Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இவை அனைத்திலிருந்து மீண்டு, வாழ்வில் வளர்ச்சியுடன் வெற்றி அடைய சில‌ ஆலோசனைகள்

இவை அனைத்திலிருந்து மீண்டு, வாழ்வில் வளர்ச்சியுடன் வெற்றி அடைய சில‌ ஆலோசனைகள்

இவை அனைத்திலிருந்து மீண்டு, வாழ்வில் வளர்ச்சியுடன் வெற்றி அடைய சில‌ ஆலோசனைகள்

அன்புள்ள அம்மாவிற்கு,

நான், பட்டதாரி ஆண்; படித்து முடித்து, பல மாதங்கள் ஆகியும், இன்னும் சரியான

வேலை கிடைக்கவில்லை. காரணம், இன்டர்வியூ மீதான பயம். சிறுவயது முதலே கூச்ச சுபாவம் கொண்டவன் நான். யாரிடமும் எளிதில்பழகவோ, பேசவோமாட்டேன். இதனால் , எனக்கு நண்பர்கள் குறைவு. இப்போது கூச்சத்தோடு, பய மும் சேர்ந்துகொண்டது. முன்பெல்லாம் தெரியாத விஷயங் களை செய்யும் போது மட்டுமே பயம் ஏற்படும்; ஆனால், தற் போது தெரிந்த விஷயத்தையும், சிறப்பாக செய்ய வேண்டு மே என நினைத்து, பயம் கொள்கிறேன்.

சில மாதங்களுக்குமுன், உறவினர் பரிந்துரையில், ஒரு கம்பெனியில் வேலை கிடைத்தது. அந்த வேலையில், நான், சிறுதவறு செய்துவிட்டதால், கம்பெனிக்கு நஷ்ட ம் ஏற்பட்டது. ஆனால் அதுகுறித்து கம்பெனி கண்டு கொள்ளவில்லை என்றாலும், அந்த வேலைக்கு நான் லாயக் கற்றவன் என முடிவுசெய்து, வேலையைவிட்டு நின்றுவிட்டேன். இதேபோல், நிறைய செயல்களில், நானே என்னை விலக்கிக் கொள்கிறேன்.

தற்போது, என் நண்பனின் சிபாரிசில், ஒரு வே லையில் உள்ளேன். என் படிப்பிற்கு சம்மந்தம் இல்லாத வேலை தான் இது. இவ்வேலையில், எப் போதாவது என் பணி மாறும். அதுகுறித்து உயர் அதிகாரி விளக்குவார். உடனே அவ்வே லையைக் கற்று, செய்து தர வேண்டும். அவர், பணியைப் பற்றி விளக்கும் போது, என்னால் கவனிக்க முடிவதில்லை. இதனால், அவர் எரிச்சல் அடைகிறார். இந்த வேலையும் இழக்கும் தருவா யில்உள்ளது. இதுபோன்ற கவனச் சிதற ல், எனக்கு நிறைய விஷயங்களில் இருக் கிறது.

மேலும், யாராவது சாதாரணமாக மிரட் டினால் கூட பயந்து விடுகிறேன். ஒருவ ருடன் பேசும்போது, பிரச்னை ஏற்படுவ து போல் தோன்றினால், உடனே பயம் வந்து, அடிவயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பதுபோல் தோன்றுகிறது. இதுபோன்ற உணர்வை , நான் என் மேலதி காரியை சந்திக்கும் போதும், கூட்ட த்தில் பேச வேண்டிய கட்டாயத்தின் போதும், அடிக்கடி உணர் கிறேன். எப்போதும் எதிர்மறையான எண்ணங் களே மனதில் எழுகிறது. ஒரு செயலை செய்யும் முன், அதனால் ஏற்படும் தீமைகளே தெரிகிறது; இதனால், துணிச்சல் வருவதில்லை.

சிறு பிரச்னை என்றால் கூட, அப்பிரச்னை முடியும் வரை, வேறு எதைப் பற்றியும் யோசிப்பதில்லை. அதுபோலவே, யாராவது என்னைப் பற்றி தவ றாகவோ, கேலியாகவோ பேசினால் கூட, ‘ஏன் அப்படி பேசினார்கள் .. .’ என்று அதைப் பற்றி யே சிந்திக்கிறேன்.

ஒரு செயலை தனியாக செய்யும் போது, சிறப்பாக செய்கி றேன்; ஆனால், அதையே மற்றவர் மேற்பார்வையில் செய்யும் போது, பதற்றத்துடன் செய்து, சொதப்பி விடுகிறேன்.

பெரும்பாலும், நான் தனிமையில் இருப்பதால், அந்த நேரங்களில், என் வாழ்வில் நடக்காததை, மற்றவர் வாழ்வில் நடந்ததை, என் வாழ்வில் நட ந்தால் நான் என்ன செய்வேன் என்பது மாதிரி ஏதாவது கற்பனை செய்து யோசித்தபடியே இருக்கிறே ன். இப்போதெல்லாம் இதுபோன்ற கற்பனை களில் அதிக நேரம் செலவிடுகிறேன்.

இது, ஏதாவது மன நோயாக இருக்குமோ என்ற அச்சம் வந்து ள்ளது. இவை அனைத்திலிருந்தும் மீண்டு வந்து, என் வாழ் வில் வளர்ச்சி அடைய, தாங்கள் தான் எனக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

— இப்படிக்கு,
உங்கள் மகன்.

அன்புள்ள மகனுக்கு,

சதா எதையாவது பார்த்து பயப்படுவதற்கு ‘போபியா’ என்றுபெயர். வே லையில் பயம் ஏற்பட்டு, பணியை விட்டு நிற் பதற்கு, ‘வொர்க்பிளேஸ் போபியா’ என்றும், மற்றவர்களுடன் இணைந்து, ஒருவேலையை சிறப்பாக செய்ய முடியாமைக்கு, ‘சோஷியல் போபியா’ என்றும், நாம் நல்லவனாக இல் லையே அல்லது சிறப்பாக செயல்படமுடியவி ல்லையே என ஆயாசப்படுவதற்கு, ‘அடிலோ போபியா’ என்றும் தோல்விகளை கண்டு பயப் படுவதற்கு, ‘அடிசி போபியா’ என்றும், முடிவுகளை எடுக்க தெரியாமல் திணறுவதற்கு, ‘டிசைடோ போபியா’ என்றும் பெயர். மகனே… உன் னிடம் இத்தனை வகை போபியாக்களும் உள்ளன.

இதற்கெல்லாம் அடிப்படை காரணம், சிறுவய தில், உன் பெற்றோர் உன்னை ‘எதற்கும் லாயக் கில்லாதவன்’ என வசைபாடி வளர்த்திருக்கலாம். இளவயதில் நண்பர்க ளுடன் அதிகம்பழகாமல், தனித்தே இருந்ததும் ஒரு காரணம். நீ செய்த சில காரியங்கள், தவறாக போய், அடுத்தடுத்து நீ செய்யும் காரியங்களும் தோற்கும் என்ற மனப்பான்மையும், எதையும் புதிதாய் கற்றுக் கொள்ளும் ஆர்வமோ, விருப்பமோ உன்னிடம் இல் லாதிருக்கலாம். மொத்தத்தில், பெற்றோர், ஆசிரிய ர், நண்பர்கள் மற்றும் உன் குணாதிசயம் இவைகளே, உன் பின்னடைவு க்கு காரணம்.

நேர்காணலுக்கு செல்லும்போது, அறைக்குள் பிரவே சிப்பதிலிருந்து, அங்கிருப்போர் கேட்கும் கேள்விகளு க்கு பதில் சொல்வதுவரை, முன்தயாரிப்பு அவசியம். நேர்காணல் செய்வோர், என்னென்ன கேள்விகள் கேட்பர் என்பதை, மாதிரி வினாக்கள் தயாரித்து ஒத்திகை பார்க்க வேண்டும்.

பணி இடத்தில், முழுகவனமாக செயல்படுவதுடன், கூடியவரை தவறுக ள் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். சிறு தவறுகள் செய்தால், மேலதிகாரியிடம், ‘மன்னிக்கணு ம் சார், தவறு செய்துவிட்டேன்; இனி அவ்வாறு செய் யாமல் கவனமாக இருப்பேன்…’ என நேர்மையாய் கூற வேண்டும்.

தெரியாத பணியை மேலதிகாரி செய்யச் சொன்னால், ‘இந்த வேலை எனக்கு தெரி யாது; கற்றுத்தாருங்கள். சீக்கிரமாய் கற்றுக் கொள்வேன்…’ என மிடுக்காய் கூற வேண்டும். மற்றவர்கள் மேற்பார்வையிடும் போது, சொதப் பாமல் இருக்க, அவர்கள் உன்னைவிட அறிவி லும், அனுபவத்திலும் குறைந்தவர்கள் என்றும், அவர்களுக்கு இப்பணி யை குருபோல கற்றுத் தருகிறேன் என நீ எண்ண வேண்டும்.

போபியாக்கள் என்பவை, நம் கை கால்களை கட்டி போ ட்டிருக்கும் காகித சங்கிலிகள். உத்வேகத்துடன், ஒரு மித்த மனதுடன், துணிச்சலுடன் செயல்பட்டால், இவை களை எளிதாக அறுத்தெறியலாம்.

தினமும், உன்னை, நீ சுயவசியம் செய்து கொள். மனநல மருத்துவரிடம் சென்று, தகுந்த ஆலோசனைகள் பெறுவது நல்லது.

தன்னம்பிக்கை நூல்களை நிறைய படி; மூடுபனி விலகும்.

இன்று புதிதாய் பிறந்தோம் என நினைத்து, பாம்பு தன் சட்டையை உரிப்பது போல, உன் போபியாக்களை அகற்று.

மற்றவர்கள் வாழ்வில் நடந்த சிறப்பானவை, நம் வாழ்வில் நிகழ, நாம் என்னென்ன செய்ய வேண்டும் என, கற்பனை செய்து, கண்ணைத் திறந்து பெரிதாய் கனவு காண்.

ஒரு கோழைக்குள், மாவீனும், ஒரு முட்டாளுக்குள், ஜீனியசும். ஒளிந்திருக்கிறான். இருட்டுக்குள்தான் பிர காசம் ஒளிந்திருக்கிறது. கொல்லும் தன்மை நீக்கப்பட்ட பாம்பின் விஷம் தான், பாம்புக்கடிக்கு மருந்தாகிறது. எதிர்மறை எண்ணங்களுக்குள்தான், நேர்மறை எண்ணங்களு ம் பதுங்கி யுள்ளது.

தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி சாத்தியமாகும். எறும்பு ஊர கல்லும் தேயும். ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும். முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் மகனே!

— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத், அன்புடன் அந்தரங்கம், வாரமலர், தினமலர்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: