Saturday, January 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்ரீராமன், பெற்ற தகப்பனுக்கு செய்யாத காரியங்கள்! – இராமாயணத்தில் மறைந்திருக்கும் உண்மை

ஸ்ரீராமன், பெற்ற தகப்பனுக்கு செய்யாத காரியங்கள்! – இராமாயணத்தில் மறைந்திருக்கும் உண்மை

ஸ்ரீராமன், பெற்ற தகப்பனுக்கு செய்யாத காரியங்கள்! – இராமாயணத்தில் மறைந்திருக்கும் உண்மை

கைகேயின் ஆணைப்படி இராமன் துறவறம் பூண்டு வனவாசம் புகுகிறான் உடன் அவனது தம்பி லட்சுமணன் மற்றும் ராமன் மனைவி சீதா ஆகிய இருவரும்  துறவறம் பூண்டு ராமனுக்கு

துணையாக செல்கின்றனர். இவர்கள் சென்றுவிட்ட‍ செய்தி அறிந்த தசரத மன்ன‍ன், துக்க‍த்தால் நெஞ்சடைத்து அங்கேயே உயிர் துறக்கிறான். இத ற்கிடையில் கேகேயம் சென்ற பரதனும் சத்ருகனனும் ஓரிரு நாட்களில் அயோத்தி திரும்பினர். திரும்பியதும் தன் தாய் கைகேயி, மந்தாரையின் சூழ்ச்சிக்கு பலியாகி, இராமனை வனவாசம் அனுப்பிய தகவலையும், இராமனை பிரிந்த துக்க‍த்தால் தந்தை தசரதன் இறந்த செய்திகேட்டு வெகுண்டெழுகிறான். தாய் கைகேயியை, தாய் என்றழைக்க‍வே மறுத்து, அவளை கோபத்துடன் கடிந்து கொள்கிறான். பின் அவளை முற்றிலுமாக புறந்தள்ளுகிறான். அதன்பிறகே தந்தையின் ஈமச்சடங்குகளில் தம்பி சத்ருகனனுடன் இணைந்து முடித்து வைக்கிறான்.

அதன்பிறகு ராமனிடம் மன்னிப்பு கேட்டு அவனை மீண்டும் அயோத்திக்கு அழைத்துவந்து பட்டாபிஷேகம் செய்து வை க்க‍ பரதன் புறப்பட்ட‍ போதே, பரதனின் பெருங்கோவத்தாலும், மந்தரை யின் சூழ்ச்சியை உணர்ந்த கைகேயியும் அவனுடன் சேர்ந்து புறப்பட்டாள்.

கானகத்தில் பரதன் உட்பட பலரை கண்டு இராம ருக்கு அதிர்ச்சியாக இருந்தது. பெற்ற தகப்பன் உயிர் துறந்தார். அதனால் அன்னையர் மூவரும் விதவைகோலம் பூண்டனர் என்பதை அறிந்த இராமன் சில துளிகள் கண்ணீர் விட்டானே தவிர ராமனால் அந்த தன் தந்தையின் ஈமச் சடங்குகளி ல் கலந்துகொள்ள‍வோ தன் அன்னையர் மூவருக்கும் ஆறுதலாக இருக்க‍ வோ அல்ல‍து சக்க‍ரவர்த்தியை இழந்து வாடும் அயோத்தி வாழ் மக்க‍ளு க்கு ஓர் அரசனாக இருந்து துயர் துடைக்க‍வோ முடியவில் லை. மாறாக தனது தந்தையின் வாக்குப்படியும், தாய் கை கேயியின் ஆணைப்படி வனவாசம் முழுவதையும் அனுப வித்த‍பிறகே தாம் நாட்டிற்கு திரும்புவதில் மிகவும் பிடிவாதமாக இருந்தார்.

ஆனால் தனது மனைவியை ராவணன் கடத்திக்கொண்டு போகும்போது சீதைக்காக இராவணனுடன் போரிட்டு, இராவணனால் பலமாக தாக்க‍ப்ப ட்டும், தன் மனைவி பற் றிய‌ துப்புக்கொடுத்து இறந்துபோன‌ ஜடாயு என்ற பறவைக்கு அந்த வினாடியே விஷ்ணுவாக மாறி மோட்சம் அளித்த்தோடு வேண்டிய ஈமக் காரியங்க ளைசெய்து வைக்கிறான். மேலும் இராவணனிடம் இரு ந்து சீதையை காப்பாற்ற‍ இராமனுக்காக போரிட்டு உயிர் துறந்த குரங்குகளை க‌டைசியில் அத்தனை குரங்குகளையும் மீண்டும் உயிர் பிழைக்க வைக்கிறான்.  பெற்ற தகப்பனுக்கு செய்யாத காரியங்க ளையும் மற்றவருக்காக இரா ம ன் செய் திருக்கிறான்.

இதிலிருந்து நமக்கு என்ன‍தெரிகிறது. ஸ்ரீராமர், மனிதர்க ளை மட்டுமல்ல‍, பிற ஜீவராசிகளையும் நேசிக்க‍க் கூடிய பண்பாளர் என்றும், அவைகளை தனது தந்தைக்கு மேலாக வும் மதிப்ப‍ளி க்க‍க் கூடியவர் என்பதும் இங்கே புலனாகிறது.

விதைவிருட்சம் சத்தியமூர்த்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: