தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி இணைந்தது எப்படி? வெளிவராத அதிரடி தகவல்கள்
தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி இணைந்தது எப்படி? வெளிவராத அதிரடி தகவல்கள்
தமிழக அரசியலில் மிக முக்கியமான காலகட்டம் இது.வரும் 2016 சட்ட மன்ற தேர்தலுக்கு, எந்தக் கட்சி யார் தலைமையில் உள்ள கூட்டணியில்
இணையும் என்பது கடந்த ஒரு மாதமாக பெரும் பரபரப்புடன் கூடிய விவாதத்தை உண்டாக்கி வந்தது. அதிலும் விஜயகாந்த் எந்தக் கூட்டணி க்குச் செல்வார் என்று ஊடகங்களைக் காட்டிலும் திமுக தலை வர் கரு ணாநிதி அவ்வப்போது புதிய கணிப்புகளை கூறிவந்தார்.ஆனால் இறு தி வரை தேமுதிக அவர் பக்கம் சேராம லே மக்கள் நலக் கூட்டணி பக்கம் இணை ந்துவிட்டார். கடைசியில் பழம் பாலில் விழாமல் தேனில் விழுந்து விட்ட தாக ஆர்ப்பரிக்கிறார்கள் மக்கள் நலக் கூட்டணியினர்.கடந்த
வாரமே, தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில்தான் இணையும் என்று கணித்தும், விஜயகாந்த் தலைமையில் மெகா கூட்டணி உறுதியாகி றது என்றும் செய்திகள் வெளியாகி இருந்தது.
அதன்படியே தற்போது மக்கள் நலக்கூட்டணி, விஜயகாந்துடன் கைகோர்த்துள்ளது. இது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படு த்தியுள்ளது.
அதிமுக, திமுக அணிகள் உண்மையிலேயே இ த்தேர்தலில் அதிர்ச்சி அடைந்துதான் இருக்கின் றன. முதன்முதலாக தமிழக கம்யூனிஸ்ட் கட்சி கள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தேமுதி க ஆகியவை ஆண்ட மற்றும் ஆளும் கட்சியான திமுக, அதிமுகவை எதிர்த்து ஒருபுதியகளத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இது தமிழகத்தை பொறுத்தவரை மிகப்பெரிய சாதனைதான். இக்கூட்டணி அமைய வை கோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவள
வன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் வீண் போகவில்லை. திமுக, அதி முக கட்சிகளுக்கு மாற்று அணி உருவாக்குவ தில் வெற்றி கண்டு இருக்கிறார்கள் என்கிறார் கள் அரசியல் நோக்கர்கள். இத்தோடு மட்டும் நில்லாமல், வாக்காளர்களி டம் நம்பிக்கையை உருவாக்கும் வகையிலான மாற்று பிரசாரம், பூத் கமிட்டிகளை ஏஜெண்டுகளை அமைப்பதி ல் தீவிரம், ஓட்டுக்கு பணம் கொடுப்பதைக் கண்காணிக்கும் குழுக்கள் அ மைப்பது என்று பல்வேறு அதிரடிக
ளை மக்கள் நலக் கூட்டணி மற்றும் தேமுதிக கையாள உள்ளது. இப்போதைக்கு தேமுதி க 124 தொகுதிகளில் போட்டியிடுவது என் றும், மக்கள் நல க்கூட்டணி 110 தொகுதிக ளில் போட்டியிடுவது என்றும் முடிவு செய் யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த அணியில் ஜி.கே. வாசன், ஐ.ஜே.கே., புதிய தமிழகம் உள்ளிட்டகட்சிகள் இடம்பெற்றால், மக்கள் நலக்கூட்டணி தங்களின் தொகுதிக்கணக் குகளை மாற்றிக்கொள்ளும் என்றும் கூற ப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள்
இன்ன மும் நடந்து கொண்டுதான் உள்ளன. தமிழகம் முழு வதும் ஒரு கோடி இளைய தலைமுறை வாக்களர்க ளை இணைக்கும்பணியில் தீவிரமாகியுள்ள மக்க ள் நலக் கூட்டணி, விஜயகாந்துடன் இணைந்துள்ள தால் மேலும் உற்சாகமாகி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
– தேவராஜன், விகடன்