ஊழல் வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவை அம்மா என்றழைப்பதா?– சாமியார் அதிரடி பேச்சு
ஊழல் வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவை அம்மா என்றழைப்பதா? — சாமியார் அதிரடி பேச்சு
பெற்ற தாய்க்கு பிறகு அம்மா என்று அழைக்க கூடியவர் காரைக்கால் அம்மையார் தான். ஊழல் வழக்கில்
குற்றம் சாட்டபட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கும் ஒருவரை அம்மா என்று அழைப்பது, காரைக்கால் அம்மையார் பெயருக்கு நாம் செய்யும் இழுக்கு என்று திருவடிகுடில் சுவாமிகள் பேசியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜோதிமலை இறைபணி திருகூட்டத்தின் சார்பில் காரைக்கால் அம்மை யாரின் குரு பூஜை விழா நாச்சியார் கோவில் அருகே உள்ள கூகூரில் கொண்டாடபட்டது. அந்த விழாவில் திருகூட்டத்தின் நிறுவனர் திருவடி குடில் சுவாமிகள் ஆற்றிய ஆன்மீக சொற்பொழிவில், ”நாயன்மார்கள் பலரும் அறிந்துள்ள பெண்ணடியார்கள் மூவாரில் அம்மையார் என்று அழைத்து போற்றபடுபவர் காரைக்கால் அம்மையார்தான்.
இவரது பக்தின் மேன்மையால் சிவபெருமானே இவரை அம்மா என்று அழைத்தார். தகுதியுடையவர்களைதான் அம்மா என்று அழைக்கவேண் டும் என்று புராணங்கள் கூறுகிறது. அப்போதுதான் அம்மா என்ற வார்த் தையின் பொருளை நாம் முழுமையாக உணரமுடியும். ஆனால், தமிழக த்தில் என்ன நடக்கிறது என்றால், ஊழல் செய்து பெரும் அளவில் சொத்து சேர்த்த பொது வாழ்வில் அழுக்குடைய ஜெயலலிதாவை அம்மா என்று ஏராளமானவர்கள் அழைத்து வருகிறார்கள். எங்கள் அம்மா மீது ஊழல் வழக்கு நடக்கவில்லை சொத்து குவிப்பு வழக்குதான் நடக்கிறது என்று அவர் கட்சியைசேர்ந்த சிஆர்.சரஸ்வதி கூறுகிறார். ஊழல் செய்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒருவரை, பொது வாழ்வில் தூய்மை இல்லாத ஒருவரை அம்மா என்று அழைப்பதுடன் எங்கு பார்த் தாலும் அம்மா புராணம் பாடுவதால் அந்த சொல்லுக்கே மதிப்பில்லாம ல் போய்விடுகிறது. இதன் மூலம் காரைக்கால் அம்மையார் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்துகிறார்கள்.தன் அழகை துறந்து எலும்புடம்பாகிய பேய் உருவம் கேட்டு பெற்றதுடன், எளிமையை கடை பிடித்தவர் காரைக்கால் அம்மையார். அதனால்தான் அவரை அம்மா என்று இன்றும் அழைக்கிறா ர்கள். ஆனால், ஜெயலலிதாவோ ஆடம்பரத்தின் உச்சம். எளிமை என்றா ல் அவருக்கு என்னவென்றே தெரியாது. அவரை போய் அம்மா என்று அழைப்பது வேதனையின் உச்சம். அது மட்டும் இல்லாமல் மக்கள் மத்தி யிலும் அம்மா என்ற வார்த்தையை திணிக்கிறார்கள். இது கண்டிக்க தக்கது” என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.