தரணி போற்றும் “தாம்பத்திய தட்சணாமூர்த்தி”! – அகிலமறியா ஆன்மீகத் தகவல்
தரணி போற்றும் “தாம்பத்திய தட்சணாமூர்த்தி”! – அகிலமறியா ஆன்மீகத் தகவல்
மும்மூர்த்திகளில் சிறப்புக்குரியவராக கருதப்படுபவர் சிவபெருமான் ஆவார். இவருக்கு தமிழகத்தில்
மட்டுமல்லாது இந்தியாவில் மட்டுமல்லாது உலகெங்கும் ஆங்காங்கே கோயில்களில் குடியிருந்து பக்தர்களுக்கு நல்லாசிகளை வழங்கி வருகி றார். அந்த வரிசையில் தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள சுருட்டப்பள்ளி என்ற இடத்தில் ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் சிவபெருமான் தட்சிணா மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். அதுவும் வேறு எங்கும் காணக்கிடைக்காத வகையில் இங்கு அமர்ந்து தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் பாவி த்து வருகிறார்.
சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனி வடிவங்களில் தட்சிணா மூர்த்தி வடிவம் முப்பத்தி இரண்டாவது வடிவமாகக் காட்டப்பட்டுள்ளது. தேவ குருவான பிருஹஸ்பதி, தட்சிணாமூர்த்தியின் அம்சமாகத் திகழ்வ தாக ஐதீகம் .ஆனால் இங்கு தாம்பத்திய தட்சணாமூர்த்தி திருவுருவம் எங்கும் பார்க்க முடியாதபடி அமைந்துள்ளது விசேஷம்.
எல்லா ஆலயங்களிலும் இருப்பதுபோல சுருட்டப்பள்ளி என்ற இடத்தில் ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் தட்சணாமூர்த்தி சனகாதி முனிவர் கள் சூழ கல்லால மரத்தினடியில் அமர்ந்து காட்சி தரவில்லை. அதற்கு மாறாக பதஞ்சலி, வியாகர பாதர்களுடன், ரிஷபாரூடராய் தேவி யை அனைத்த வண்ணம் சின்னமுத்திரையுடனும், ஞான சக்தியுடனும் காட்சி யளிக்கிறார். இத்திருத்தலத்தில் அம்பிகையின் பெயர் கௌரியாகு ம்.
= சுவலட்சுமி நாதன்