Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜோதிடம் குறிப்பிடும் 27 நட்சத்திரங்களுக்குரிய இளம்பெண்களின் சிறப்புக்களும் பண்புகளும்!

ஜோதிடம் குறிப்பிடும் 27 நட்சத்திரங்களுக்குரிய இளம்பெண்களின் சிறப்புக்களும் பண்புகளும்!

ஜோதிடம் குறிப்பிடும் 27 நட்சத்திரங்களுக்குரிய இளம்பெண்களின் சிறப்புக்களும் பண்புகளும்!

ஜோதிட சாத்தித்தில் அசுவினி, கிருத்திகை, ரோகினி, மிருக சீரிசம், திருவாதிரை, பரணி, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய

27 நட்சத்திரங்களை குறிப்பிட்டுள்ள‍னர். இந்த நட்சத்திரத் தில் பிறந்த ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு சிறப்புக்க ளும், பண்புகளும் இருக்கின்றன வாம். இங்கு நாம் 27 நட்சத்திரங்களை உடைய 27 இளம்பெண்களின் சிறப்புக்க ளையும் பண்புகளையும் இங்கு காண்போம்.

1. அசுவினி:

கவர்ச்சிமிக்கவர், காருண்யம் கொண்டவர், கனிவுடைய வர், பரிசுத்தமும், பாசமும் நிரம்பியவர், காம வேட்கை மிக்கவர், கடவுள் பக்தி உடையவர்.

2. பரணி:

பரிசுத்தமற்றவர், சண்டை, சச்சரவு, வஞ்சகம் மிக்கவர், திரை மறைவில் தீமை புரிபவர், கொடியவர், குரோதம் புரிபவர்.

3. கிருத்திகை:

கொள்கைபிடிப்பற்றவர், அழகும் அங்கலட்சணமும், பண்பும் பரிசுத்தமும் கொண்டு பெரியோரை மதிப்பவர், அன்பும் ஆதரவும் கொண்ட மக்களால் புரிப்படைவர், தாம்பத்திய ஐக்கியத்தை காப்பவர்.

4. ரோகினி:

நேர்மை, உண்மை, கடும் உழைப்பு, அன்பு உடையவர், கணவரோடு அன்போடும் ஆதரவோடும் பழகுவார், இனி மையாகபேசுவர், தானதர்மம் செய்வார், மிகுந்த செல்வம் உடைய வராக, திகழ்வார்.

5. மிருகசீரிசம்:

சுத்தம், சுகாதரமானவர், அழகும், அங்கலட்சணமும், மதிப்பும், மரியாதை யும், ஆடை, ஆபரண யோகமும் பெற்றவர், அருசுவைப் பிரியர் செல்வமு டையவர்.

6. திருவாதிரை

குரோதகுணமும், நயவஞ்சகமும், ஆத்திரமும், பகை வரை அழிக்கவல்ல வல்லமையும், குற்றம் புரிபவ ரும் தூய்மை அற்றவரும் ஆவார்.

7. புனர்பூசம்:

பண்பும், பரிசுத்தமும், அடக்கமும், தரும சிந்தனையும், செல்வாக்கும், கருணை மற்றும் காருண்யம் மிக்கவர்.

8. பூசம்:

சுகபோக சுவையாளர், வீடு, நிலம், வாகனம் வளம் படைத்தவர்.

9. ஆயில்யம்:

அலுத்து ஆர்ப்பரிக்கும், சுகாதாரமற்ற, ஆபாச வார்த்தைக ளை பிரயோகிக்கும், செய்யத் தகாத செயலை புரியும் விசுவாசம் அற்ற மாதர்.

10. மகம்:

ராஜயோகம், சுகபோகமும், தீயவர் தொடர்புடைய, உயர் வர்க்கத்திற்கு மண்டியிடுபவர்.

11. பூரம்:

சந்தோஷ, சல்லாபம் மிக்க, மக்கட்பேரால் பூரிப்படை யும், செல்வமும், செல்வாக்கும் படைத்த, நீதிநெறியுடன் வாழும் பண்பும் பரிசுத்தமும் காப்பவர்.

12. உத்திரம்:

சரச சல்லாப பிரியர், மக்கப்பேறும், செல்வாக்கும் உடைய வர், குடும்பத்தை பாதுகாப்பவர், உத்திரமாய் வாழ நினைப் பவர்.

13. அஸ்தம்:

வனப்பும், வசீகரமும், அழகும், அங்கலட்சணமும் பொருந் திய, நுண் கலையில் வல்ல சுக போகி.

14. சித்திரை:

அணியும், ஆபரணமும், வனப்பும், வசீகரமும், அழகும் பொருந்திய சிறந்த மனிதர்.

15. சுவாதி:

எதிர்ப்பைவெல்லுகிற, நல்லோர் இணக்கத்தால் நன்மைபெறும், பண்பும் பரிசுத்தமுமிக்க சுகபோகி, மக்கப்பேரால் பூரிப்படைவர்.

16. விசாகம்:

சாஸ்திர சம்பிரதாயங்களோடு குலதர்மத்தைக் காப்பவர், அறிவாற்றல், பேச்சுத் திறன்மிக்க அழகும் அங்கலட்சண மும் பெற்றவர், தீர்த்தயாத்திரை பிரியர், கடவுள் சேவை செய்பவர்.

17. அனுஷம்:

கணவனுக்கு ஏற்ற பதிவிரதை, தியாக குணமும், வனப்பும், வசீகரமும், பண்பும் பரிசுத்தமும், பாராளும் பாக்கியமும்பெற்றவர், பொதுநல சேவை வாதி, ஆடை, அணி, அலங்காரப் பொருள்மிக்கவர், மதக் கோட்பாடுகளை மதிப்பவர்.

18. கேட்டை:

சத்தியநெறி காப்பவர், சகல சுகபோகி, கணிவும், காருண்யமும், பண்பும் பாசமும்மிக்கவர், சுற்றம் விரும்பி.

19. மூலம்:

கொடுமை நிறைந்தவர், வெறுப்பும் விகல்பமும் மிக்கவர், ஏழையால் ஏங்கி, நலிவு உறுபவர், உறவை பகைப்பவர்.

20. பூராடம்:

அழகும், ஆற்றலும், அங்கலட்சணமும், பண்பும், பரி சுத்த மும் உடையவர், நற்செயல்புரிபவர், குடும்பத்தில் சிறந்தவர், நேசம் உடையவர்கள், தானம் செய்பவர்கள், சுகதுக்கம் எதுவானாலும் மனமுவந்து அனுபவிப்பவர் கள்.

21. உத்திராடம்:

பெறும், புகழும் பெருவாழ்வும், கனிவும், காருண்யமும் மிக்கவர், சந்தோ ஷ சல்லாபி, கண வனுக்கு ஏற்ற பதிவிரதை.

22. திருவோணம்:

அழகு, அங்கலட்சணம், வனப்பு, வசீகரம் பொருந்திய, தயாள குணம், தார்மீக சிந்தனை, நம்பிக்கையும் நாண யமும், தியாகமும் மிக்கவர்.

23. அவிட்டம்:

வீடு, நில, வாகன லாபம், பெருந்தன்மை படைத்தவர், ஆடை, அணி, ஆபரண, அறுசுவை பாக்கியம் பெற்றவர்.

24. சதயம்:

நியாமமும், நீதியும், நேர்மையும், நேசமும் மிக்கவர், காம குரோதங்களை அடக்குபவர், மூத்தோரை மதிப்பவர்.

25. பூரட்டாதி:

சமுதாய உயர் அந்தஸ்துடைய பொன்பொருள் போகம் மிக்க, தார்மீக சிந்தனையும், தரும குணமும் படைத்த வர், அறிவு ஆற்றல் மிக்க அருளாளர்.

26. உத்திரட்டாதி:

மாண்புமிக்க, பாசமுடைய பதிவிரதை, குலதர்மம் காக்கும் அறிவுஆற்ற ல் படைத்த சந் தோஷ சல்லாபி.

27. ரேவதி:

சாஸ்திர, சமூகம், சம்பிரதாயம் மதிப்பவர், உயர்லட்சியம் உடைய நேச பாசம் காப்பவர், அழகு, அங்க லட்சணம், வனப்பு, வசீகரம் பொருந்திய வர், எதிரியை வெல்பவர், வாகன வளம் உடையவர்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‌!

-v-

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம் whatsapp, Facebook மற்றும் பல சமூக வலைதளங்களில் share செய்யுங்கள்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: