கண்ணதாசனிடம், என்னை விட்டுடுங்கன்னு கையெடுத்துக் கும்பிட்ட இசைமேதை! – வரலாற்றுத் தகவல்
கண்ணதாசனிடம், என்னை விட்டுடுங்கன்னு கையெடுத்துக் கும்பிட்ட இசைமேதை! – வரலாற்றுத் தகவல்
கண்ணதாசன் அவர்களைப் பற்றியும், அவர் எழுதிய பாடல்களைப் பற்றி யும் மணிக்கணக்காவும் பேசினாலும்
ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதினாலும் முழுமைய டையாமல் நீண்டு கொண்டே செல்லும். கவியரசு கண்ண தாசன் அவர்களுக்கும் வயலின் இசைமேதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற ஒரு சிறு சம்பவத்தை இங்கு காண்போம்.
“மருதமலை மாமணியே!” என்ற பாடலில் குன்னக்குடி வைத்தி யநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்த து. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார். அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப் பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டு ம். இது தான் போட்டி.
குன்னக்குடி கடினமானமெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம் . ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த் தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம். அந்த பாடல்களில் ஒன்றுதான் மேற்சொன்ன ‘மருதமலை மாமணியே’ பாடல்.
ஒருகட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலினில் வாசித்து ‘இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்” என்றா ராம் குன்னக்குடி.
உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள்
“சக்திச்சரவண முத்துக் குமரனை மறவேன்” ….
குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில் முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல்
‘நிச நிச நிச நிச’
என்று வேகமாக வாசித்துவிட்டாராம்..
கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று
‘மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி’
என்ற வார்த்தையை எழுதியவுடன், வயலீனை “நான் சிறிது நேரம் கீழே வைத்து, ஐயா ,என்னை விட்டுடுங்கன்னு கையெடு த்துக் கும்பிட்டு, கவிஞரே உங்கள் பாதம் பணிகிறோம் என்றாராம் குன்னக்குடி வைத்தியநாதன்.
நன்றி – திரு.வேதம்புதிது கண்ணன் மற்றும் திரு.நாகராஜன் (முகநூல்…)