படப்பிடிப்பு நாள்- 06.03.16- ஞாயிறு – மாலை – 02.00 மணிக்கு
தலைப்பு 4- போலி வாக்காளர்கள் மற்றும் வன்முறையின்றி ஜனநாயக முறையில் அமைதியான தேர்தல் சாத்தியமா? இல்லையா?
குறிப்பு: