Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"இனி நான் நடிக்க‍ மாட்டேன்"! – முழுக்கு போடும் சந்தானம்

“இனி நான் நடிக்க‍ மாட்டேன்”! – முழுக்கு போடும் சந்தானம்

“இனி நான் நடிக்க‍ மாட்டேன்”! – முழுக்கு போடும் சந்தானம்

அஜித்துடன் நடிக்க விரும்பாத சந்தானம்!    

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த சந்தானம், முதன் முதலில்

சிம்புவின் ‘மன்மதன்’ படத்தில் அறிமுகம் ஆனார். அதைதொடர்ந்து நகைச்சுவை வேட ங்களில் நடித்துவந்தார். ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இதன் பிறகு தமிழ் படங்களில் சந்தானத்துக் கு முக்கிய இடம் கிடைத்தது. இந்த நிலையி ல் அரசியல் காரணங்களால் தமிழ் சினிமா வை நடிகர் வடிவேலு விலக்கி வைக்க‍ப்பட் டார்.

இதனால் சந்தானத்தின் மார்க்கெட் சூடுபிடிக்க தொட ங்கியது. இவர் இல்லாத படம் இல்லை என்றநிலை உருவானது. மற்ற நடிகர்களுடன் காமெடி வேடங்களி ல் நடித்த சந்தானம் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் இரண்டு காமெடி ஹீரோக்களில் ஒருவர் ஆனார். அதன்பிறகு வல்லவனுக்கு புல் லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் கதா நாயகனாக நடித்தார். இப்போது ‘தில்லுக்கு துட்டு’ என்ற படத்தில் சந்தானம் நடித்து இருக்கிறார். இது விரைவில் திரைக்கு வருகிறது.

இந்நிலையில்ஏற்கனவே, அஜித்தின் வீரம் படத்தில் நடித்த சந்தானத்தை அடுத்து அஜித் நடிக்க இருக்கும் அவரது 57வது பட த்தில் நடிக்க அணுகி உள்ளனர். ஆனால் அதில் காமெடியனாக நடிக்க விரும்ப வில்லை.

இதுபற்றி கூறிய சந்தானம்.. “எல்லோருக்கும் வாழ்க் கையில் அடுத்த கட்டத்துக்குபோகவே விரும்புகிறார் கள். காமெடி படங்கள் நிறைய வருகி ன்றன. ஆனால் இதிலேயே நீண்ட காலம் நிலைத்திருக்க விரும்பவில்லை” என்றும் காமெடியனாக இனி நான் நடி க்க‍மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். விஜய்-ன் தெறி படத்திலும் காமெடி வேடத்தில் சந்தானம் நடிக்க சம்மதிக் கவில்லை. கதாநாயனாக நடிக்கும் படங்களின் கால்ஷீட் பாதித்து விடக்கூடாது என்பதற்காக வே அஜித் படத்தையும் ஏற்கவில்லை என்று கூறப் படுகிறது.

இதனால் நகைச்சுவை கதாபாத்திரத்திற்கு முழுக் கு போட்டுவிட்டு தொடர்ந்து கதாநாயகனாக வலம் வர விருக்கிறார் நகைச்சுவை நடிகர் இல்லைஇல்லை கதாநாயகன் சந்தானம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: