Wednesday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கலைஞர்- சாதி, மதம், மொழி போன்றவைகளை கடந்தவர்! – அதிர்ச்சியில் நடிகர் சூர்யா …

கலைஞர்- சாதி, மதம், மொழி போன்றவைகளை கடந்தவர்! – அதிர்ச்சியில் நடிகர் சூர்யா உதிர்த்த‍ வார்த்தை

கலைஞர்- சாதி, மதம், மொழி போன்றவைகளை கடந்தவர்! – அதிர்ச்சியில் நடிகர் சூர்யா உதிர்த்த‍ வார்த்தை

சூர்யா பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திக்கு அவர் வெளியிட்டுள்ள தனது

அறிக்கையில் மறுப்பு தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது,

மலேசியா தமிழ்ப்பத்திரிகையில் எனக்கே தெரியாத என்னைப் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மதம் சார்ந்த நிகழ்வு நடைபெற இருப்பதாக வும், அதில் நான் கலந்து கொள்ள லட்சக்கணக்கில் பணம் கேட்டதாகவும் செய்திவெளியாகியுள்ளது. சமூகவலைதளங்களி ல் இச் செய்தி பலரால் பகிரப்படுகிறது.

இப்படி ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய தகவல் கூட எனக்குத் தெரியாது. கலந்து கொள்ளும்படி யாரும் என்னை அணுகவும் இல்லை. கலைஞர் கள் சாதி , மதம், மொழி போன்ற எல்லா எல்லைகளையும் கடந்தவர்கள். கலைத்துறையில் இருக்கிற நான் மதம் தொடர்பாக நடக்கிற ஒரு நிகழ் வில் நிச்சயம் கலந்து கொள்ள சம்மதித்து இருக்க மாட்டேன்.

சமூகவளர்ச்சி, மாற்றம், விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வுகளில் ஆர்வமாக கலந்துகொள்கிற நான், அதற்காக எப்போதும் பணம் பெற்றதில்லை. பணம் வாங்கிக் கொண்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ள கூடாது என்கிற கொள்கைஉடையவன் நான். அப்படி இருக்க, ஒரு நிகழ்ச் சியில் கலந்துகொள்ள நான் பணம்கேட்டதாக வந்த செய்தியில் துளியளவும் உண்மையில்லை.

இதுபோன்ற செய்திகள் வருவது வருத்தமளிக்கி றது. என்மீது அன்புகொண்ட அனைவருக்கும் என் வேண்டுகோள். இனி இதுபோன்ற தவறான நோக் கத்தோடு இடம்பெறும் செய்திகளை புறக்கணித் து என்னுடைய நல்ல முயற்சிகளுக்கு ஆதரவளி க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

படித்த செய்தி

One Comment

  • அவர் இந்து தானா? அல்லது ஜோ தீர்மானத்திற்கு பின், மத சார்பற்றவர் ஆகி விட்டாரா?

Leave a Reply