Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிக விலையில் குடிநீர்! – திரையரங்கு நிர்வாகத்தை தட்டிக்கேட்ட S.Ve.சேகர் (இந்த துணிச்சல் நமக்கும் வேணு?)

த‌வறை சுட்டிக்காட்டிய திரு.S.Ve. சேகர் அவர்களுக்கு நன்றி

அதிக விலையில் குடிநீர்!- திரையரங்கு நிர்வாகத்தை தட்டிக்கேட்ட S.Ve.சேகர் தயாரிப்பாளர் (இந்த துணிச்சல் நமக்கும் வேணு?)

அதிகவிலையில் குடிநீர்!-திரையரங்கு நிர்வாகத்தை தட்டிக்கேட்ட S.Ve.சேகர் தயாரிப்பாளர்  (இந்த துணிச்சல் நமக்கும் வேணு?)
 
பன்முகத் திறமை கொண்ட S.Ve.சேகர் தயாரிப்பாளர் அவர்கள், திரைப்படங்களிலும் சரி, நாடகங்களிலும் சரி அரசியலிலும் சரி தனக்கென்று

ஒருபாதையை வகுத்து அதன்படியே நேர்மைதவறாமல் நடந்துவருகிறார். அவர்  தனது முகநூலில் பகிரந்த பதிவு இது . இந்த துணிச்ச‍ல் நம் எல்லோருக்கும் இருந்தா? அதிக விலையில் விற்பது முற்றிலும் தடுக்க‍ப்பட்டு நியாய மான விலையில் பொருட்கள் விற்பனை செய்வது சாத்தியமாகும். அதற்கு முன்னோடியாக S.Ve.சேகர் தயாரிப்பாளர் அவர்கள், தான் சென்ற திரையரங்கு ஒன்றில், குடிநீரை அதிகவிலைக்கு விற்ற அந்த திரையரங்கு நிர்வாகத்தை தட்டிக் கேட்டுள்ளார். அவரது அந்த அனுபவத்தை இதோ கீழே பகிர்ந்துள்ளார்.

நேற்று SPI(சத்யம்)சினிமாஸின் அங்கமான எஸ்கேப்பில் அமிதாப் நடித்த TE3N படத்தின் 1 மணிக்காட்சிக்கு சென்றிருந்தேன். மல்டிப்ளெக்ஸ் சென்றால் அங்கிருக்கும் Cafeteriaக்க ளில் நொறுக்குத்தீனி/கோலா பூச்சி மருந்துகளை வாங்குவதை பெரு மளவு நிறுத்தியாகிவிட்டது. காரணம் அராஜகவிலை. நேற்று மதியம் ஆகாரம் உட்கொள்ளாததால் இடைவேளையில் ஒரு சமோசா சாட் மற்றும் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் ஆர்டர் செய்தேன். சாட் கவு ண்ட்டரில் இருவர் மட்டுமே நின்றிருந்தோம். 15 நிமிடங்கள் ஆகியும் சமோசா வந்த பாடில்லை.

சாட் உருவாக்கி ஒரு வடநாட்டு இளைஞர் என்பதால் தமிழில் பேசாமல் சமையலறைக்கு உள்ளேயும் வெளியேயும் வந்து போய்க்கொண்டு இருந்தார். பொறுமை இழந்து அருகில் இருந்தவர் ஹிந்தியில் கேட்டும் பதில் இல்லை.

TE3N ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். இடைவேளைக்கு பிறகு முக்கியமான திருப்பம் வெளிப்படு ம் நேரம். எனவே தியேட்டருக்கு உள்ளே செல்ல எத்த னித்தேன். அப்போதுதான் ஆடி அசை ந்து வந்தது சமோசா. அதை டெகரேஷன்வேறு செய்ய ஆரம்பிக்க பொறுமை இழந்து உள்ளே சென்று விட்டேன். சீட் நம்பரை கேட்டு உள்ளே எடுத்து வந்தனர். ‘நன்றி. திரும்ப எடுத்து சென்றுவிடுங்கள். இப்போது தொந்தரவு செய்யவேண்டாம். படம் முடிந்ததும் பேசி க்கொ ள்கிறேன்’ என்றேன். சென்று விட்டார்கள்.

படம் முடிந்து வெளியே வந்தபோது அடையாளம் கண்டுபிடித்து என்னை அழைத்தனர் ஊழியர்கள் இவர்கள்.

நிர்வாகத்தின் துணை மேலாளர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

நிர்வாகத்தின் துணை மேலாளர்:

‘நடந்ததை கேள்விப்பட்டேன் சார். என்ன செய்யவேண்டும். சொல்லுங்க ள்’ என பண்பாக பேச சமோசா பிர ச்னையுடன் SPI சினிமாஸில் இருக்கும் முக்கிய பிரச்னைகளையும் விவரித்தேன் இப்படி:

நான் (S.Ve.சேகர் தயாரிப்பாளர்):

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் விலை 22 ரூபாய் MRP. நீங்கள் விற் பவை அனைத்தும் அரை லிட்டர் பாட்டில்கள். நியாயப்படி அதன் விலை 11 ரூபாய். அதிகபட்சம் 6 ரூபாய் (50% எக்ஸ்ட்ரா ரேட்) கூடுதலாக வாங்கி னாலும் 17 மட்டுமே. ஆனால் 40 ரூபாய்க்கு மனசாட்சி இன்றி விற்கிறீர்க ள். விலையில்லா தண்ணீர் தருவதில் உங்களுக்கு என்ன பிரச்னை?

நிர்வாக துணை மேலாளரின் பதில்:

இல்லை. எங்கள் அனைத்து தியேட்டர் Dispensary களிலும் கட்டணமில் லா தண்ணீர் வைத்துள்ளோம். கஸ்டமர்கள் கேட்டால் அந்த தண்ணீரை தருகிறோம்.

நான் (S.Ve.சேகர் தயாரிப்பாளர்):

என்ன ஒருஆச்சர்யம். பல ஆண்டுகளாக உங்கள் தியேட்டர்களுக்கு வந்து செல்கிறேன். இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாதே. கண்ணுக்கு தெரியாத இடத்தில் கட்டணமில்லா தண்ணீரை வைத்திருப்பது உங்கள் வியாபார யுக்தி மட்டுமே. விரைவில் cafeteria கவுண்ட்டர்களில் அனைவ ர் கண்ணிலும் படும் வண்ணம் ‘இங்கு கட்டணமில்லா தண்ணீர் கிடைக் கும்’ என்று போர்ட் வையுங்கள்.

நிர்வாக துணை மேலாளரின் பதில்:

சுவர்களில் இருக்கும் டிவியில் டிஸ்ப்ளே செய்கிறோம்.

நான் (S.Ve.சேகர் தயாரிப்பாளர்):

ஹா..ஹா…அந்த டிஸ்ப்ளே மின்னல்வேகத்தில் மறைந்தாலும் மறையலாம். cafeteria கவு ண்ட்டர்களில் அனைவர் கண்ணிலும்படும் வண்ணம் போர்ட் வையுங்கள். அதுதான் சரிப்ப டும். டிக்கட் விலை 120. ஆனால் சர்வீஸ் சார்ஜ் 30ரூபாய். ஒருவர் ஒரேநேரத்தில் இரண்டு அல்லது மேற்பட்ட டிக்கட்களை ஆன்லைனில் புக் செய்தால் மொத்தமாக 30 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் போடாமல் ஒவ்வொரு டிக்கட்டுக்கும் 30 ரூபாய் பிடுங்குவது அரா ஜகம். (நன்றி கேபிள் சங்கர் & கோ.வின் முன்னெடுப்பு).

டிக்கட் விலையில் 10%சர்வீஸ்சார்ஜ் என்றாலும் பரவாயில்லை. 25% என் பது அநியாயம். ஆன்லைன்/Appமூலம் டிக்கட் எடுக்கும் காலத்திற்கும் முன்பு கவுன்ட்டரில்தான் டிக்கட் தந்தீர்கள். பெரிய க்யூ நிற்கும். டிக்கட் குடுக்கும் ஊழியர்கள், சத்யம் சிறப்பு செக்யூரிட்டிகள், காவல்துறை என உங்களுக்கான செலவுகள் இருந்தது. ஆனால் இப்போது அந்த செலவுகள் அனைத்தும் மிச்சம். வெப்சைட்/App உருவாக்கம், பராமரிப்பு, தொழில் நுட்ப அணிக்கான ஊதியம்போன்றவற்றை கணக்கிட்டால்கூட கணிசமாக லாபம்தான். எனவே ஒரு புக்கிங்கி ற்கான சர்வீஸ் சார்ஜை மட்டும் நிர் ணயிக்கவும்.

நிர்வாக துணை மேலாளரின் பதில்:

இதுகுறித்து management அதிகாரிகளிடம் நிச்சயம் பேசுகிறேன். விரைவி ல் Fund allocation & streamline செய்து தீர்வு காண முயற்சிக்கிறோம்.

நான் (S.Ve.சேகர் தயாரிப்பாளர்):

‘Please go to next counter’ உள்ளிட்ட சில போர்ட்கள் ஆங்கிலத்தில் மட்டு மே உள்ளன. தமிழ்நா ட்டில் தானே தியேட்டர் உள்ளது. தமிழிலும் எழுத லாமே? ஆங்கிலம் தெரியாதவர்கள் நீண்ட நேரம் கவுண்ட்டரில் நின்று விட்டு பிறகு எந்த உணவையும் வாங்காமல் சென்றதை சில முறை பார்த் துள்ளேன்.

நிர்வாக துணை மேலாளரின் பதில்:

நிச்சயம். இதுகுறித்து புகார்கள் வந்துள்ளன. எனவே தமிழ் மற்றும் ஆங்கி லத்தில் போர்ட் வைக்கும் வேலைகளை துவக்கி விட்டோம்.

நான் (S.Ve.சேகர் தயாரிப்பாளர்):

சென்னையில் சாட் தயாரிப்பது உட்பட பல்வேறு வேலைகளுக்கு வடநா ட்டு இளைஞர்கள் அமர்த்தப்படுகிறார்கள். அவர்களிடம் எமது தேவைக ளை விளக்கியும் புரிந்து கொள்ள நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். இன் றைய சமோசா பிரச்னையும் இப்படித்தான். எனவே அவர்களால் பதில் சொல்ல முடியாவிட்டால் தமிழ் தெரிந்த ஊழியர் ஒருவரை அழைத்து எம்மிடம் பேச சொல்லுங்கள்.

நிர்வாக துணை மேலாளரின் பதில்:

இஸ்யூ புரிகிறது. விரைவில் அதற்கான நடவடிக்கையை எடுக்க சொல்கி றேன். பேசி முடி த்ததும் சமோசா, தண்ணீர் பாட்டில் பணத்தை திருப்பி தந் தார். ஒரு scene தவற விட்டதற்கு மன்னிப்பு கேட்கிறேன். இதே படத்தின் இன் னொரு காட்சிக்கான டிக்கட்டை இலவசமாக தருகிறோம். உங்களுக் கு தோதான காட்சி நேரத்தை சொல்லுங்கள் என்றார்.

நான் (S.Ve.சேகர் தயாரிப்பாளர்):

இல்லை வேண்டாம். மறுமுறை பார்க்கும் எண்ணம் இல்லை

என்று விடைபெற்றேன்.

தெரிந்தும், தெரியாமலும் சில தவறுகளை SPI தரப்பு செய்தாலும் கஸ்ட மர்களின் பிரச்னை களை பொறுமையாக கேட்டு தீர்வுகாண முயல்வதும், பணத்தை உடனுக்குடன் refund செய்து இன்னொரு காட்சிக்கு இலவச டிக்கட் தருவதிலும் SPI சினிமாஸை அடித்துக்கொ ள்ள முடியாது. எனவே தான் சென்னையின் நம்பர் 1 தியேட்டராக இருக்கிறது. விடை பெ றும்போது கட்டணமில்லா தண்ணீர் பற்றிய போர்டை வைக்க சொல்லி மீண்டும் அழுத்த மாய் சொன்னேன். ஆமோதித்து இருக்கிறார்.

போர்ட்இருக்கிறதோ இல்லையோ. இன்றுமுதல் Satyam, Escape, Palazzo, S2 Perambur, Thiruvanmiyur செல்லும் மக்கள் கட்டணமில்லா தண்ணீரை கேட்டு பெறுங்கள். இல்லாவி ட்டால் மிக அதிக விலையான 40ரூபாயை தர வேண்டி இருக்கும். மேற்சொன்ன குறைகளை களைய என்ன ஸ்டெப் எடுக்கிறார்கள் என்ப தை Follow up செய்து அப்டேட் செய்கிறேன்.

– S.Ve. சேகர், முகநூல்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: