Sunday, June 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"சுவாதியை கொன்றது நான் இல்லை, எனது கழுத்தை அறுத்த‍து போலீஸ்தான்!" – ராம்குமார் பகீர் குற்ற‍ச்சாட்டு

“சுவாதியை கொன்றது நான் இல்லை, எனது கழுத்தை அறுத்த‍து போலீஸ்தான்!” – ராம்குமார் பகீர் குற்ற‍ச்சாட்டு

“சுவாதியை கொன்றது நான் இல்லை, எனது கழுத்தை அறுத்த‍து போலீஸ்தான்!” – ராம்குமார் பகீர் குற்ற‍ச்சாட்டு

சுவாதி கொலையில் தனக்கு எந்த தொடர்பும் கிடையாது. சுவாதியை கொன்றது தான் இல்லை என்று கூறியுள்ள

ராம்குமார், தான் தற்கொலை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை என்றும், காவல்துறையினர்தான் தன் கழுத்தை அறுத்ததாகவும் பரபரப்பு கிளப்பி யுள்ளார்.

சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலைய த்தில், கடந்த 24 ம் தேதி சூளை மேட்டை சேர்ந்த மென்பொறியாளர் சுவாதி என்பவர், மர்ம நபரால் கழுத்தில் வெட்டப்பட்டு கொலையானார்.

இந்தவழக்கு தொடர்பாக நெல்லைமாவட்டம், செங்கோட்டையை சேர்ந் த ராம்குமார் என்ற பொறியியல் பட்டதாரி, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு, அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரத்தில் கைதுசெய்யப்பட்டா ர்.

கைது முயற்சியின்போது, அவர் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு  தகவல்கள் வெளியாகின.

சிகிச்சைக்குப்பின் சென்னை கொண்டுவரப்பட்ட ராம் குமார், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ராம்குமாரின் சார்பாக இன்று ஜாமீன்மனு தாக்கல் செய்யப்பட்டது.

ராம்குமாரின் வழக்கறிஞர் தாக்கல் செய்த அந்த மனுவில், தனக்கும் சுவாதியின் கொலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என தெரிவித்துள்ள ராம்குமார், கைது செய்யப்பட்டபோது தான்தற்கொலை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை என்றும், காவல்துறையின ருடன் வந்தவர்கள் தான் தன்னை பிளேடால் கழுத்தை அறுத்ததாகவும் சொல்லியுள்ளார்.

இதுகுறித்துசென்னையில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ராம்குமாரின் வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி, “ கொலை சம்பவத்துக்குமுன், 2 நாட்களுக்கு முன்பே சுவாதியை யாரோ தாக்கியதாக கூறப்படுகி றது.

சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் எந்தவித தொட ர்பும் இல்லை. சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், தற் கொலை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை.

போலீசாருடன்சென்ற நபர்கள்தான் ராம்குமாரின் கழுத்தை அறுத்துள்ள னர். உண்மையானகுற்றவாளியை காப்பாற்றவே எங்கள் கட்சிக்காரர் மீது போலீஸ் குற்றஞ்சாட்டி யுள்ளது.

உயர் நீதிமன்றம் 2 நாட்கள் கெடு விதித்ததால் கைது செய்துள்ளனர் என்று கூறினார்.

சுவாதி கொலையில் பல சட்ட முரண்கள் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், ராம்குமாரின் வழக்கறிஞர் அளித்த இந்த பேட்டி பரபரப்பை கிளப்பியுள்ளது.

படித்த செய்தி

Leave a Reply

%d bloggers like this: