Friday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருமணத்திற்குமுன் இளம்ஜோடியினர் கவனத்தில்கொள்ள‍ வேண்டிய சில ரகசியத்தகவல்கள்- ஓரலசல்

திருமணத்திற்குமுன்  இளம்ஜோடியினர்  கவனத்தில்கொள்ள‍ வேண்டிய சில ரகசியத்தகவல்கள்- ஓரலசல்

திருமணத்திற்குமுன்  இளம்ஜோடியினர்  கவனத்தில்கொள்ள‍ வேண்டிய சில ரகசியத்தகவல்கள்- ஓரலசல்

இந்த பூமியில் மனித பிறவி எடுத்த‍ ஒவ்வொருவருக்கும், தனது வாழ்க்கை பற்றிய

ஆசைகளும் கனவுகளும் இலட்சியங்களும் இருக்கி ன்றன• அதிலும் இத்திருமணபந்தம் என்பது ஆயிரம் கனவுகளுடன் ஆரம்பமாகிறது ஒவ்வொரு ஜோடி யின் திருமண வாழ்க்கையும்! ஆனால் திருமணத்தி ற்குப்பின், அடுக்கடுக்கான பிரச்சனைகளால் கருத் து மோதல்களுடன் வாழும் தம்பதிகளே அனேகம்.

விவாகரத்து கோருபவர்களும் அதிகரித்துவருகிறார்கள். இந்த பிரச்சனை களுக்கெல்லாம் என்ன காரணம்? திருமணத்துக் கு முன்பே எல்லா வகையிலும் ஒருஜோடி திரும ண பந்தத்திற்கு தயாராகாதது தான் காரணம் என்கிறது புதிய ஆய்வு!

இளம் ஜோடிகள் திருமணத்திற்கு முன்பு எப்படி தயாராக வேண்டும், திருமணத்திற்குப் பின்பு பிர ச்சனைகளை ஏற்படுத்தும் விஷயங்கள் எவை என்பதில் எப்படி தெளிவு பெறுவது? என்பது பற்றி அந்த ஆய்வு சொல்லும் உண்மைகளை அலசுவோம் வாருங்கள்!

திருமணத்திற்கு முந்தைய கவுன்சலிங்:

‘பெண்ணிடம் கொஞ்சம் பேசவேண்டும்’ என்று பெண் பார்க்கச்செல்லும் இளைஞர்கள்கேட்பது வாடிக்கை. கொஞ்சமல்ல நிறையவே பேசவேண்டும் என்கிறது நவீன ஆய்வு. திருமணஜோடிகள் தங்களுக்குள் பேசிக்கொள்வது மட்டுமல்லா மல், இருவரும் என்னென்ன ஆசைகள், நோக்கங் கள், எதிர்பார்ப்புகளுடன் திருமண பந்தத்தில் இணைகிறார்கள், அவர்கள் இருவருக்கும் இடை யே உறவு ஒத்துவருமா என்பதை தகுந்த மனநல ஆலோசகர் முன்னிலையில் கவுன்சலிங் பெற்று திருமண பந்தத்தில் இணையவேண்டும் என்கிற து அந்த ஆய்வு.

ஆமாம் திருமணத்திற்கு பின் முட்டி மோதிவிட்டு கவுன்சலிங் செல்வதை விட, திருமணத்திற்கு முந்தைய கவுன்சலிங் இருவ ரது மணவாழ்விலும் பூங்காற்று வீச புதிய பாதை யை காட்டும் என் கிறார்கள் ஆய்வாளர்கள். காதலர் களுக்கும் இந்த கவுன்சலிங் கட்டாயம் என்றும் அந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

என்னென்ன விஷயங்களை இளம் ஜோடியினர் கவனிக்க வேண்டும் என்பது பற்றிய ஆய்வு கூறும் பட்டியல் இனி…

எதிர்பார்ப்புகள்:

ஆசைகளுடனே இளம்ஜோடி இல்லறத்தில் இணைகிறது . இதில் எதிர்பார்ப்புகள் இருவருக்கும் இருக்கும். துணை யின் எதிர்பார்ப்புகள், ஆசைகள் என்ன என்பது இருவரு க்கும் தெரிந்திருக்க வேண்டும்.

பொதுவாகவே ஜோடிகள் ஆசைகளை பகிர்ந்துகொள்வ துண்டு. ஆனால் எதிர்பார்ப்புகளில் எது நியாயமானது, எது நடைமுறைக்கு சாத்தியமானது என்பது பற்றிய தெளிவுவேண்டும். இதற்குத்தான் கவுன்சலிங் தேவைப்படுகிறது.

நிறைவேறாத, அதிகபட்ச எதிர்பார்ப்புகளைசுமந்து கொண்டு வாழ்க்கை பயணத்தை தொடங்கினால், வெறுப்பும், மன அழுத்தமும் எளிதில் தொற்றிக் கொ ள்ளும். பிறகு அதுவே பிரச்சினைகளின் வேராக இரு ந்து பிரி வினைக்கு காரணமாகிவிடும்.

பலநேரங்களில் துணைவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பது துணைவிக்கு ம், துணைவியின்எதிர்பார்ப்பு துணைவருக்கும் வெளிப்படையாக தெரியாததால்கூட பிரச்ச னைகள் வளர்வதுண்டு.

பழைய நடத்தைகள்:

தம்பதிக்குள் பிரச்சினையை உருவாக்கும் முக் கியமான காரணி, திருமணத்திற்கு முந்தைய நடத்தைகள். மனம்விரும்பாத அல்லது தெரிந்தோ தெரியாமலோ செய்து விட்ட ஒரு தவறால், மனதில் குற்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கு ம். அது எப்போது தனது துணைக்கு தெரிய வருமோ?என்ற உறுத்தல் வாழ்க்கையை பாதிக்கும். வேறு யாராவது குறுக்கிட்டு உண்மைகளை சொல்லி வாழ்க்கையை நாசமாக்கிவிடுவார்களோ? என்ற பய உண ர்வுகூட எழும்.

அதற்காக ‘மனம் விட்டு பேசுகிறேன்’ என்று கடந்த கால விஷயங்களை எல்லாம் சொல்லி பாவ மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. திருமணத் திற்கு பின் இருவரும் எப்படி வாழவேண்டும், எப்படி உண்மையாக இருக்கவேண்டும் என்பதே முக்கியம்

கடந்தகால உண்மைகள் அனைத்தையும் சொல்லி விட இயலாது என்பதை இருவரும் புரிந்திருக்க வேண்டும். என்றாவது ஒருநாள், நம்மைப் பற்றிய எதிர்மறை ரகசியம் யார் மூலமாகவோ துணைவரு க்கு தெரிய வந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற பக்குவ த்தையும் இருவரும் பெற்றிருக்க வேண்டும்.

பல மகிழ்ச்சியான தம்பதிகள்கூட இந்த இடத்தில் தான் தடம்மாறி விடுகிறார்கள். கடந்தகால கசப்பு கள் நிகழ்கால இன்பங்களை இல்லாமல் செய்து விடக் கூடாது. கடந்த காலத்தைவிட வாழும் காலம் தான் முக்கியம்.

விட்டுக்கொடுத்தல்:

விட்டுக்கொடுப்பது வாழ்க்கையில் பல சந்தோஷங்க ளுக்கு வழிவகுக்கும். ஆனால் யார் விட்டுக்கொடுப்பது ? எவற்றை விட்டுக்கொடுப்பது? என்பதில் தெளிவு இல் லாததால்தான் தம்பதிகளிடம் கருத்து வேறுபாடு ஏற் படுகிறது. சில நேரங்களில் விட்டுக்கொடுத்தல் சுயமரி யாதையை பாதிக்கும் விஷயமாக இருக்கும்.

அந்த நேரத்தில் மற்றவர் எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டு இறங்கி வர வேண்டும்.

எப்படிப்பட்ட பிரச்சினைகள் அடிக்கடி வருகிறது, இதை யெல்லாம் தவிர்க்க என்ன வழி என்பதை இருவரும் யோசித்து அதற்கேற்ப ஒருவருக்கொருவர் விட்டுக் கொ டுக்கலாம். பிரச்சினைகளை உருவாக்கும் சூழல்களை தவிர்க்கலாம்.

சந்தேகம்:

தேவை இல்லாமல் சந்தேகப்படுவது, கற்பனை செய்து விஷயங்களை மிகைப்படுத்துவது இதெல்லாம் குடும்ப வாழ்க்கை யில் பிரச்சினைகளை பெரிதாக்கும். சந்தேகங்க ளை அமைதியாககேட்டு தெளிவுபடுத்துவது தவறு களை திருத்திக் கொள்வதன்மூலமாக சந்தோஷ மாக வாழலாம்.

சந்தேகத்தை என்ன செய்ய வேண்டும், எப்படி விரட்ட வேண்டும் என்பது பற்றி கவுன்சலிங்கில் சிறந்த தீர்வுகள் வழங்கப்படும்.

மற்றவர் தலையீடு:

தம்பதிகள் இருவரும் மன ஒற்றுமையுடன் இரு ந்தாலும் குடும்பநபர்களால் கருத்துவேற்றுமை ஏற்படலாம். மற்றவர்களின் செயல்களுக்கு நாம் குற்றவாளியாக்கப்படலாம். அந்நேரத்தில் சமாதானப்படுத்துவது, சமாளிப்பது எல்லாம் தனித்திறமை. இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க ஒருவர் துணை, மற்றொருவருக்கு தேவை.

குழந்தையில்லாத தம்பதிகளாக இருந்தால் மற்றவர்கள் தலையீடும், அறிவுரைகளும் தவி ர்க்க முடியாது. சிலநேரம் ஆலோசனைகள் வழ ங்குவோம் என்று மேலும் நோகடித்து விடுபவ ர்களும் உண்டு.

இதுபோன்ற சமயங்களில்…

தம்பதியர் ஜாக்கிரதையாக இருக்க வேண் டும். ஒருவருக்கொருவர் ஆதரவாக செயல் பட வேண்டும். வெளி நாடுகளைப் போன்று  திருமணத்திற்கு முந்தைய கவுன்சலிங் பிரபலமாக வில்லை. சிங்கப்பூரில் கவுன்ச லிங் அலுவலகத்தில் முன்பதிவுசெய்து விட் டு புதுமணதம்பதிகள் காத்திருக்கிறார்கள். இவர்களுக்குஅவர்களின் மனநிலைக்கேற் ப குடும்ப சூழலுக்கேற்ப தகுந்த ஆலோச னைகள் வழங்கப்படுகிறது

அது அவர்களுடைய திருமண வாழ்க்கை யை காப்பாற்றும் என்று நம்புகிறார்கள். திருமண பந்தத்தில் வசந்தம் வீச  இளம் ஜோடிகளும் தகுந்த கவுன்சலிங்கை பெற லாம்!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: