Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கூட்ட‍ணிக் கூத்து – (கலக்குமா? கதறுமா? )

கூட்ட‍ணிக் கூத்து – (கலக்குமா? கதறுமா? )

கூட்ட‍ணிக் கூத்து – (கலக்குமா? கதறுமா? )

மார்ச் 2016 மாத நம் உரத்த‍ சிந்த்த‍னை மாத இதழில் வெளிவந்துள்ள‍ தலையங்கம்!

உலகக் கோப்பை டி20யைவிட விறுவிறுப்பானது எது? ஜேம்ஸ் பாண்ட் படங்களை விஞ்சும் திருப்ப‍ங்கள் கொண்டது எது? துப்ப‍றியும் கதைக ளைவிட

நம் விரல் நகத்தை கடிக்க வைக்கும் பரபரப்பான திரில்லர் எது? துல்லிய மாய் கணக்கிடும் நவீன கணக்கீட்டுச் சாதனங்களாலும் விடை காண முடியாத கணக்கு எது? தானும் குழம்பி மற்ற‍வர்களையும் குழப்பிக் கொ ண்டிருக்கும் தலையாயப் பிரச்சனை எது? எல்லா எதுக்களுக்கும் ஒரே விடை அதுதான் தேர்தல் கூட்ட‍ணி

வ‌ரலாறு படைத்த வயது முதிர்ந்தவர், அவர் வருவாரா… இவர் வருவாரா … என்று காத்திருப்பதும்… அடுத்த தலைமுறைக்கு தரலாமா… தானே வைத்துக்கொள்ள‍லாமா… என்று தயங்குவதும் மாற்ற‍ம் மாற்ற‍ம் என்று கெஜ்ரிவாலைப்போல ஒருவர் ஹைடெக் கனவில் மிதப்பதும் நாடு நல் லாயிருக்க எங்க நாலுப்பேருக்கிட்ட‍ வாங்க என்று நம்பிக்கையோடு ஒரு சிலர் கடை விரித்திருப்ப‍தும்… ஒரு பக்க‍ம் நடக்கும் காட்சிகள் …

மற்றொருப் பக்க‍த்தில் ஒரு தேசியக் கட்சி எப்ப‍டியாவது எங்களையும் ஆட்ட‍த்துல சேர்த்துக்க‍ங்க என்று அணித் தலைவரிடம் (கேப்டன் என்று நீங்கள் யாரையாவது கற்பனை செய்துகொண்டால் நாங்கள் பொறுப் பல்ல‍) கெஞ்சி … கெஞ்சி கும்பிடுவது அந்தோ பரிதாபம். இந்த கூட்ட‍ணிக் கூத்துக்களுக்கெல்லாம் சூத்திரதாரியானவர் (கேப்ட ன்னா சும்மாவா) என்ன‍செய்வார், எப்போதுசெய்வார் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்ச ம்.

சென்ற முறை எல்லாமே நாங்கள்தான் என்று தனித் து நின்று வெற்றிப் பெற்ற‍ கட்சியோ இவை எதையும் கண்டுகொள்ளாமல் எதிராளியின் விளையாட்டு முடிவுக்காக காத்திருக் கிறது. சென்ற முறை முதலில் விளையாட்டைத் துவங்கிய இந்த கட்சி இந்த முறை கடைசியில் தான் விளையாடும் போல தெரிகிறது.

இதற்கிடையில் புதுப்பிக்க‍ப்படும் சாலைகள்.. புதிய திட்ட‍ங்களுக்கான திறப்பு விழாக்களும் திடீர் திடீர் சலுகைகளும் … இத்த‍னை நாளாய் எங்கி ருந்தாய் என்று கேட்க வைக்கின்றன•

இந்த கூட்ட‍ணிக் கூத்த‍க்களெல்லாம் … இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்று கேட்க வைக்கின்றன•

இந்த கூட்ட‍ணிக் கூத்துக்களெல்லாம் மக்க‍ளின் நலனுக்காக இருந்தால் நாமும் நம்பிக்கையோடு காத்திருக்க‍லாம். ஆனால் எல்லாமே சந்தர்ப்ப‍ வாதமும், சுயநலமும், ஏமாற்றுத்தனமும் கொண் டவை என்பதால் எல்லாருமே திருடங்கடா என்ற பாடல் வரி மெய்தானோ என்று தோன்றுகிறது. சரி என்ன‍ செய்ய‍லாம்? முடியட்டும்! விடியட்டும்! ஆம் ஆட்சிக்காக எதையெல்லாமோசெய்து என்ன‍ வெல்லாமோ கொடுத்து மக்க‍ளை வாக்குகளை பறிப்பது முடிவுக்கு வரவேண்டும்.

ஆட்சிக்காக மக்க‍ளைப் பிடிப்ப‍து முடியட்டும், மக்க‍ளின் மனத் துக்குப் பிடித்த‍ நாட்டுக்கு நல்ல‍தை தேடும் ஆட்சி இனியாவ து விடியட்டும், இந்த உரத்த‍ சிந்தனை ஒவ்வொரு வாக்காள ரின் இதயத்திலும் ஓங்கி ஒலிக் க‍ட்டும்.

|/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|

இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்

திரு.உதயம் ராம் : 94440 11105

|//\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\

us wrapper

நம் உரத்த‍ சிந்தனை உங்கள் இல்ல‍ம் தேடி வர
இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்

ஆண்டு சந்தா – ரூ.150-
2 ஆண்டு சந்தா – ரூ.300-
5 ஆண்டு சந்தா – ரூ.750-
வாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000-
புரவலர் உறுப்பினர் – ரூ.7,000-
வங்கி மூலம் சந்தா தொகை செலுத்த‍…
இந்தியாவிலுள்ள‍ எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்த‍லாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்க‍ண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்த‍லாம். வெளியூரில் உள்ள‍வர்கள் ரூ.10- கூடுதலாக சேர்த்து செலுத்த‍ வேண்டும்
பெயர் – நம் உரத்த‍ சிந்தனை
வங்கி – இந்தியன் வங்கி
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
க‌ணக்கு எண்.401056844 (எஸ்.பி)
ஐஎப்எஸ்ஸி –
சந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவிக்க‍ வேண்டுகிறோம்.

|//\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: