Sunday, July 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தெளிவான தீர்ப்பு

தெளிவான தீர்ப்பு

தெளிவான தீர்ப்பு

ஜுன் 2016 மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்

கூட்ட‍ணியாட்சியா? தொங்கு சட்ட‍சபையா? அம்மா? அய்யாவா? என்ற தமிழர்களின் மூன்று மாதக்

குழப்பத்திற்கு தெளிவான முடிவைத் தந்திருக்கி றது 2016 ஆம் ஆண்டுத் தேர்தல்.

எப்பொழுதும் இல்லாதளவுக்கு ஆறுமுனைப் போட்டி நிலவியதும்…. மதுவுக்கு எதிரான போ ராட்ட‍மும், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பும்… கழகங்களுக்கு மாற்று ஏற்படுத்துவோம் என்ற புதியகளமும்… வழக்க‍ம் போலவே ஊடகங்களின் ஊகங்களும்தான் இத்த‍னை பரபரப்புக்கும் குழப்பங்களுக்கும் காரணம் என்பதில் எள்ள‍ளவும் சந்தேகமேயில்லை.

கேரளம் புதுதில்லிக்கு நிகராக தெளிவான முடிவெடுக்க‍ க்கூடிய வாக்காளர்களைத் தமிழகம் பெற்றிருப்ப‍தும்…. ஒரே கட்ட‍த்தில் எவ்வித வன்முறை, குழப்ப‍ங் களின்றி தேர்தல் நடந்திரு ப்ப‍தும் ஜனநாயகத்திற்குக் கிடைத்திருக்கிற வெற்றி. சரி… இந்த தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்ற செய்திகள் என்ன?

அரசியல் கட்சிகள்தான் குழப்ப‍மானவை.. ஆனால் மக்கள் தெளிவானவர்கள் என்பதும் தி.மு.க., அ.தி.மு .க. கட்சிகளுக்கு மாற்று இப்போதைக்கு இல்லை என்பதும்… தெளிவாக தெரிந்துவிட்ட‍து. கருத்துக்கணிப்புகள் எல்லாமே வியாபாரநோக்குடன் கூடியக் கருத்துத் திணிப்புகளே என்பதும் மீண்டும் நிரூபிக்க‍ப்பட்டுள்ள‍து. எல்லோரையும் மன்ன‍ராக ஏற்க மக்க‍ள் தயாராக இல்லை என்பதும்… பதவிக்காக மட்டுமே கூட்ட‍ணி பவனி என்பதால் எந்த அணியும் மக்க‍ளைக் கவரவில் லை என்பதெல்லாம் இந்த தேர்தல் தந்த பாடங்கள்

சாதிக்கட்சிகளுக்கு சவப்பெட்டி தயார்செய்த மக்க‍ள்.. உதார் விட்டுக்கொண்டிருந்த உதிரிக்கட்சி எல்லாவற்றையு ம் துடைத்து தூரஎறிந்திருப்ப‍து வரவேற்கத்தக்க‍ ஒன்று.. சுவரொட்டியில்லை.. சுவரில் கிறுக் க‍ல்கள் இல்லை.. விடிய விடிய பிரச்சாரமில்லை.. வீதிக்கு வீதி மேடையில்லை .. ஆனாலும் தேர்தல் ஜெயித்திருக்கிறது என்றால் தேர்தல் ஆணையம் ஜெயித்திருக்கிறது என்றுதானே பொருள்

தஞ்சையிலும் அரவக் குறிச்சியிலும் மறுதேர்தல் என்பது தமிழக அரசியலின் பணநாயக விளையாட்டுக்கு வைத்தி ருக்கிற ஆரம்ப அதிரடி ஆப்பு. இந்த அவமானம் இத்தோடு முடியட்டும், வாக்குக்கு காசும்… வாக்களிக்க மறுக்கும்… படித்த அறிவி ஜீவிகளின் விதண்டாவாதமும்…   இலவச அறிவிப்புகள்… இவைகளெல்லாம் அடுத்த‍ தேர்தலுக் குள்ளாவது காணாமல் போக வேண்டும்.

திருந்துங்கள் இல்லையெனில் திருப்பி அனுப்புவோம். செயல்படுங்கள் இல்லையெனில் செல்லாக்காசு ஆக்கிடு வோம் என்பதே இந்த தேர்தலின் உரத்த‍ சிந்தனையுடன் கூடிய தீர்ப்பு.

|/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|

இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்

திரு.உதயம் ராம் : 94440 11105

|//\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\

நம் உரத்த‍ சிந்தனை மாத இதழ் உங்கள் இல்ல‍ம் தேடி வர
இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்

ஆண்டு சந்தா – ரூ.150-
2 ஆண்டு சந்தா – ரூ.300-
5 ஆண்டு சந்தா – ரூ.750-
வாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000-
புரவலர் உறுப்பினர் – ரூ.7,000-
வங்கி மூலம் சந்தா தொகை செலுத்த‍…

இந்தியாவிலுள்ள‍ எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்த‍லாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்க‍ண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்த‍லாம்.

வெளியூரில் உள்ள‍வர்கள் ரூ.10- கூடுதலாக சேர்த்து செலுத்த‍ வேண்டும்

பெயர் – நம் உரத்த‍ சிந்தனை
வங்கி – இந்தியன் வங்கி
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
க‌ணக்கு எண்.401056844 (SB)
IFSC Code: IDIB000T055

சந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க‍ வேண்டுகிறோம்.

|//\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: