Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்துக்கள் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய முக்கிய கடமைகள்! – ஆன்மீக அலசல்

இந்துக்கள் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய முக்கிய கடமைகள்! – ஆன்மீக அலசல்

இந்துக்கள் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய முக்கிய கடமைகள்! – ஆன்மீக அலசல்

இந்தியாவில் பல மதங்களும் எண்ண‍ற்ற‍ ஜாதிகளும் உள்ள‍ன• இந்த மதங்களில் மிகவும்

தொன்மையானதும், புனிதமானதுமானது எது என்றால் அது இந்துமதமே! இந்த இந்துமதத்தில் இருப்ப‍வர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக தினமும்தவறாமல் செய்ய‍ வேண்டிய முக்கிய கடமைகளான நமது முன்னோர்கள் வழிகாட்டியுள்ள‍னர். அதன்படி நாமும் நடக்க‍ பழக வேண்டும்.

இந்துக்களின் தினசரிக் கடமைகள்:

1.தினமும் சூரியன் உதிப்பதற்குமுன் படுக்கையிலி ருந்து எழுந்திருக்கவும் .

2. காலையில் எழுந்தவுடனும், நீராடிய பின்னும், உணவு கொள்ளும் போதும் இஷ்ட தெய்வத்தைச் சிந்திக்கவும்.

3.நெற்றியில் இந்து சமயச்சின்னம் (திருநீறு, குங்குமம், சந்தனம், திரு நாமம் – ஏதேனும்) அணியாமல் இருக்கக் கூடாது.

4.இறைவழிபாட்டுக்கு என, தனியே இடம் ஒதுக்கித் தவ றாது வழிபாடு செய்யவும். காலை- மாலையில் விளக் கேற்றி நறுமணப் புகை பரவச் செய்யும்.

5. சமய நூல்களை படித்தல் வேண்டும்.

6.படுக்கும்போது தெய்வத்தின்நினைவோடு படுக்கவேண் டும்

பொதுவான கடமைகள்;

1. வாரத்துக்கு ஒரு நாளேனும், குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

2. தியானம் பழக வேண்டும்.

3. பஜனை, சத்சங்கம், கதாகாலட்சேபம், சமயப் பேருரை நிகச்சிகளுக்குச் செல்ல வேண்டும்.

4. துறவிகள், ஞானிகள், மாடாதிபதிகளைத் தரிசனம் செய்ய வேண்டும்.

5. வீட்டில், நாம சங்கீர்த்தனம், சிறப்பு வழிபாடு போன்றவற்றை, அண்டைஅயலார்களின் ஒத்துழைப்புடன் நிகழ்த்த வேண்டும்.

6. வீட்டில் ஓம் படம் மாட்டி வைக்கவும்.

7. இந்துதர்ம பிரசார இயக்கங்கள் பத்திரிகைகளுக்கு ஆதரவு அளிக்கவும்.

8. புராண, இதிஹாஸ, தேவார, திவ்யபிரபந்த நூல்கள் கட்டாயமாக ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இருக்க வேண்டும்.

9. இந்து பண்டிகைகளை, வெறும் விழாக்களாகக் கருதாமல் தெய்வங்களோடு ஒட்டுறவு கொள்ளும் தருணங்களாக மதித்துக் கொண்டாட வேண்டும்.

10.அருகிலுள்ள அனாதை இல்லம், முதியோர் இல்லம், கண் பார்வையற்றோர், செவிகேளாதோர் சேவை இல்ல ங்களுடன் தொடர்புகொண்டு, இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.

11. பெற்றோர்களைத் தெய்வமாகப் போற்றிப் பணிந்து பணி விடை செய்தல் வேண்டும்.

12.வீட்டில், தரக்குறைவான சினிமாபாடல்கள் ஒலிக்க அனுமதிக்கக்கூடாது. பாலுணர்வு, வன்முறை, பழிக்குப்பழி, பேராசை ஆகிய தீய உணர்வுகளைப் பாராட்டும் புதினங்கள் – புத்தகங்களை வாங்கக் கூடாது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: