அதிக ‘குங்குமப் பூ’ சாப்பிட்டால் விளையும் தீமைகள்! – எச்சரிக்கைத் தகவல்கள்!
அதிக ‘குங்குமப் பூ’ சாப்பிட்டால் விளையும் தீமைகள்! – எச்சரிக்கைத் தகவல்கள்!
பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது, காய்ச்சிய பாலில் கொஞ்சம் குங்கும பூ கலந்து
குடிக்கச் சொல்வர் வீட்டு பெரியவர்கள். இது ஒரு புறம் இருக்கட்டும். இந்த குங்கும பூவினை சிறிது மட்டுமே எடுத்து உட்கொண்டு வந்தால் உட்கொள்பவர்களுக்கு மிகுந்த நன்மைகளை உடலுக்கு வாரி வழங்கும். அதே கொஞ்சம் அளவு அதிகமாக உட்கொண்டால், பலதரப்பட்ட தீய விளைவுகளையும், பாதிப்புக்களையும் இந் த குங்கும பூ ஏற்படுத்தும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இதோ
குங்குமப் பூவினை அதிகளவில் உட்கொண்டால். . . உட் கொள்பவர்களுக்கு ஏற்படும் தீய விளைவுகளும் பாதிப்பு க்களும்
* வாந்தி எடுத்தல்
* மயக்கம் ஏற்படுதல்
* வயிற்றுப் பிரட்டல் உண்டாதல்
* பசியின்மை நீடித்தல்
* ஆசன வாயில் ரத்தம் வெளியேறுதல்
* சிறுநீரில் ரத்தம் வெளிவருதல்
* மூக்கில் ரத்தம் கொட்டுதல்
* தலை சுற்றல் வருதல்
* மஞ்சள் காமாலையால் பாதிப்படைதல்
போன்ற சற்று அபாயகரமான பாதிப்புகளும் தீய விளைவு களும் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே இந்த குங்கும பூ வினை முறையாக, அளவாக, உட்கொண்டு வந்தால் . . . நல்ல ஆரோக்கி யத்தோடும், உற்சாகத்தோடும் நீங்கள் இருப்பீர்கள்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு