Wednesday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

MS-WORD-ல் உங்களுக்கு தெரிந்திடாத அறிந்திடாத கட்டளைகளின் பட்டியல்

MS-WORD-ல் உங்களுக்கு தெரிந்திடாத அறிந்திடாத கட்டளைகளின் பட்டியல்

MS-WORD-ல் உங்களுக்கு தெரிந்திடாத அறிந்திடாத கட்டளைகளின் பட்டியல்

ஒரு ஆவணமோ அல்ல‍து கோப்போ தயாரிக்க‍ நமக்கு பெரிதும் உதவுவ தும் MS-WORDதான். இந்த வேர்டில்

எளிமையாக கையாள‌ சில கட்ட‍ளைகள் கொடுத்துள்ள‍னர். அதிலும் கண் ட்ரோல் கட்ட‍ளைகள் மிகவும் பயனுள்ள‍வையாக இருந்து வருகின்றன• ஆனாலும் பலருக்கும் இது தெரிவதில்லை.

உங்களுக்கு தெரிந்திடாத அறிந்திடாத கண்ட்ரோல் கட்டளைகள்
Ctrl+a: ஆவணம் முழுவதையும் தேர்ந்தெடுக்க.
Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.
Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copyp).
Ctrl+d: ஓர் எழுத்தின் (Font) வடிவை மாற்றி அமைக்க.
Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.

Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y.

Ctrl+g: ஓரிடம் செல்ல.
Ctrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை அமைத்திட.
Ctrl+i: எழுத்து / சொல்லை சாய்வாக அமைக்க .
Ctrl+j: பத்தி ஒன்றை இருபக்கமும் சீராக, நேராக (Justify)அமைக்க.
Ctrl+k: ஹைப்பர் லிங்க் ஒன்றை ஏற்படுத்த.
Ctrl+l : பத்தி ஒன்றை இடது பக்கம் சீராக நேராக அமைக்க.
Ctrl+m: பத்தியினை இடதுபுறமாக சிறிய இடம் விட.
Ctrl+n: புதிய ஆவணத்தை உருவாக்க.
Ctrl+o: ஆவண‌ம் ஒன்றைத் திறக்க.
Ctrl+p: ஆவணம் ஒன்றை அச்சடிக்க
Ctrl+q: பத்தி அமைப்பை நீக்க.
Ctrl+r: பத்தியினை வலது புறம் சீராக, நேராக அமைக்க.
Ctrl+s: தானாக, ஆவணத்தை சேமிக்க‍ (Save while texting).
Ctrl+t:பத்தியில் இடைப்பட்ட இடத்தில் இடைவெளி அமைக்க.
Ctrl+u: டெக்ஸ்ட்டில் அடிக்கோடிட.
Ctrl+v: தேர்ந்தெடுத்ததை ஒட்டிட.
Ctrl+w: ஆவணத்தை மூடிட.
Ctrl+x: தேர்ந்தெடுத்ததை அழிக்க, நீக்கிட.
Ctrl+y: இறுதியாக மேற்கொண்ட செயல்பாட்டினை மீண்டும் மேற் கொள்ள.
Ctrl+z: இறுதியாக மேற்கொண்ட செயல்பாட்டிற்கு மாறாக மேற்கொள்ள.
பிற கட்ட‍ளைகள்,  அடுத்த‍ பதிவில் தொடரும்

One Comment

Leave a Reply