ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பால் பின்வாங்கிய அட அதாங்க ஜகா வாங்கிய ராகவா லாரன்ஸ்!
ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பால் பின்வாங்கிய அட அதாங்க ஜகா வாங்கிய ராகவா லாரன்ஸ்!
முனி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காஞ்சனா திரைப்படம் எடுத்து, அதிலும் வெற்றி கண்ட ராகவா லாரன்ஸ், காஞ்சனா 2 படத்தை எடுத்து ரசிகர்கள் ஏகோபித்து ஆதரவை பெற்று இமாலய
வெற்றி கண்டார் இதற்கு பிறகு இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’.
இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் பிரம் மாண்டமாக தயாரித்துவருகிறது. வேந்தர் மூவிஸ் நிறுவனம் உலகம் முழுவதும் இப்படத்தை வெளி யிடுகிறது. இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்து ள்ளார். சாய்ரமணி இயக்கியுள்ள இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்து ள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகி ன்றனர். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.
இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதில் லாரன்ஸ் போலீஸ் உடையில் நடந்து வருகிறார். ரஜினியும் ராகவா லாரன்ஸும் என்ற தலைப்பில் இவரே இந்த புகைப்படத்தை வெளியிட்டு ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த புகைப்படத் தோடு ஒப்பிட்டு இணைய தளங்களில் இவரது வேண் டப்பட்டவர்கள் மூலமாக வேகமாக பரவச் செய்துள்ள தாக செய்தி வெளியாகியது. இதனால் ஒரு குறிப்பிட் ட ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பினை நேரடி யாகவும் கைபேசி மூலமாகவும் ராகவா லாரன்ஸ்க்கு தெரிவித்ததாகவும்
கூறப்ப டுகிறது
இதனைக்கண்ட ராகவா லாரன்ஸ், ரஜினி ரசிகர்களை சமாதானப்படுத்தும் நோக்கத்தில், ரஜினி இமயமலை அவர்தான எனக்கு முன்னாடி, அவருக்குமுன் நான் மிகச்சிறியவன்’ ஆக வே ‘ரஜினி சாருடன் என்னை ஒப்பிடாதீர்கள் என்று கூறி பின்வாங்கியிருக்கிறார் அட அதாங்க ஜகா வாங் கியிருக்கிறார். இதனால் இப்பிரச்சனை முடிவுக்கு வந்ததோடு அல்லாமல் ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பை மேலும் சம்பாதிக்காமல் தடுத்துள்ளதாகவும் செய்தி கள் வந்துள்ளன