Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விருந்தாளிகளை விரட்டுவது அல்ல‍து வரவிடாமல் தடுப்ப‍து எப்ப‍டி? – இது குடும்பத் தலைவிகளுக்கானது

அழையா விருந்தாளிகளை விரட்டுவது அல்ல‍து வரவிடாமல் தடுப்ப‍து எப்ப‍டி? – இது குடும்பத் தலைவிகளுக்கானது

அழையா விருந்தாளிகளை விரட்டுவது அல்ல‍து வரவிடாமல் தடுப்ப‍து எப்ப‍டி? – இது குடும்பத் தலைவிகளுக்கானது

எல்லா வீடுகளிலும் அழையா விருந்தாளிகளான சிலர் வந்து நம்மை தொல்லைகொடுக்கின்றனர். இவர்களை 

விரட்டுவது எப்ப‍டி?அல்ல‍து வீட்டிற்குள்ளேயே வரவிடாம ல் தடுப்ப‍து எப்ப‍டி? என்பதை இங்கு பார்ப்போம். குறிப்பாக‌- இது குடும்பத் தலைவிகளுக்கானது என்பதை நினைவில் கொள்க‌ 

கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களி ன் வீட்டிலும் அழையா விருந்தாளிகளான‌ எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்தி ருப்போம். ஒருசில இயற்கை பொருட்களைக் கொண் டே அவற்றை எளிதில் விரட்டலாம்.

எலி

எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது. எனவே புதினா வை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவ தைத் தடுக்கலாம்.
 
பல்லி

உங்கள் வீட்டுசுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா..? அப் படியெனில் வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை வையுங்கள். இதனால் அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும்.
 

சில வீடுகளில் ஈ அதிகம் மொய்க்கும். அப்படி உங்கள் வீட்டில் ஈ அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள். இல்லா விட்டால் லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெ ய்களை தெளித்துவிடுங்கள். இதனாலும் ஈக்கள் வருவ தைக்கட்டுப்படுத்தலாம்.
 
கொசுக்கள்

கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலை உதவும். மேலும் பல கொசு விரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்த து என்று ஆய்வுகளும் கூறுகின்றன.  எனவே உங்கள் வீட் டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலை யைக் கொண்டு தீ மூட்டுங்கள். இதனால் அப்போது வரும் புகையி னால் கொசுக்கள் அழிந்துவிடும்.

கரப்பான் பூச்சி

கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம். அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சி வரும் இடங்க ளில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்.
 
மூட்டைப் பூச்சி

மூட்டைப்பூச்சி உங்கள் வீட்டின் மெத்தையில் அதிகம் இருந்தால், வெங் காய சாற்றினை தெளித்து விட்டால், மூட்டைப்பூச்சிகள் அதன் வாசனை யில் அழிந்து விடும்.

.

=> சுதாகர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: