Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அடிக்கடி காராமணியை சமைத்து சாப்பிட்டு வந்தால்

அடிக்கடி காராமணியை சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .

அடிக்கடி காராமணியை சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .

பீன்ஸ் வகைகளில் கருப்பு பீன்ஸ், காராமணி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை உடலில்

உள்ள டாக்ஸின்கள் எனப்படும் ஒருவித‌ வேதிப்பொருளை வெளியேற்று வதோடு, தேவையற்ற கெட்ட கொழுப்புக்களையும் கரைத்துவிடும் தன்மை இந்த இவற்ற‍றிற்கு உண்டு. 

இவற்றை சமைத்து அடிக்கடி சாப்பிட்டால் விரைவி லேயே பசி எடுப்ப‍து மட்டுப்படும். இதன்மூலம் உண வு கட்டுப்பாடு தானாகவே வந்துவிடும். மேலும் உட லுக்கு தேவையான ஆரோக்கியமான சத்துக்கள் இந்த காராம ணியின் கொடிக்கிடக்கின்றது.

டிக்கடி சத்துமிக்க‍ இந்த‌ காராமணியை சமைத்து சாப்பிட்டால் தொற்று நோய்கள் எளிதில் அண்டாது.  இதயம், சிறுநீரகங்கள் உள்பட உடலின் முக்கிய உறுப்புகள் சீராக இயங்க அவசியத் தேவையான பொட்டாசியம் சத்தும் இதில் நிறையவே  உண்டு. எலும்புகளி ன் ஆரோக்கியம் காக்க கால்சியம், மெக்னீசி யம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகளும் இதில் உண்டு…’’

மேலும் பல மருத்துவ பண்புகளை இங்கு காண்போம்

*இதிலுள்ள நார்ச்சத்தானது எடைக்குறைப்புக்கு உதவி, நீரிழிவைக் கட்டுப்படுத்தி, இதய நோய்க ள் வராமலும் காக்கிறது.

* வயிறு, கணையம் மற்றும்  மண்ணீரல் தொட ர்பான பிரச்னைகளை குணப்படுத்தும் தன்மை இதில் இருக்கிறது. சீரான குடல்  இயக்கத்துக்கு உதவுகிறது. சிறுநீர் பாதை அடைப்பை சரிசெய்து, சிறுநீர் நோய்களையும் சரியாக்குகிறது.

*உலரவைத்த காராமணியை எடைக்குறைப்பு முயற்சியி ல் இருப்பவர்கள் அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் எளிதில் எடையையும்  குறைத்து, புரதக் குறைபாடு பிரச் னை வராமலும் காத்துக் கொள்ளலாம்.

* காராமணியில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ், இதயச் செயலிழப்பு நோய்கள் வராமல் காக்கிறது.

* வேறு எக்காயிலும் இல்லாத ஒரு மகத்தா ன தன்மை காராமணிக்கு உண்டு. இதில் உள்ள லிக்னின் சிலவகையான புற்றுநோய் ,  பக்கவாதம், ஹைப்பர் டென்ஷன் மற்றும் ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளிட்ட நோய் களில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.

*சரும அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் சி இதில் உண்டு. இவை 2ம் சரும செல் கள்  பழுதடைவதைத் தடுத்து, வயோதிகத் தோ ற்றம், சுருக்கங்கள் போன்றவை ஏற்படாமல் இளமையாக இருக்க உதவுகின்றன.

*தொடர்ந்து கூந்தல் உதிர்வு பிரச்னையால் அவ திப்படுவோர், காராமணியை பச்சையாகவோ, உலர வைத்ததையோ அடிக்கடி  சாப்பிடலாம். கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச்சத்து அதிகமுள்ள காரணத்தால் காராமணி சாப்பிடுப வர்களுக்கு கூந்தல் சீக்கிரமாகவும்  அடர்த்தியாகவும் வளர்வதைப் பார்க் கலாம்.

=> தோழி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: