Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினம் ஒரு ரோஜாப்பூவை சாப்பிட்டு வந்தால்

தினம் ஒரு ரோஜாப்பூவை சாப்பிட்டு வந்தால் …

தினம் ஒரு ரோஜாப்பூவை சாப்பிட்டு வந்தால் . . .

ஒட்டுமொத்த‍ காதலர்களின் காதல் மலர் எது என்று சிந்தித்தால், நமது நினைவுக்கு சட்டென்று

வருவ‌து ரோஜா மலர்தான். இந்த ரோஜா காதலுக்கு மட்டும் பயன்படவில்லை இதன் நறுமணம் நமது மனத்தை லேசாக்க‍வும், இந்தம் இதழின் சுவை நமது உடல்ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது. இதன் எவ் வாறு நோய்க்கு மருந்தாகிறது என்பதை பார்ப்போம்.

ரோஜா துவர்ப்பும் இனிப்பும் கலந்த‌ சுவையுடையது. தினம் ஒருரோஜா பூவீதம் சாப்பிட்டுவந்தால் ரத்தத்துடன் வரும் மல கழிவு அதாவது சீதபேதி என்கிறநோயை இது குணப் படுத்துகிறது. மேலும் நீண்டகாலம் மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு இந்த ரோஜாப்பூ ஒரு அருமையான மருந்து.

இது ஒரு சிறந்த மலமிலக்கியாகவும் பயன்படுகிறது. உடம்பு உற்சாகமாக இருப்பதற்கு நம் பல விலை உயர்ந்த வைட்டமின் மாத்திரைகள் அல்லது டானிக்குகளை மருத்துவரை ஆலோசித்து வாங் கிக்கொள்கிறோம். ரோஜாபூ, இயற்கை அளித்த உற்சாக டானிக் என்பது பலருக்கு தெரியாது. உட லுக்கு சுறுசுறுப்பை தரக் கூடிய ஒரு அற்புதமான மூலிகை பூ இந்த ரோஜாப்பூ.

ரோஜாப்பூ மிக எளிமையாக கிடைக்கக்கூடிய ஒரு வகை பூ. ஹைப்ரைட் ரோஜாவை பயன்படுத்தாமல் நாட்டுரோஜா அல்லது பன்னீர் ரோஜாவை பயன்படுத்துவது மிகவும் நல்ல து. எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடியது இந்த நாட்டு ரோஜா அல்லது பன்னீர் ரோஜா. நம் வீட்டின் நிலத்திலோ அல்லது தொட்டிகளிலோ வைத்து தின ம் ஒரு ரோஜாப்பூவை சாப்பிட்டு வந்தால் நம் வயிற்றில் உள்ள புண்கள் ஆறிவிடும்.

நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது. இதில் வைட்ட மின் சி அதிகம் உள்ளதால் அடிக்கடி நோய்வாய்ப்படாமல் இருக்கமுடியும். உடல்சூடு தணிய ரோஜாநீர் ஊறல் பயன் படுகிறது. ரோஜாநீர் ஊறல் என்பது ரோஜா இதழை 6 லிரு ந்து 8 மணிவரை நீரில் ஊரவைக்கவேண்டும் அப்படி வை க்க ரோஜாவிலிருக்கும் சாறு நீரில் இறங்கிவிடும் இதுவே ரோஜா நீர் ஊரல் என்று அழைக்கப்படுகிறது.

=>மா   மலர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: