கோதுமை கூழ்-ஐ மதிய வேளைகளில் குடித்து வந்தால் . . .
கோதுமை கூழ்-ஐ மதிய வேளைகளில் குடித்து வந்தால் . . .
உடல் எடையை குறைக்கும் கோதுமை மோர்க்கூழ்
கோதுமை நமது உடலுக்கு நன்மை பயக்கும் தானிய வகையினை சார்ந்த து. அதேபோல்
மோரும் நமது உடலில் உள்ள அதிகப்படியான உஷ்ணத் தை குறைத்து குளிர்ச்சியை தரும் இயற்கை பாணம். மதிய வேளைகளில் இந்த இரண்டையும் எப்படி கல ந்து கோதுமை கூழ் தயாரித்து, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் குடித்து வந்தால் உட லில் உள்ள தேவையற்ற ஊளைச் சதைகளை குறைத்தும், கெட்டகொழுப்புக்களை கரைத்தும் உடலின் எடையை கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் கொ ண்டது என்கிறது சித்த மருத்துவம்
இந்த கோதுமை கூழ் தயாரிப்பு முறையினை இங்கு பார்ப்போம்
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – 1 கப்
அரிசி மாவு – 2 கப்
தண்ணீர் – 2 கப்
மோர் – 2 கப்
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
உ.பருப்பு – 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
செய்முறை:
*ஒரு அகண்ட பாத்திரத்தில் வைத்து அரிசி மாவு , கோதுமை மாவை போட்டு அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
* ஸ்டெவ் பற்ற வைத்து அதில் வாணலியை வைத்து சூடேறியவுடன் எண்ணெய்யை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங் காயம், உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, தண்ணீர் ஊற்றவும்.
* கொதிவந்தவுடன் உப்பைப் போட்டு கரைத்து வைத்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கைவிடாமல் கிளற வேண்டும்.
*கொஞ்சம் கெட்டியானவுடன் மோர்விட்டு கைவிடாமல் கிளறி க் கொண் டேயிருக்கவும்.
*மோர் கூழில் ஒன்று சேர்ந்தவுடன் இறக்கி எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி கொத்தமல்லித் தூவி, துண்டு களாக வெட்டி பரிமாறவும்.
* உடல் இளைக்க விரும்புபவர்கள் மதிய நேரத்திற்கு சாப்பிட உகந்தது இந்த மோர்க்கூழ்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!