குறளோவியம் தந்தவருக்கு குறள்வழிப் புதுக்கவிதை
2006 சூலை மாத தமிழ்ப்பணி மாத இதழில் உங்கள் நண்பன் விதை2விருட்சம் ராக• சத்தியமூர்த்தி ஆகிய நான், எழுதி வெளிவந்த,
கலைஞர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை
குறளோவியம் தந்தவருக்கு குறள்வழிப் புதுக்கவிதை
அறிஞர் அண்ணாவின் நெஞ்சம் நிறைந்த
ஆருயிர்த் தம்பி நீ
இன்னமுது நூல்களைத் தமிழில் படைத்திட்டு
ஈன்றவளைக் குளிர்வித்த குளிர் நிலவு
உறவு, நட்பு என்ற இரண்டிலும்
ஊரார் போற்றும் நியாயத் தராசு
என்றுமே இளைஞன் நீ – உனை
ஏளனம் செய்வோர்க்கு சிம்மசொப்பனம்
ஐயம் தெளிப்பதில் முத்தமிழகராதி – பொது நலன்
ஒன்றே குறிக்கோளாய்க் கொண்டவனே!
ஓராயிரம் கோடி இதயங்களில் என்றும் அழியா
ஔவையின் அமுதமொழி நீ
கலைத்தாயின் இளைய மகன் நீ
காவிய உலகின் நாயகனே
கிழட்டுச் சிங்கமென்று சிலர் ஏசுவர்
கீற்றுக்கூரையில் நின்று புலம்புவர்
குற்றமுள்ள நெஞ்சின் குறுகுறுக்கும் இந்த
கூக்குரலுக்கு செவி சாய்க்காது
கெடுதல் நினைப்போரை வீதியில் நிறுத்திட
கேடு செய்வோரை தண்டித்திட
கைகள் இரண்டு போதாதென்று எண்ணினால்,
கொடியவர் நெஞ்சைப் பிளந்திட
கோடான கோடி கைகள் இங்கே இணையும்
– விதை2விருட்சம் (ராசகவி) ராக• சத்தியமூர்த்தி-Cell:9884193081