திருமணம் ஆகாத ஒரு பெண் இறந்தால் அவரது சொத்துகளுக்கு யார் வாரிசு? — சட்ட ஆலோசனை
திருமணம் ஆகாத ஒரு பெண் இறந்தால் அவரது சொத்துகளுக்கு யார் வாரிசு? — சட்ட ஆலோசனை
பரம்பரை சொத்தில், பெற்றோரின் சொத்தில், கணவனுடைய சொத்தில் பெண்களுக்கு
சொத்துரிமை உண்டு என்பதை பல பதிவுகளின்கீழ் பார்த்தோம். இப்போது திருமணமாகாத ஒரு பெண் இறந்து விட்டால், அவரது சொத்துக்களை யார் வாரிசு என்ற மிகப்பெரிய கேள்வி எழும்.
அதுபோன்ற திருமணம் ஆகாத ஒருபெண் இறந்துவிட் டால், அப்பெண்ணின் பெயரில் உள்ள சொத்துகளுக்கு யார் வாரிசாக அவரது பெற்றோரே வாரிசாக இருப்பார்கள். அல்லது பெற் றோர் அவர்கள் இல்லாதபட்சத்தில் அவரது தந்தை யின் வாரிசுகள், அப்பெண்ணின் சகோதர சகோதரி களே அந்த இறந்தபெண்ணின் வாரிசுகளாகக் கருத ப்பட்டு, சொத்துக்களும் அவர்வசம் ஒப்படைக்கப்ப டும். அவர் தாராளமாக தனக்குரிய பரிபூரண உரிமை களுடன் சொத்துக்களை ஆண்டு அனுபவிப்பதோ அல்லது விற்பனை செய்யவோ முழு உரிமை உடையவராவார்.
ஆனால், இறந்தபெண், தனக்குவேண்டிய நண்பரின் பெய ரிலோ வேறு ஒரு உறவினரின் பெயரில் தனது சொத்துக் கள் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ பிரித்து, உயிலோ அல்லது செட்டில்மெண்ட் பத்திரமோ எழுதி இருந்தால், அப்பெண் குறிப்பிட்ட அந்நபரே வாரிசுதாரராக கருதப்பட்டு, அச்சொத்தின் முழு உரிமையும் அவ்வாரிசுக் கே வழங்கப்படும். இதில் அந்த இறந்த பெண்ணின் பெற் றோரோ அல்லது சகோதர சகோதரிகளோ அல்லது வேறு உறவினர்களோ தலையிட உரிமை கிடையாது.
=>வழக்கறிஞர் கண்ணன்