Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ந‌யன்தாராவின் ரொமான்ஸால் நொந்து நூடுல்ஸான நடிகர் தனுஷ்!

ந‌யன்தாராவின் ரொமான்ஸால் நொந்து நூடுல்ஸான நடிகர் தனுஷ்!

ந‌யன்தாராவின் ரொமான்ஸால் நொந்து நூடுல்ஸான நடிகர் தனுஷ்!

63ஆவது பிலிம்;ஃபெயார் விருது வழங்கும் விழா, ஐதராபாத்தில் நடை பெற்றது இவ்விழாவில்

நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷும், நடிகை நயன்தாரா, கலந்துகொண்டனர். தனுஷ் தயாரித்த காக்கா முட்டை சிறந்த திரைப்படமாக தேர்வானதால் அந்த விருதை பெறு வதற்காக தனுஷ்மேடையேறினார். மேலும் காக்காமுட்டை திரைப்படம் பற்றியும்; கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேசின் நடிப்பு பற்றியும் பாராட்டி பேசியுள்ளார்.

அதேசமயம் அவர் தயாரித்த இன்னொரு திரைப்படமான நானும் ரௌடி தான் திரைப்படத்தில் நடித்ததற்காக நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக் கான விருது கிடைத்துள்ளது. ஆனால் நயன்தாராவை பற்றி அவர் எந்த இடத்திலும் குறிப்பிடவும் இல்லை. பாராட்டவும் இல்லையாம். காரணம் நானும் ரௌடி தான் படப்பிடிப்பின்போது காதலர்களாக மாறிய இயக்குநர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ரொமா ன்ஸுக்காக நிறைய நேரங்களை செலவிட்ட தால் படப்படிப்பு தடைபட்டு, அதனால் பட்ஜெட் அதிகமாகி, தொடர்ந்து வெளியீடு தள்ளிப்போனது வரை நடந்த கசப்பான சம்பவங்கள் தனுஷை ரொம்பவே கோபப்பட வைத்துவிட்டதாம். அதனால்தான் தனுஷ் பேசும் போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் பற்றி எதுவும் குறிப்பிட வில்லையாம்.

இதனை உணர்ந்தநயன்தாரா, தான்மேடையேறி விருதுவாங் கும்போது, ‘தனுஷ் என்னைபற்றி எதுவும் பேசவில்லை… ஒரு வேளை அவருக்கு என்நடிப்பு பிடிக்கவில்லையோ என்னவோ . சாரிதனுஷ் என வருத்ததுடன் கூறினார்.  மேலும் அந்த கணத்தில் தனுஷை கொஞ்சம் காயப்படுத்தலாம் என நயன்தாரா நினைத்தாரா என்று தெரியவில்லை, இந்த விருதை நான் இயக்குநர் விக்னேஷ்சிவனுக்கு சமர்ப்பிக்கிறேன்’ என தனது காதலரை உயர்த்தி பிடித் து பேசியுள்ளார். இதனை கேட்டுக் கொண்டிருந்த தனு ஷின் முகம் சட்டென்று மாறி, நயன்தாராவை முறைத் துப் பார்த்தார்.

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: