Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனைவியிடம் கணவன் நல்ல‍ பெயர் எடுக்க‍ சில ஆலோசனைகள்

மனைவியிடம் கணவன் நல்ல‍ பெயர் எடுக்க‍ சில ஆலோசனைகள்

மனைவியிடம் கணவன் நல்ல‍ பெயர் எடுக்க‍ சில ஆலோசனைகள்

அந்த காலத்தில் எல்லாம், கணவனோ அல்ல‍து மனைவியோ, தங்களுக் குள் 

இருப்ப‍து எவ்வ‍ளவு பெரிய பிரச்சனை களாக இருந்தாலும் சரி, அதனை பேச்சு மூலமாக தீர்த்தோ அல்ல‍து விட்டு கொடுத்தோ வாழ்ந்தனர். ஆனால் இன்றைய தலைமுறை தம்பதிகளில் பலர் விவாகரத்துநோக்கி செல்வதற்கான முக்கிய காரணம், இவர்களு க்கு மத்தியில் இருக்கும் புரிதல் இன்மைதான்.

நீங்கள் சம்பாதிக்கும் பணத்திலோ, அதைக் கொண்டு நீங்கள் வாங்கி தரும், புடவை, நகை, ஃபேஷன் உபகரணங்கள் போன்ற பரிசுகளையு ம் தாண்டி. நீங்கள் அவருடன் செலவழிக்கும் நேரம் தான் மனைவிகள் அனைவரும் எதிர் நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பரிசு. இதை இந்த தலைமுறையில் பல ஆண்கள் புரிந்துக் கொள்வதில்லை.

இந்நாட்களில் பலர் விவாகரத்து நோக்கி செல்வதற்கான முக்கிய கார ணம், தம்பதி மத்தியில் இருக்கும் புரிதல் இன்மை தான். இந்த புரிதல், ஒருவர் பற்றி ஒருவர் அறியாதி ருப்பது போன்றவை உண்டாக காரணியாக இருப்பது சரியாக நேரம் ஒதுக்கி பேசாமல் இருப்பது தான். இது போன்ற பிரச்சனைகள் எழாமல் இருக் கவும், உங்கள் மனைவியை மகிழ்விக்கவும் உதவும் வழிகளை பார்க்கலாம். …

பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், வீடு துடைத் தல் என எந்த வேலையாக இருந்தாலும், சின்ன சின்ன உதவிகள் செய்துகொடுக்க மறக்க வேண்டா ம். இந்த சின்ன வேலை உதவிகள் உங்கள் மனைவியை பெருமளவு மகிழ்ச்சியடைய உதவும் என்பதில் துளியும் சந்தேகம் தேவையில்லை.

மேலும், நீங்கள் இது போன்ற வேலைகள் செய்து கொடுப்பதை தம்பட்டம் அடித்து தோழிகளிடம் பெருமையாக கூறி மகிழ்ச்சி அடைகிறார்கள் மனைவிகள். இந்த மகிழ்ச்சி யை உங்கள் மனைவிக்கு நீங்கள் தந்தே ஆகவேண்டும்.

தேவையான போது மட்டும் முன்னுரிமை அளித்து, பிறகு அவர்களை பின் தள்ளி நிப்பாட்டுவதை தவிர்த்துவிடுங்கள். உங்கள் வாழ்க்கையில் எந்த கட்டத்திலும், எந்த சூழலிலும் நீங்கள் முன்னுரி மை அளிக்க வேண்டிய முதல் நபர் உங்கள் மனைவி.

உங்கள் தொழில், வேலை சார்ந்து மட்டுமில்லா மல், உங்கள் மனைவியின் வேலை சார்ந்தும் சற்று ஆர்வம் செலுத்துங்கள். வேலை ரீதியாக அவர் முன்னேற்றம் அடைய என்ன செய்யலாம் என அறிவுரைக் கூறுங்கள்.

உங்கள் இருவருக்கு மத்தியிலான ஒரு செய் கை பாசையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். செய்கை, சத்தம் போன்ற ஏதேனும் ஒன்று சுயமாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வ போது இந்த முறையில் உரையாட முயற்சி செய்யுங்கள். இதுபோன்ற சில விஷயங்கள் அவர்கள் அதிகமாக மகிழ்ச்சி யடைய உதவும்.

முக்கியமாக நேரம்ஒதுக்குங்கள். வேலையே கதி என இருக்கவேண்டாம். அலுவலகமும், இல்லறமு ம் கூட முக்கியம். இரண்டையும் இருகண்களா க பாவியுங்கள். அப்போதுதான் இல்லறமும் சிறக்கும், தாம்பத்தியமும் சிறக்கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: