கொலை நகரம் – இப்போதைக்கு தேவை உரத்த சிந்தனை!
கொலை நகரம் – இப்போதைக்கு தேவை உரத்த சிந்தனை!
ஜூலை, 2016 மாத நம் உரத்த சிந்தனை இதழில் வெளிவந்த தலையங்கள்
கலைநகரமாக விளங்கிய தமிழகத்தின் தலைநகரமான சென்னை, இன்று கொலை நகரமாக
மாறியிருப்பது அதிர்ச்சிக்குரியது. கடந்த சில வருடங்களில் கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு போன்ற அக்கிரமங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு என்ன காரணம்… யார் காரணம் என்பதை விவாதிப்ப தை விட இதற்கான பின்னணியை நாம் உரத்த சிந்த னையுடன் உற்று நோக்கவேண்டும்.
கள்ளக்காதல்.. கூடா நட்பு.. ஒரு தலைக்காதல்.. ஒரேநாளில் பணம் சம்பாதிக்கும் பேராசை, சின்னச்சின்ன தோல்விகளைக் கூட தாங்கிக் கொள்ளமுடியாத பலஹீனம்… தேவையற்ற கோபம், கேட்டது கிடைக்காவிட்டால், நினைத்தது நடக்கா விட்டால் பழிவாங்கும் மனோநிலை இவையெல்லாம்தான் குற்றங்கள் நடப்பதற்கான முக்கிய காரணங்கள்
இந்த சூழல்களிலிருந்து மனிதனை மீட்டெடுக்க வேண்டிய பணியை சமூக அக்கறையோடு மனித நேயத்தோடு பொறுப்புணர்வோடு தத்தம்துறை அணுகி, நெறியோடு செய்ய வேண்டிய, சினிமா, பத்திரிகை, காட்சி ஊடகங்கள், சமூகவலை தளங்கள் இன்று தடம்மாறி போனதன் விளைவுதான் தலைநகரம் கொலை நகரமானதற்காக பெருங்கார ணிகள்.
பெண்களைபோகப்பொருளாக காமக்களியாட்டத்திற்கான கருவியாக. ஆண்களை தெருப்பொறுக்கிளாக.. பெண் பித்தர்களாக தீவிரவாதிகளாக காவல்துறையை ஏவல் துறையாக புண்ணியங்கள் நிறைந்த சமுதாய த்தைப் புறக்கணித்து புழுதிகள் நிறைந்த சாக்க டையை சமுதாயத்தை பிரதிபலித்து காட்டி வரு வதில் பத்திரிகை, காட்சி ஊடக சமூக வலைதள ங்களுக்குத்தான் முக்கிய பங்கு இருக்கிறது என்பது வெட்கக் கேடான விஷயம்
அப்துல்கலாம் மரணத்தையே சந்தேகித்து ஒரு பதிவை கட்செவியில் படித்தபோது அதிர்ந்துபோயினர். செய்தை முந்தி தருவதற்காகவும் விற்பனையைக் கூடிக் கொள்வதற்காகவும் விளம்பரதாரர்களை கவர்வதற்காகவும் ரசிகர்களுக்குத் தீனி போடுவதற்காகவும் தனி மனிதனின் வாழ்விலும் சாவிலும் மூக்கை நுழைத்து அவர்களை கருத்துக்களால் காட்சிகளால் கொலை செய்து வருவது கண்டனத்துக்குரி யது.
சுவாதியின் கொலையைச் சுற்றி இக்கருத்து கட்டப் பஞ்சாயத்துகள் என்ன வெல்லாம் செய்தன? காவல்துறை காணாமல் போனதா? மகளிர் அமைப்பு மறந்து போனதா? முதல்வர் ஏன் முணுமுணுக்க வில்லை? ராம்குமாரின் கனவு இனி என்னவாகும். சுவாதி, பிராம்மணப் பெண் என்பதால் நியாயம் கேட்கவில்லையா? ராம்குமார் உண்மையான குற்றவாளியா? அப்பப்பா! மண்டைக் காயுமளவுக்கு விவாதங்கள் கருத்து திணிப்புகள்
இறந்தபோது தவித்த வாய்க்கு தண்ணீர் தராத சமுதாயதம் இறந்தபிறகு இருந்த இடத்திலிருந்து நியாயம் பேசுவது ஆலோசனை தருவது எல்லாம் கோழைத்தனம். விளம்பர நோக்கோடு கூடிய வியாபாரத்தனம்.
குற்றங்களுக்கு காரணம் நீயா நானா என விவாதிப்பது மரத்தசிந்தனை – மறக்கவேண்டிய குற்றங்களைக் குறைக்க நீயும் நானும் இணைவோம் என்பதே உணர வேண்டிய உரத்த சிந்தனை.
|/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்
திரு.உதயம் ராம் : 94440 11105
|//\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\
நம் உரத்த சிந்தனை மாத இதழ் உங்கள் இல்லம் தேடி வர
இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்
ஆண்டு சந்தா – ரூ.150-
2 ஆண்டு சந்தா – ரூ.300-
5 ஆண்டு சந்தா – ரூ.750-
வாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000-
புரவலர் உறுப்பினர் – ரூ.7,000-
வங்கி மூலம் சந்தா தொகை செலுத்த…
இந்தியாவிலுள்ள எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்தலாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்கண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்தலாம்.
வெளியூரில் உள்ளவர்கள் ரூ.10- கூடுதலாக சேர்த்து செலுத்த வேண்டும்
பெயர் – நம் உரத்த சிந்தனை
வங்கி – இந்தியன் வங்கி
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
கணக்கு எண்.401056844 (SB)
IFSC Code: IDIB000T055
சந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க வேண்டுகிறோம்.
|//\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\
Atleast, intha aatchiyila thalai nagaram kolai nagaramaa aagirukkirathu endru oththu kolgireergale… athuve periya sinthanai…