Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

போலீஸ்காரய்யா இந்த நீதிபதிமேல கேஸ் போடுங்க! – சிந்திக்க‍ வைத்த‍ பாமரன்!

போலீஸ்காரய்யா இந்த நீதிபதிமேல கேஸ் போடுங்க! – சிந்திக்க‍ வைத்த‍ பாமரன்!

போலீஸ்காரய்யா இந்த நீதிபதிமேல கேஸ் போடுங்க! – சிந்திக்க‍ வைத்த‍ பாமரன்!

டீக்கடை உரிமையாளர்மீது வழக்கு ஒன்றை பதிவுசெய்து, அந்த டீக்கடை உரிமையாளரை கைதுசெய்து

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது காவல் துறை. அந்த நீதிமன்றத்தில் நீதிபதிக்கே நீதிபோதனை செய்ததோடு அல்லாமல் “போலிஸ்காரய்யா இந்த நீதிபதிமேல கேஸ்போடுங்க!” என சொல் லியுள்ளார். இது கற்பனைக் கதையா அல்ல‍து நிஜக்கதையா என்பது தெரியாது. இதோ அந்த கதை

சிந்திக்கவைத்த பதிவு!

நீதிபதி:

உங்கள் கடையில் இரட்டை டம்ளர் முறை உள்ளதா?

டீக்கடை உரிமையாளர் புகழ்மணி:
நிறைய டம்ளர் இருக்குங்கய்யா.
நீதிபதி:
அதில்லை தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு என தனியாகவும் ஆதிக்க சக்தி மக்களுக்கும் என தனி தனி டம்ளர்ல கொடுப்பீங்களா?
புகழ்மணி:

ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் வந்தா தனித்தனியா டம்ளர்லாதான் கொடுப்பேங்க.

நீதிபதி:
அது தீண்டாமை சட்டப்படி குற்றம்னு தெரியாதா?
புகழ்மணி:

அய்யா ஒரே டம்ளரில் ரண்டு பேருக்கும் கொடுத்தா எப்படிங்கையா குடிப்பாங்க?

நீதிபதி:

வேண்டுமென்றே குழப்புகிறீர்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி டம்ளர் வச்சிருக்கீரீர்களா?

புகழ்மணி:

அய்யா நான்சொந்தமா முதல்போட்டு கடைவச்சிருக்கேன். என்கடையில் வியாபாரம் எப்படி பண்ணுவது என்பது என் விருப்பம். நான் வித்தியாச மா ரண்டு டம்ளர்ல கொடுக்கரது அவங்களுக்கு அவமானம்னா வேற கடைக்கு போலாமே, என்னை இப்படித்தான் கொடுக்கனும்னு சொல்ல இவங்க யாரு?

நீதிபதி:
குற்றத்தை ஒப்புக்கொண்டதால் தண்டனை விதிக்கிறேன்.
புகழ்மணி:

சரிங்கையா,எனக்கு அவசரமா பாத்ரூம் போகனும் உங்க பாத் ரூம்க்கு போகட்டுங்களா?

நீதிபதி:

அங்கெல்லாம் போகக்கூடாது. பப்ளிக்நு தனியா இருக்கு அங்கதான் போகனும்.

புகழ்மணி:
இங்க மட்டும் எதுக்கு ரண்டு பாத்ரூம். அப்ப நாங்க தீண்ட தகாதவங்களா?
போலீஸ்காரய்யா இந்த நீதிபதிமேல கேஸ் போடுங்க.
=> பயில்வான் ரங்கநாதன் , முகநூல்

 
 
 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: