Thursday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

7 நாட்களுக்கு ஒருமுறை நெத்திலி மீன் சமைத்து சாப்பிட்டு வந்தால்

7 நாட்களுக்கு ஒருமுறை நெத்திலி மீன் சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .

7 நாட்களுக்கு ஒருமுறை நெத்திலி மீன் சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .

சைவ உணவுகளில் மட்டும்தான் அதீத சத்துக்கள் காணப்படுகின்றன  என் பது ஒருசிலருடைய‌ வாதம். ஆனால்

அவர்களது உள்மனத்தில், அசைவ உணவு வகைகளி லும் சத்துக்கள் நிறைந்து காணப்படுவது தெரிந்திருந் தும் வறட்டு கௌரவத்திற்காக அதனை மறைத்து வரு கின்றனர்•

அசைவபிரியர்களுக்கு, ஆட்டுக்கறிக்கு அடுத்த‍படியா க மீன் உணவைத் தான் அதிகம் சமைத்து சாப்பிட பிடிக்கும் பொதுவாக மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டிஆசிட் அதிகம் இருக்கும். இந்த மீனில் ஒமேகா-3 அதிகம் இருப்பதோடு, கலோ ரிகள் குறைவு மற்றும் வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. எனவே விலை மலிவில் கிடைக்கு ம் இந்த மீனை சாதாரணமாக நினைத்து விடாமல், வாரம்ஒருமுறை உணவில்சேர்த்துவாருங்கள்.

இதய ஆரோக்கியம் :-

நெத்திலிமீனில் பாலிஅன் சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம்உள்ளது. இது இதயஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்டகொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்க ள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

செல்லுலார் பழுதுபார்த்தல் :-

செல்லுலார் மற்றும் இணைப்புத்திசுக்களின் வளர்ச்சிக் கும், பழுது பார்க்கவும் தேவையான புரோட்டீன் நெத்திலி மீனில் உள்ளது.

சரும ஆரோக்கியம் :-

நெத்திலிமீனில் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்களுடன், வைட்டமின் ஈ, செலினியம், போன்ற சருமத்தின் ஆரோக் கியத்திற்கு தேவையான சத்துக் களும் உள்ளன. எனவே அடிக்கடி நெத்திலிமீனை உணவில்சேர்த்துவந்தால், சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, சருமம் பொலிவோடு இருக்கும்.

வலிமையான பற்கள் மற்றும் எலும்புகள் :-

நெத்திலி மீனில் கால்சியம் வளமாக நிறைந்துள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து. அதுமட்டுமின்றி இதில் எலும்புகளின் ஆரோக்கி யத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.

கண் ஆரோக்கியம் :-

நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற் றை 7 நாட்களுக்கு ஒருமுறை உட்கொண்டு வந்தால், கண் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

எடை குறைவு :-

நெத்திலி மீனில் கலோரிகள் குறைவு மற்றும் புரோட் டீன் அதிகம் என்பதால், இது உடல் எடை குறைவதற் கும் வழிவகுக்கும்

(வாட்ஸ் அப்பில் வந்தவை)

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: