Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாம்பழம் பற்றிய சில எச்ச‍ரிக்கைத் தகவல்கள்! – விழிப்புணர்வு அலசல்

மாம்பழம் பற்றிய சில எச்ச‍ரிக்கைத் தகவல்கள்! – விழிப்புணர்வு அலசல்

மாம்பழம் பற்றிய சில எச்ச‍ரிக்கைத் தகவல்கள்! – விழிப்புணர்வு அலசல்

கோடைவெயிலை எந்தளவிற்கு வெறுக்கிறோம் அந்தளவுக்கு விரும்பும் பழம், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி

சாப்பிடும் பழம், அதுதான் மாம்பழம். இதில் இந்த மாம் பழத்தில் அதீத சத்துக்கள் உண்டு. ஆனால் ஆரோக் கியத்திற்கு வித்திடும் இந்த மாம்பழம், சில பேராசை கொண்டு வியாபாரிகளால் மனிதர்களுக்கு ஆரோக்கி ய சீர்க்கேட்டை உண்டாக்குகின்றன என்றால் நம்ப முடி கிறதா?

கால்சியம் கார்பைடு:

இது ஒரு ரசாயனப் பொருள். சுத்தமான ரசாயனப் பொருள் வெண்மை நிறமாகவும், சற்று கலப்பட மான நிலையில் கருப்புகலந்த சாம்பல் நிறத்துட னும் இருக்கும். வெள்ளைப் பூண்டின் வாசனை சிறிதளவு இருக்கும். இதில் ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் ஹைட்ரைடு போன்ற நச்சுப்பொருட்க ள் இருக்கும். இவற்றின் மீது ஈரம் பட்டவுடன் அசிட்டிலின் என்ற வாயுவை வெளியேற்றுகின்ற து. இவ்வாயு பழங்களைப் பழுக்கவைக்கின்றது. இதன் விலை கிலோ ரூ.25-30 வரை இருக்கும். ஒரு கிலோ இவ்வுப்பைக் கொண்டு சுமார் 200 கிலோ வரை மாம்பழங்களை பழுக்க வைக்க முடியும். தேவையான அளவு கார்பைடு உப்பை ஒரு பேப்பரில் கட்டி பழப்பெட்டிகளை லாரியி லோ குடோனிலோ அடுக்கும் போது அதனுள் வைத்து விட்டால் 24-48 மணி நேரத்திற்குள் பழங்களின் மேற்தோல் முழுவதும் ரகத்திற்கு ஏற்றவாறு கலர் மாறிவிடும். முற்றிய காய்களி லுள்ள ஈரம் மற்றும் காய்கள் சுவாசிக்கும் போது ஏற்படக்கூடிய வெப்பத்தாலும் காய்கள் எளிதில் கலர் மாற உதவுகின்றன.

பழுக்கும் முறை:

முற்றாத காய்களை பழுக்க வைக்க சற்று அதிகமாக கற்கள் வைக்கவேண்டும். கற்க ள் மூலம் பழுத்த பழங்களின் மேல்தோல் மட்டுமே மஞ்சள் நிறமாக மாறும். அதன் உள்ளே எந்தவிதமான ரசாயன மாற்றம் இன்றி அப்படியே இருக்கும். அதனால் இனிப்பு சுவை குறைந்து பழங்கள் மணமின்றி இருக்கும். இயற்கையிலேயே பழுத்த பழங்களின் மேற்தோல் ஒரே சீராக கலர்மாறி இருக்காது. ஆனால் கார்பைடு உபயோகித்து பழுக்க வைத்த பழங்களின் மேற்தோல் ஒரே சீராக மஞ்சள் நிறமாகத் தோற்றமளிக்கும். மணம்குன்றி இருக்கும். இதை வைத்தே கல் வைத்து பழு க்க வைத்த பழங்களைக் கண்டறியலாம். இந்த வேதிப்பொருள் மேலைநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

உடல்நலக்கேடு:

கால்சியம் கார்பைடிலுள்ள ஆர்சனிக் மற்றும் பாஸ் பரஸ் ஹைட்ரைடு உட லுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வை. இதன் அளவு அதிகமாகும்போது புற்றுநோய் வர வாய்ப்பு ள்ளது. சுமார் 33%-35% அசிட்டிலின் வாயுவை ஒருவர் சுவாசித்தால் 5-7 நிமிடங்களில் மயக்கமடையலாம். கார் பைடு உபயோகித்து பழுக்க வைத்த பழங்களை உண்ப தால் வாந்தி, பேதி, நெஞ்சில் எரிச்சல், குடற்புண், கண்க ளில் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் உணவை விழுங்குவதில் சிரமம் போன்ற உடல் நலக்கேடுகள் உண் டாகலாம். தொடர்ந்து இவ்வாறு பழுக்க வைத்த பழங்க ளைச் சாப்பிட்டால் தூக்கமின்மை, தலை வலி, குறைந்த ரத்த அழுத்தம் போன்ற உடல்நலக் கேடுகள் உண்டாகும். கர்ப்பகாலத்தில் பெண்கள் கண்டி ப்பாக செயற்கையாக பழுக்க வைத்த பழங்களை உண்ணக்கூடாது. பழங்களின் மேற்தோல் ஒரே சீராக மாறி இருந்தால் அது கல் வைத்து பழுக்க வைத்தது என்பதை கண்டறியலாம். தெரிந்தோ தெரியாமலோ கல் வைத்து பழுத்த பழங்களை வாங்கினால் தண்ணீரில் 5 நிமிடம் நன்கு கழுவ வேண்டும். பழத்தை அப்படியே சாப்பிடாமல் தோ லை நீக்கிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி உண்ணலாம். இப்பழங்களை அதிக நாட்களுக்கு சேமித்து வைக்கஇயலாது. மாம்பழசீசன் துவங்கி ய உடனே சந்தைக்குவரும் பழங்கள் பெரும்பாலு ம் கல் வைத்து பழுக்க வைத்ததாக இருக்கலாம். பொதுவாகவே ஜூன்-ஜூலை மாதங்களில்சந்தை க்கு வரும் பழங்கள் இயற்கையாகவே பழுக்கவைத்த வையாக இருக்கும்.

கொ.பாலகிருஷ்ணன், பேராசிரியர் (பயிர் வினையியல்),
கு.சிவசுப்பிரமணியம், பேராசிரியர் மற்றும் தலைவர்,
விதை நுட்பவியல் துறை, வேளாண்மைக் கல்லூரி,
மதுரை-625 104.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: