Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வீடு மாற முயற்சி செய்தால் என் பிணத்தைத் தான் பார்ப்பீர்கள்- மிரட்டும் மகள்- திகைப்பில் தாய்

“வீடு மாற முயற்சி செய்தால், என் பிணத்தைத் தான் பார்ப்பீர்கள்!…”- மிரட்டும் மகள், திகைப்பில்… தாய்

“வீடு மாற முயற்சி செய்தால், என் பிணத்தைத் தான் பார்ப்பீர்கள்!…”- மிரட்டும் மகள், திகைப்பில்… தாய்

அன்புள்ள அக்காவுக்கு —

என் வயது, 41; எனக்கு, பிளஸ் 1 படிக்கும் ஒரே மகள் உண்டு. என் கணவர் சொந்த தொழில்செய்து, நஷ்டம்ஆனதால்,

வேலைக்கு செல்கிறார். நான், சிறிய அளவில் கடை வைத்துள்ளேன். இரு வரும் காலையில் சென் றால், இரவுதான் வீடு திரும்புவோம். சில சமயம், இரவு வேலை இருந்தா ல், அதிகாலை வந்து, பின், திரும்ப வேலைக்குச் சென்று விடுவார் என் கணவர்.

என் பிரச்னை என்ன வென்றால், நாங்கள் வாடகை வீட்டில் குடியிருக்கி றோம்; வீட்டு உரிமையாளர் இறந்து விட்டார். அம்மாவும், மகனும் மட்டு மே உள்ளனர். மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டனர். அந்த பையனுக்கு, 27 வயது; எங்கள் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவ ர்களிடம் சகஜமாக பழகினேன். ஒருநாள் அந்த பையன் என்னிடம் தவ றாக நடக்க முயற்சி செய்தான். ‘நான் உன் அக்கா மாதிரி; அலையாதே…’ என்று கண்டித்தேன். அவனும், ‘மன்னிச்சுடுங்க அக்கா… இனிமேல் இப்படி நடக்க மாட்டேன்…’ என்றான்.

அதன்பின், எந்த பிரச்னையும் இல்லாமல் சென்ற வாழ்க்கையில், ஒரு நாள் என் மகளின் ஸ்கூல் பையை திறந்தபோது, அதிர்ச்சி அடைந்தேன். அந்த பையனும், என் பெண்ணும் பழகுகின்றனர் என்று தெரிந்து, இடி விழுந்தது போல் ஆனது.

எங்கள் உலகமே என் மகள் தான். அந்த பையனுடன், என் பெண் சேர்ந்து எடுத்த புகைப்படம், காதல் கடிதங்கள் எல்லாம் கண்டுபிடித்தேன். என் மகளிடம் கேட்டதற்கு அலட்டிக் கொள்ளாமல், ‘ஆம்… அவனைத் தான் கல்யாணம் செய்வேன்; இல்லாவிட்டால் செத்து விடுவேன். வீடு மாற முயற்சி செய்தால் என் பிணத்தைத் தான் பார்ப்பீர்கள்…’ என்று மிரட்டு  கிறாள். அவள் பிடிவாதக்காரி; செய்தாலும் செய்து விடுவாள்.

எங்கள் குடும்பத்தில், எந்தபிரச்னை என்றாலும், என் அக்கா கணவர்தான் முன்னின்று தீர்ப்பார். அவர் காதுகளுக்கு இவ்விஷயம் சென்றால், கண் டிப்பாக அந்த பையனை சும்மா விடமாட்டார். என் கணவர் சாதுவானவர். இந்த பிரச்னையை எப்படி தீர்ப்பது? என் பெண்ணும் உறுதியாக உள்ளாள். எனக்கு அந்த பையனை பார்க்கவே அருவருப்பாய் உள்ளது.

இதிலிருந்து எப்படி மீள்வது? தயவு செய்து வழி சொல்லுங்கள். என் குடும்பத்தினருக்கு இந்த பிரச்னை தெரியாது.

— இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத அன்பு தங்கை.

அன்புள்ள சகோதரிக்கு —

பசுவையும், கன்றையும் ஒரே நேரத்தில் மேய்க்க ஆசைப் பட்டுள்ளான் வீட்டு உரிமையாளர் மகன். உன் கணவர் அதிகம் வீட்டில் தங்காதது, அவனுக்கு சபலத்தை கொடுத்துள்ளது.

ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அதிகம் பழகி, அவனுக்குள் ஈர் ப்பை விதைத்து விட்டாயோ? 27 வயது ஆகியும் திருமணம் ஆகாததால், செக்ஸ் வாய்ப்புகளை தேடத் துணிந்துள்ளான். நீ அவனை கண்டித்தது, அவனை உறுத்தியிருக்கலாம். அதனால், உன்னை பழிவாங்க, சந்தர்ப்பம் எதிர்பார்த்து இருந்திருக்கிறான்.

உன் மகளுக்கோ, எந்த ஆணை பார்த்தாலும், வயிற்றில் பட்டாம்பூச்சி கிளம்பும் வயது. நெருப்பு பற்றிக் கொள்ளும் என்ற பயம் இல்லாமல், குழந்தை தானே என்று அஜாக்கிரதையாய் இருந்துள்ளாய்.

வயதையும், உறவுமுறைகளையும் கணக்கில் கொள்ளாது, பெண்களை போகப் பொருளாய் பாவிப்பர் சில ஆண்கள். நீ தான் அவன் குணம் தெரிந் து, மகளை எச்சரிக்கை செய்திருக்க வேண்டும்.

உன் மகளின் காதல் விஷயத்தை, உன் கணவருக்கும், உன் அக்கா கணவ ருக்கும் தெரியப்படுத்து.

அந்த பையனின் படிப்பு மற்றும் வேலை பற்றிய, ‘நெகடிவ்’ குறைகளை உன் மகளுக்கு எடுத்துச்சொல். ’16வயதில் வரும்காதல்களில், 99% வெறு ம் இனக் கவர்ச்சியால் வருபவை. அவன் உன்னை காதலிப்ப து ஏதோ உள்நோக்கத்தோடு தான்…’ என்று கூறு.

பையனின் அம்மாவிடம் விஷயத்தைக் கூறி, அவனை கண்டிக்க சொல்வ துடன், உன் மகள் முன், உங்களை வீட்டை காலி செய்ய வற்புறுத்துமாறு கூறச் சொல். இதைச் சாக்காக வைத்து, வேறு வீட்டுக்கு குடி போய் விடுங் கள். உன் அக்காள் கணவரிடம் கூறி, அந்த பையனை வன்முறை இல்லா மல் கண்டிக்க செய்.

உன் மகளுக்கு தகுந்த அறிவுரை கூறி, ‘அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு படிப்பில் கவனம் செலுத்து; அதன்பின்பும் இந்த காதல் உயிர்த்திருந்தால், அவன் திருந்தி, நீ மட்டும் தான் வாழ்க்கை என உனக்காக காத்திருந்தால், உன் காதலுக்கு சாதகமான முடிவை எடுக்கிறேன்…’ எனச் சொல். இடை விடாத சாத்வீக, அகிம்சை முயற்சிகளால், மகள் மனதை ஆக்க ரீதியாய் திசை திருப்பலாம்.

உன் கணவரை அதிக நேரம் வீட்டில் தங்க சொல். நீயும், உன் கணவரும் மகளிடம் மனம் விட்டு நண்பர்கள் போல பேசுங்கள். அறிவுரையாக இல்லாமல் கனிவான, ரத்தின சுருக்க பேச்சாக இருக்கட்டும்!

— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத், அன்புடன் அந்தரங்கம், வாரமலர், தினமலர்

Leave a Reply