Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினமும் காலையில் இஞ்சியை பச்சையாக கடித்து சாப்பிட்டு வந்தால்

தினமும் காலையில் இஞ்சியை பச்சையாக கடித்து சாப்பிட்டு வந்தால் . . .

தினமும் காலையில் இஞ்சியை பச்சையாக கடித்து சாப்பிட்டு வந்தால் . . .

அக்காலத்தில் இஞ்சி ஓர் மருத்துவப் பொருளாக பல நோய்களுக்கு சிகிச் சையளிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அத்தகைய

இஞ்சியை பெரும்பாலான உணவுகளிலும் நாம் சேர்த்து வருகிறோம். ஆனால் அந்த இஞ்சியை தின மும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது சாப்பிடு வதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா?

ஆம், இஞ்சியை தினமும் காலையில் சிறிது உட் கொண்டு வருவதன்மூலம் அதிலுள்ள நோயெதிர்ப்பு அழற்சிப்பொருட்கள் பல்வேறு நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். இங்கு தினமும் இஞ்சியை காலையில் வெறும் வயிற்றி ல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப் பட்டுள்ளன.

சர்க்கரை நோயாளிகள் காலையில் எழுந்ததும் ஒருசிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சிசாற்றி னை பருகினால், இரத்த சர்க்கரை அளவை கட்டு ப்பாட்டுடனும், சீராகவும் வைத்துக் கொள்ளலாம்.

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள். காலையில் இஞ்சியை சிறிது உட்கொண்டால், உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

உங்களுக்கு சில நாட்களாக சரியாக பசி எடுப்பதில்லை யா? அப்படியெனில் காலையில் சிறிது இஞ்சியை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் உங்களுக்கு பசியுணர்வு அதிகரிக்கும்.

நீங்கள் ஒற்றைத்தலைவலியால் கஷ்டப்படுபவராயின், சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவி னால், ஒற்றைத் தலைவலி நீங்கும்.

சளி இருமலுக்கு இஞ்சி நல்ல நிவாரணம் வழங்கும். அதற்கு நீரில் சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க, நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள சளி முறிந்து, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

பல்வலி இருக்கும்போது, இஞ்சி துண்டை ஈறுகளில் மசாஜ் செய்தால், நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால், நீரில் இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, அந் நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

இஞ்சி குமட்டல் மற்றும் வாந்தி வருவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, காலையில் ஏற்படும் சோர்வையும் இஞ்சி தடுக்கும்.

இஞ்சியைத்தட்டி நீரில்போட்டு கொதிக்கவைத்து இறக்கி, தேன் கலந்து பருக செரிமான பிரச்சனைகள் அகலும். அதிலும் காலையில் பருகினால், உங்கள் செரிமான மண் டலம் சுத்தமாகி, அதன் செயல்பாடு அதிகரிக்கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: