Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கருச்சிதைவுக்கு காரணமாகிறதா உருளைக்கிழங்கு! – அதிர வைக்கும் அலசல்!

கருச்சிதைவுக்கு காரணமாகிறதா உருளைக்கிழங்கு! – அதிர வைக்கும் அலசல்!

கருச்சிதைவுக்கு காரணமாகிறதா உருளைக்கிழங்கு! – அதிர வைக்கும் அலசல்!

உருளைக்கிழங்கில் நம் உடலுக்கு தேவையான சத்துகள் அதிகம்  இருந் தாலும்

முளைவிட்ட மற்றும் பச்சை நிறத்தில் உள்ள உருளை க்கிழங்குகளை கருவுற்ற பெண்கள் உண்பதால் கருச் சிதைவு ஏற்படக்கூடும். பிறக்கும் குழந்தைகள் பிறவி க்குறைபாடுகளுடன் பிறப்பதற்கும் வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

உருளைக்கிழங்குகளை நீண்டநாள் சேமித்து வைப்ப தால் அவற்றில் முளைவிடுகின்றன. நல்ல உருளைக்கிழங்கோடு ஒப்பிடு ம்போது இவை ருசியாகவோ, ஆரோக்கியமானதாகவோ இருப்பதில்லை .  முளைவிட்ட உருளைக் கிழங்குகளில் காணப்படும் சாக்கோனைன் (aconChine) மற்றும் சாலனைன் (Solanine) ஆகியவை நச்சுப் பொருட்களைக் கொண்டு ள்ளன.

Solanine நச்சுப்பொருள் சிறிது இருந்தாலும் விஷமாக மாறிவிடும் அபாயம் ஏற்படுகிறது. விலங்குகள், பூச்சி கள், பூஞ்சைக்கு எதிரான இயற்கை பூச்சிக்கொல்லிக ளாக செயல்படும் இவை தாவரங்களுக்கு நன்மை தரு பவை. பூச்சிக் கொல்லிகளாக செயல்படும் இவற்றை மனிதன் உண்ணும் போது எத்தகைய விளைவுகள் ஏற்படும்.

சாக்கோனைனைவிட, சாலனைன் அதிக நச்சுத் தன் மை உடையது. சிறிதளவு உடலில் கலந்தாலும் தீவி ரமான பக்க விளைவை ஏற்படுத்தக் கூடியது. குடல் பாதையில் எரிச்சல் உண்டாக்கி பலவகை குடல் நோய்களுக்கு காரணமாகிறது. இதோடு, முளை விட்ட உருளைக்கிழங்கில் உள்ள மாவுப் பொருள் (Starch) சர்க்கரையாக மாறிவிடுவதால் உடல் நலத்திற்கு தீங்கானது.

உருளைக்கிழங்கின் இலை, தண்டு, கனிப்பகுதியை பயன்ப டுத்தக்கூடாது . கிழங்குப் பகுதியை மட்டும் பயன்படுத்த வே ண்டும். அடுத்ததாக பச்சை நிறத்திட்டுகள் உள்ள உருளை க்கிழங்குகளையும் மேல்தோல் சுருங்கி உள்ளவற்றையும் பயன்படுத்தக் கூடாது.

சூரியஒளிபடும் இடங்களில் அதிகநேரம் இருப்பதால் பச்சைநிறத்திட்டுக ள் உண்டாகின்றன. கிளைகோல்கலாய்ட் (Glycoalkaloid) இருப்பதால், இதுவும் தீங்கானதே. இவற்றை உபயோகிக்கா மல் அழித்துவிடுவதே சிறந்தது. நச்சுப் பொருட்கள் உள்ள முளை வந்த உருளைக்கிழங்குகளை சமைத்து சாப்பிடும் போது தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும்.

=>தமிழ்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: