Wednesday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

POWER OF ATTORNEY-ஐ ரத்து செய்யாமல், உரிமையாளர் சொத்தினை வேறொருவருக்கு விற்பனை செய்ய‍லாமா?

POWER OF ATTORNEY-ஐ ரத்து செய்யாமல், உரிமையாளர் சொத்தினை வேறொருவருக்கு விற்பனை செய்ய‍லாமா?

POWER OF ATTORNEY-ஐ ரத்து செய்யாமல், உரிமையாளர் சொத்தினை வேறொருவருக்கு விற்பனை செய்ய‍லாமா?

நில உரிமையாளருக்குச் சொந்தமான ஒரு சொத்தினை விற்பனை செய் வதற்காக ஒருவரை  தனது Power Agent முகவராக 

நியமித்து பொது அதிகாரப்பத்திரம் (Power of Attorney எழுதி பதிவு செய்திருந்தாலும், தனது முகவர் (Agent) மூலமாக இல்லாமல் உரிமையாளர், தானேநேரில் அச்சொத்தை வேறு ஒருவருக்கு விற்பனைசெய்யவும், விற்பனைப் பத்திரப்பதிவு செய்யவும் உரிமையாளருக்கு சட்டப்படி உரிமை உள்ளது. நிலஉரிமையாளர், விற்பனைப்பத்திரம் எழுதிப்பதிவு செய்து கொடுத்து, மேற்படிசொத்தை வேரொருவருக்கு விற்பனை செய்துள்ள நிலையில் அச்சொத்தினை வாங்கியவர், அனுபவித்துவரும் நிலையில், நில உரிமையாளரின் முகவரு(Agent)க்கு சொத்தினை மீண்டும் வேறுயாருக்கும் விற்பனை செய்ய சட்டப்படி அதிகாரம் இல்லை. ஆகையால் அவர், நில உரிமையாள ரின் முகவர் என்ற நிலையில் வேறு யாருக்காவது கிரையம் எழுதி பதிவுசெய்து கொடுத்த கிரையப்பத்திரம் சட்டப்படி செல்லாது. அந்த நிலம், சொத்து உரிமையாள ரிடமிருந்து நேரடியாக சொத்தினை வாங்கியவருக்கே சட்டப்படி உரிமை யானது.

=> இந்து விஸ்வநாதன், சட்ட‍ வல்லுநர்

Leave a Reply