Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கைவிரல் சிகிச்சை'யைத் தினமும் தொடர்ந்து செய்து வந்தால்

இந்த எளிய ‘கைவிரல் சிகிச்சை’யைத் தினமும்  தொடர்ந்து செய்து வந்தால் . . .

இந்த எளிய ‘கைவிரல் சிகிச்சை’யைத் தினமும்  தொடர்ந்து செய்து வந்தால் . . .

ந‌மது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு நமக்கு பெரிதும்

உதவுவது நமது கை விரல்கள். வீட்டு வேலைகள் உட்பட பல இதர வேலைகளை செய்கையில் பெண் களின் கைகள் சொரசொரப்பாகவும், கடினமாகவும் மாறிவிடுகின்றன.

கைகள் சொரசொரப்பாக இருப்பதனால், கைகள் மட் டும் பாதிக்கப்படுவதில்லை. கைகளால் முகத்தைத் தேய்த்துக் கழுவும்போது, கண்களுக்குத் தெரியாத மெல்லிய கோடுகள் முகத்தில் உருவாகும்.

இதனால் நாளடைவில் முகம் தொய்வடையக்கூடும். எனவே, விரல்களின் மென்மையை காக்க வேண்டியது அவசியம்.

தினமும்இரவு ஒருபாத்திரத்தில், கைபொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் விள க்கெண்ணெய், ஒரு ஸ்பூன் கிளிசரின், ஒரு ஸ்பூன் உப்பு ( மெக்னீசியம் சல்பேட்) சேர்த்து, தண்ணீர் நன்கு ஆறும்வரை கைகளை அதில் மூழ்கும்படிவைத்திருக்கவும். இதனால் கைகள் மென்மையாவ துடன், கை வலி நீங்கி ரிலாக்ஸ் ஆகும்.

பின்னர் கைகளைத் துடைத்துவிட்டு, 1/2ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் அரை ஸ்பூன் தேன் எடுத்து தேய்த்துக் கொண்டு, கைகளை சர்க்கரையில் புரட்டவும். கை முழு வதும் சர்க்கரை ஒட்டிக்கொள்ளும்.

இப்போது இரண்டு கைகளையும் நன்கு சூடுபறக்கும் வரை தேய்க்கவும். இதனால் சர்க்கரைகரை யும். சர்க்கரையில் கிளைகாலிக் ஆசிட் இரு ப்பதால், இது கைகளில் உள்ள இறந்த செல் களை நீக்குவதுடன், சுருக்கங்களைப் போக்கி மலர்ச்சியாக்கும்.

கைகள் சொரசொரப்பாக ஆரம்பிக்கும், காலகட்டத்திலேயே தினசரி இந்த சிகிச்சையைத் தொடர்ந்தால், மென்மை மீட்கப்படு வதுடன் தொடர்ந்து மிருதுவாக இருக்கும்.
*
=> ரகுவரன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: