Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

520 ஆண்டுகளுக்கு முன், வேம்பத்தூரில் நடந்த மெய்சிலிர்க்க‍வைக்கும் உண்மைச் சம்பவம்!

520 ஆண்டுகளுக்கு முன், வேம்பத்தூரில் நடந்த மெய்சிலிர்க்க‍ வைக்கும் உண்மைச் சம்பவம்!

கடந்த, 520 ஆண்டுகளுக்கு முன், வேம்பத்தூரில் நடந்த மெய் சிலிர்க்க‍ வைக்கும் உண்மைச் சம்பவம்!

கடந்த, 520 ஆண்டுகளுக்குமுன், வேம்பத்தூரில்

ஒருவர் வாழ்ந்துவந்தார். அம்பிகையின் மந்திரத்தை லட்சம் முறை உருவேற்றியதால், அம்பிகை அவருக்கு தரிசனம்தந்து , அருள்பாலித்தாள். இதனால், கவிஞராக மாறிய இவரை, கவிராஜ பண்டிதர் என்றே அழைத்தனர்.

மனைவியை இழந்த கவிராஜர், ஒருசமயம், தன் மகள் மீனாட்சியை, தங்கையின் பொறுப்பில் விட்டு, காசிக்கு புறப் பட்டார். வழி யில் ஓய்வெடுப்பதற்காக மரத்தடியில் தங்கி னார். அப்போது, அவர் மகள், மீனாட்சி, கையில் சில பாத்திர ங்களுடன் அங்கு நின்றிருந்தாள். அதிர்ந்த கவிராஜர், ‘நீ ஏன் என் பின்னால் வந்தாய்… காசி என்ன பக்கத்திலா இருக்கு… போயிட்டு உடனே திரும்ப… எப்படியும் ஆறு மாசம் ஆகுமே…’ என்றார்.

மகளோ, ‘உங்களை விட்டு நான் மட்டும் தனியா இருக்க மனசு கேக்கல. நானும் கூட வந்து, உங்களுக்கு உதவியா இருக்கேன்…’ என்றாள் அழுத்த மாய்! வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார் கவிராஜர். போகும் வழியெல் லாம், தந்தைக்கு உணவு சமைத்து கொடுத்து, உதவி யாக இருந்தாள் மீனாட்சி.

இருவரும் காசியை சென்றடைந்தனர். கங்கையில் நீராடு வதும், விஸ்வ நாதர்-விசாலாட்சி தரிசனமுமாக நாட்கள் போயின. ஒருநாள், இருவரும் கடைவீதி வழியாக சென்ற போது, தனக்கு வளையல் வாங்கிக் கொடுக்கக் கூறினாள் மீனாட்சி.

கவிராஜர் வருந்தினார்; கையில் காசில்லை. என்னசெய்வது என திகைத் தபோது, அங்கே தமிழ்பேசும் ஒருவர்வந்து, சிறுமி மீனாட்சிக்கு வளைய ல் வாங்கிக்கொடுத்து மறைந்தார். அவரை, சிவன், விஷ்ணு அல்லது பிரம்மாவாக இருக்கலாம் என்கிறது, ‘புலவர் புராணம்’ எனும் நூல்.

இருவரும், காசி தரிசனத்தை முடித்து, ஊருக்கு திரும்பினர். வழியில், முதலில் தங்கிய மரத்தடி யை அடைந்தபோது, ஓய்வெடுப்பதற்காக அமர்ந் தார் கவிராஜர். அப்போது, ‘அப்பா.. நீங்க மெல்ல வாங்க… நான் முன்னாடி போறேன்…’ என சொல்லி, சிட்டாகப் பறந்தாள் மீனாட்சி.

கவிராஜர் பார்வையில் இருந்து மறைந்ததும், அக்குழந்தை பழுத்த சுமங் கலியாக மாறியது. ஆம்… மகள் வடிவில் வந்தது அம்பிகை. அந்த சுமங் கலி பெண், நேரே கவிராஜரின் தங்கைவீட்டை அடைந்து, ‘அம்மா… உங்க அண்ணன் இந்த வளையலை உங்ககிட்ட தரச்சொன் னாரு…’ என்று கூறி, வளையல்களை கவிராஜரின் தங்கையிடம் தந்து, மறைந்தாள்.

சற்றுநேரத்தில் கவிராஜர் வந்ததும், அவரது தங்கை, ‘நீ போனதுல இருந்து உன் பொண்ணு படுத்த படுக் கையாயிட்டா…’ என்றாள். இதைக் கேட்டதும் அதிர் ந்த கவிராஜர், ‘என்னசொல்ற… மீனாட்சி என்கூட காசிக்கு வந்து , அப்பப்ப சமைச்சுபோட்டா… வளையல்கூட வாங்கினாளே..’ என்று திகைப்போடு விவரித்தார். தங்கையோ, ‘ என்னண்ணா சொல்றே… மீனாட்சி இங்கதா னே இருக்கா… கொஞ்சநேரம்முன் ஒருசுமங்கலிபெண் வந்து நீ குடுத்ததா சொல்லி, இந்த வளையல்களை தந்துட்டுபோனாளே…’ என விவரித்தார்.

உண்மைபுரிந்த கவிராஜருக்கு மெய்சிலிர்த்தது. கண்களில் கண்ணீர்வழிய, அம்பிகையை வணங்கினார்.  இவர்தான் , ஆதிசங்கரரின், சவுந்தர் யலஹரி பாடல்களை, தமிழில் மொழிபெயர்த்தவர். தற்போது பிரபலமாகிவரும் ‘வராஹி மாலை’ எனும் மந்திர துதி நூலை, அருளியவர்.

பேய், பிசாசு, பில்லி மற்றும் சூன்யம் முதலான கொடுமைகளில் இருந்து, விடுதலை அளிக்கும் அருள் நூலிது. அம்பிகை நமக்கும் நல் உணர்வை ஊட்ட வேண்டுமென்று வேண்டுவோம்; அவள் நிச்சயம் ஊட்டுவாள்!

=> பி.என்.பரசுராமன், தினமலர்


Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: