Wednesday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிச்சையெடுத்து பணக்காரர்களான TOP 5 பிச்சைக்காரர்கள்! – இது இந்தியாவில்தானுங்க!- வியத்தகு விஷயம்

பிச்சையெடுத்து பணக்காரர்களான TOP 5 பிச்சைக்காரர்கள்! – இது இந்தியாவில்தானுங்க!- வியத்தகு விஷயம்

பிச்சையெடுத்து பணக்காரர்களான TOP 5 பிச்சைக்காரர்கள்! – இது இந்தியாவில்தானுங்க!- வியத்தகு விஷயம்

கடின உழைப்பாலோ அல்ல‍து சட்ட‍த்திற்கு புறம்பாகவோ பெரும்பொருள் சம்பாதித்து பணக்கார‌ர்கள் பட்டியலை

பார்த்திருப்பீர்கள். படித்திருப்பீர்கள் கேள்விப்பட்டி ருப்பீர்கள். ஆனால் பிச்சையெடுத்து பெரும் பொருள் ஈட்டி பணக்காரர்களான முதல் 5 இடத்தை பிடித்த‍ பணக்கார பிச்சைக்காரர்களை பற்றித்தான் இங்கு நாம் காணவிருக்கிறோம்.

1. பாரத் ஜெயின்

பணக்கார பிச்சைக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் மும்பை யை சேர்ந்த பாரத் ஜெயின். தற்போது 49 வயதாகும் ஜெயினுக்கு மும்பை பரேல் பகுதியில் 2 பிளாட்டுகள் சொந்தமாக இருக்கிறது.ஒரு பிளாட்டின் மதிப்பு 70 லட்ச ரூபாய். அதோடு சொந்தமாக ஜுஸ் கடையை வாடகைக்கு விட்டு அதில் இரு ந்து மாதம் 10 ஆயிரம் ரூபாயை வாடகை யாக சம்பாதிக்கிறார். இவரது மொத்த சொத்து மதிப்பு 2 கோடிக்கும்மேல்.

2. கிருஷ்ணகுமார் கீதே

இந்த பட்டியலில் 2வது இடத்தை பிடிக்கும் பிச்சைக் காரரும் மும்பையை சேர்ந்தவர்தான். இவரது பெயர் கிருஷ்ணகுமார் கீதே. இவரது தினசரி வருமானம் 1500 ரூபாய். இவருக்கு மும்பை புறநகர் பகுதியான நாலா சோப்ராவில் சொந்த பிளாட் உண்டு. இங்கு தான் இவர் குடும்பத்தி னருடன் வசித்து வருகிறார்.

3. சர்வாதியாதேவி

இந்தியாவின் மூன்றாவது பணக்கார பிச்சைக்காரராகஇருப்பவர் பாட்னா வை சேர்ந்த சர்வாதியாதேவி. பாட்னா நகர ரயில்களில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் பிச் சை எடுக்கத் தொடங்கினார். அதில் கிடைக்கு ம் வருமானத்தை வைத்து தனது மகளுக்கு ஜாம்ஜாம் என்று திருமணம் செய்துவைத்தார் . இன்சூரன்ஸ் பாலிசிக்கு மட்டும் ஆண்டுக்கு 36 ஆயிரம் ரூபாயை பிரீமியமாக சர்வாதியா தேவி கட்டுகிறார் என்றால் பார்த்துக் கொள் ளுங்களேன்.

4. சம்பாஜிகாலே

சம்பாஜிகாலே என்பவரும் மும்பைய சேர்ந்த பிச்சைக்காரர்தான். இவரு க்கு தினசரி வருமானமாக ஆயிரம் கிடை க்கிற து. மும்பையில் விரார் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசி த்துவருகிறார். இது தவிர ஷோலாப்பூர் மாவட்டத்தில் 2 சொந்த வீடுகளும் உள்ள ன. இந்த தொழிலை மிக்க மகிழ்ச்சியுட ன் பார்ப்பதாக தெரிவிக்கிறார் சம்பாஜி காலே…

5. லட்சுமிதாஸ்

இந்த பட்டியலில் 5வது இடத்தை பிடிக்கிறார் கொல்கத்தாவை சேர்ந்த லட்சுமிதாஸ். கடந்த 1964ஆம் ஆண்டு தனது 16வது வயதி ல் பிச்சை எடுக்கத் தொடங்கிய லட்சுமி தாசுக்கு, வங்கி அக்கவுண்ட் உண்டு. போலியோவால் பாதிக்கப்பட்ட லட்சுமி தாஸ்,ஒரு சேஞ்சுக்காக பிச்சை எடுக்கத் தொடங் கினார். அதில் சேர்ந்த வருமானத்தை கொண்டு கொல்கத் தாவில் வங்கியில் கணக்கு தொடங்கினார். தற்போது 64 வயதான அவருக்கு வங்கி சார்பாக கிரெடிட் கார்டும் வழங்கப்பட்டுள்ளது.

=>வாடஸ் அப் தகவல்

Leave a Reply